Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, April 18, 2012

கடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழியும் மாணவ சமுதாயம்





கடலூர் : அகிலன்.K (KSEC )

        எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
 

       நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி மாணவ, மாணவிகளுக்கு கவி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதி பள்ளிக்குச் செலும் மாணவ, மாணவிகளுக்கு கவியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட நற்பண்புகளும் போதிக்கப்படுகிறது. ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கி வந்த கவிச் சாலைகள் இன்று பவேறு காரணங்களா மாணவர்களை தேர்வி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் தொழிற்சாலையாக இயங்கி வருகிறது.
 

      இதன் காரணமாக ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான உறவு மெல்ல, மெல்ல மறைந்து வருவதா இன்றைய மாணவ சமுதாயத்தி ஒழுங்கீனச் செயகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தகவ தொடர்பு சாதனமாக "மொபை போன்' வருகைக்கு பின் மாணவ சமுதாயம் சீரழிந்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தி கொண்டே கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய பள்ளிக் கவித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, பள்ளிகளி ஆசிரியர் உள்ளிட்ட எவரும் மொபை போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.


      இருப்பினும் இந்த உத்தரவு பெரும்பாலான பள்ளிகளி நடைமுறைப்படுத்தவிலை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பலர் மொபை போன்களை பள்ளிக்கு எடுத்து வருவதோடு மட்டுமலாம வகுப்பறையிலேயே தனது சக நண்பர்களோடு வீடியோ கேம் விளையாடுவது.
பிற நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., என்கிற குறுந்தகவ அனுப்புவது. சக தோழிகளிடம் வெகு நேரம் போனி உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாபார போட்டியை சமாளிக்க மொபை போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் சிறப்பு சலுகைகள் மாணவர்களுக்கு வசதியாக அமைகிறது. தற்போது இணையதளம் வசதி கொண்டுள்ள மொபை போன்களி இணையதள இணைப்பு பெறுவதற்கான "ரீசார்ஜ்' கூப்பன் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இந்த கூப்பனை வாங்கி சார்ஜ் செய்தா 24 மணி நேரத்திற்கு இணையதள இணைப்பு கிடைக்கிறது.

           இவ்வாறு பல மாணவர்கள், தங்களது மொபை போன்களி இணையதள இணைப்பைப் பெற்று பள்ளிகளி தங்களது சக நண்பர்களுடன் கூடி ஆபாச படங்களை பார்த்து மகிழ்கின்றனர். இதனைத் தடுக்க முயலும் ஆசிரியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுவது அல்லது ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற செயகளி ஈடுபடுவதா ஆசிரியர்களும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செவதா மாணவ சமுதாயம் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
 

      இதனைத் தடுத்திட பள்ளிகளி மொபை போன்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதனையும் மீறி மாணவர்கள் மொபை போன் கொண்டு வந்தா, அதனை பறிமுத செய்து அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை நேரி அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்களிடம் மொபை போன்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


நன்றி அகிலன் ';விக்னேஷ் 

Saturday, April 7, 2012

கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்,,,,,,,,,,


கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.
தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்'  பச்சிளம் குழந்தைகள் தின வாடகைக்கு கிடைக்கும் என, விளம்பரம் ஒன்றுதான் இல்லை அந்தளவுக்கு “பிச்சை பிசினஸ்” கொடிக்கட்டிப்பறக்கிறது. கோவையில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்க பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள் மட்டுமே கையேந்தி வந்தனர். தற்போது, இளம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள்கூட ரோட்டில் ஆங்காங்கு அமர்ந்தும் வழிபாட்டு தலங்களில் அமர்ந்தும் பிச்சை எடுப்பதையும் தாராளமாக காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தற்போது பச்சிளம் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தி வருகிறது சில  கும்பல். கோவையில் முகாமிட்டிருக்கும் வடமாநில பெண்கள் சிலர், கையில் பச்சிளம் குழந்தைகளுடன் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று, சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் ரத்த காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாக காணும் வகையில் காயங்களும் உள்ளன.குழந்தைகளை பார்க்கும் பலரும் நோட்டுகளை கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இம்முறையில்  ஒவ்வொரு பெண்ணுக்கும் தினசரி சுமார் 500 ரூபாய் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பார்ப்போர் பரிதாபப்பட வேண்டுமே என்பதற்காக குழந்தைகளுக்கு செயற்கையான காயத்தை ஏற்படுத்துவதாகவும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை காவல்துறையில் யாரும் புகார் தர முன்வரவில்லை.
மேலும் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கும் விடப்படுகின்றனர். கோவை மாநகரில் காந்தி புரம், பார்க் கேட், வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம், சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமா நிலத்தவர்கள் அதிகளவில் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இங்குள்ள பல பெண்கள் தங்களது குழந்தைகளை, பிச்சை எடுக்கும் பெண்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதாகவும், அதற்கு கூலியாக 50 ரூபாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய தண்டனை சட்டப்படி பிச்சை எடுப்பது குற்றமாகும். இச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனினும், இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால்,"பிச்சை எடுத்தல் தடைச்சட்டத்தை' அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிர முனைப்பு காட்டுவதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து மாநகராட்சி, அரசு காப்பகங்களில் அடைத்தாலும் தப்பி யோடிவிடுகின்றனர். இதனால்  காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இருப்பினும், குழந்தைகளை வாடகைக்கு விடுவதும், பிச்சை எடுக்க வைப்பதும், காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவதும் கொடூரமான குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களை தடுக்கவாவது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?



முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்),சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர் சோப்,சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது. அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள். சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று,வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள்.
கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள்,நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி,நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம். நம்முடைய உடல் இங்கு இருக்கும்; ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும். தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார். அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.
விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.
மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும். உலகத்தில்,வளைகுடா நாடானது சர்க்கரை வியாதிகள் பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற அறிக்கையினை துபையிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையானது வெளியிட்டு இருந்தது.
வளைகுடாவில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது.முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வளைகுடாவில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.
விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே,  பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.
பச்சைக் காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ள பலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும்.ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன. நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வளைகுடாவாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும்.செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும் போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.
விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில். படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த.என்ன வாழ்க்கை இது?
வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு, சம்பளத்தினைச் சரியாக கொடுப்பது இல்லை. ஆறு மாதமோ ஏழு மாதமோ சம்பளம் கொடுக்காமல் இழுத்து அடிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதியினையும் செய்வதில்லை என்ற புகாரும் வருவதாக வளைகுடா பத்திரிகைகள் நமக்கு தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் பல அடிப்படை தொழிலாளர்களுக்கு ஊரில் பேசப்பட்ட சம்பளத்தொகையும் இங்கு வந்தபின் கொடுக்கப் படும் சம்பளத்தொகையும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும். அந்தக் குறைந்த சம்பளமும் பல மாதங்கள் கிடைக்காத இக்கட்டான சூழலில், குடும்பப் பசியைத் தீர்ப்பதற்காக வளைகுடாவுக்கு வந்தவர்கள், தன் பசிக்கு உணவு தேடிக் கொள்ள வேறு நிறுவனத்திடம் அவர்கள் ஓடிப்போய் வேலை செய்கிறார்கள்.
அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை என்று எதுவும் கையில் இருக்காது. ஆனால் தைரியமாக வேறு நிறுவனத்திடம் போய் வேலை செய்வார்கள். அங்கும் இதுபோல் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தகாத குற்றச் செயல்களில் ஈடுப்படுகிறார்கள். அண்மைக் காலமாக துபையிலும் மற்றும் உள்ள வளைகுடா நாடுகளிலும் பல குற்றங்களும் தகாத சம்பவங்களும் நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.
இதனைக் கருத்தில் கொண்ட துபைய் அரசாங்கமானது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்று ஆய்வு செய்து, அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்த நிறுவனத்திலிருந்து 'ஓடிப் போய்' வேலை செய்பவர்கள் என்று அறிக்கையினை வெளியிட்டது.ஆகையால், 'ஓடிப் போனவர்கள்' உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கையினை ஓடிப் போன தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக எடுக்கப்படும் என்ற அரசு அறிக்கை வெளியானவுடன் 'ஓடிப் போன' பலர் தாயகம் திரும்பி விட்டனர். 23.9.2007 தேதிவரை துபையில் 152,375 'ஓடிப் போன' தொழிலாளர்களுக்கு அவுட்பாஸ் கொடுத்து உள்ளனர். ஒரு சில தொண்டு நிறுவனங்களும் துபையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் தாய் நாடு திரும்பி செல்வதற்கு ஏதுவாகச் சில விமானங்களை வாடகைக்கு எடுத்து அந்தத் தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.
குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில். பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.
கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில். என்ன கொடுமை?உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா.






ஈழத்தில் தமிழினத்தை அழித்த இலங்கை அரசின் போர் குற்றத்தை கண்டித்து ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி ஈழ தமிழினத்துக்கோ அல்லது தாய் தமிழர்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சொன்னால் அது பொய். மாறி வரும் உலக கூ+ழலில் அமெரிக்காவின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்மானத்தை அமெரிக்க கொண்டு வர சிறு ஒரு தூண்டுகோளாக இருந்தவர்கள் மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள். 

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதுக்கு பின்னாலும், இதன் வெற்றிக்கு பின்னாலும் இருப்பது உலக நாடுகளின் அரசியல். 

இரண்டாம் உலக போருக்கு பின் நாட்டாமை நீயா? நானா? என்ற போட்டி அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் இருந்து வந்தது. 1990ல் ஒருங்கிணைந்த ரஷ்யாவை மற்றொரு கம்யூனிச தேசமான சீனா உதவியுடன் அமெரிக்கா சின்னாபின்னமாக்கியது. அதன்பின் உலகின் நாட்டாமை பதவியை அமெரிக்கா கைப்பற்றியது. அந்த பதவியை விட்டு தராமலும் யாரும் அதற்கு போட்டிக்கு வராமலும் பார்த்துக்கொண்டது. 

இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியாகவும், இராணவ ரீதியாகவும் பலம் வாய்ந்த நாடு அமெரிக்கா. அவர்களுக்கு ஏற்றாறல்போல் உலகின் மற்ற நாடுகள் இயங்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள் அதற்கு ஏற்றாற்போல் பிற நாடுகளும் நடந்தும் வருகிறார்கள். ஆனால் 2000க்கு பின் அதில் மாற்றம். அமெரிக்காவின் நாட்டாமை பதவியை பிடிக்க முயல்கிறது செஞ்சீனா. 

ஆரம்பத்தில் சீனாவின் எண்ணத்தை பெரியதாக கண்டுக்கொள்ளாத அமெரிக்கா கொஞ்சம் தாமதமாகவே அதன் வேகத்தை கண்டு சுதகரித்துக்கொண்டது. பொருளாதாரத்தில் சூப்பர் பவர் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் அதேநேரத்தில் இராணுவ ரீதியாகவும் அதன் வேகம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது. 

தனது பொருளாதார வளர்ச்சிக்காக ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது சீனா. அங்குள்ள கச்சா பொருட்கள், மூலப்பொருட்கள் சீனாவுக்கு தேவை. அதற்காகவே அங்கு அதிக முதலீடுகளை செய்துள்ளன. முத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக தன் நாட்டுக்கு கொண்டு வர முத்துமாலை என்ற திட்டத்தை வகுத்தது. அதன்படி எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, நேபாளம், மியான்மார், பூட்டான், தாய்லாந்து, நாடுகளோடு உறவுகளை பலமாக அமைக்க தொடங்கியது. தாமதமாக இதனை உணர்ந்த ( அப்போதும் இந்தியா மங்குணியாக தான் இருந்தது) அமெரிக்கா தனது கழுகு பார்வையை கூர்மையாக்கியபோது, இந்த முத்துமாலை என்ற திட்டம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு என்றும் தனது முதலீடுகளை பாதுகாக்க என சீனா சொன்னாலும் அதனை அமெரிக்கா நம்பவில்லை. காரணம், சீனாவின் உள் எண்ணம் இராணுவ ரீதியாக கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறது என்பதை உணர்ந்ததால் தான். 

முத்துமாலை திட்டம் முழுமை பெற்றால், மேற்கத்திய நாடுகளின் வணிக கப்பல்கள், விமானங்கள் கிழக்கு பகுதிக்கு வருவதை சுலபமாக கண்காணிக்க முடியும், போர்காலங்களில் அவர்களை சுலபமாக வீழ்த்த முடியும் என்பதால் தான் சீனா இந்த முடிவுக்கு வந்தது. இதனைத்தான் தாமதமாக உணர்ந்தது அமெரிக்கா. முத்துமாலை திட்டத்தை உடைக்க திட்டம் தயாரித்தது. 


ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருந்தது சீனா. கடைசியில் இந்தியாவின் பிடியில் இருந்த இலங்கையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர சீனா விரும்பியது. இதிலும் விட்டுவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்தது அமெரிக்கா. மங்குணிகளால் ஆளப்படும் இந்தியா தாமதமாகவே தீவிரத்தை உணர்ந்து களத்தில் இறங்கியது. இலங்கை தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதை இழந்தால் நம்மை சுலபமாக சீனா அழித்து விடும் என கணக்கிட்டது இந்தியா. 

இலங்கையில் தங்களது அதிகாரத்தை பரவலாக்க இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் போட்டியிட துவங்கின. இதனைத்தான் சரியாக பயன்படுத்திக்கொண்ட இலங்கையின் இராஜபக்சே அரசு, என் நாட்டில் இடம் வேண்டுமா புலிகளை அழிக்க ஆயுதம் தாங்கள் என கேட்டது. சீனா வாரி வாரி தந்தது, இரஷ்யாவும் தந்தன. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியாவும் வாரி வழங்கின. அமெரிக்காவும் வாரி வழங்கின. நாசகார இன அழிப்பு முடிந்ததும் இலங்கை தன் பாசத்தை சீனா மீது மட்டும் காட்ட துவங்கின. 


அமெரிக்கா, இந்தியா போன்றவை மிரட்டி பார்த்தும் இலங்கை அசரவில்லை. முத்துமாலை திட்டத்துக்கு கைகுலுக்கி அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்ததே தவிர இவர்களை மதிக்கவில்லை அதனால் தான் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வர அதை இந்தியாவும் ஆதரித்து இலங்கைக்கு தன் கோபத்தை காட்டியுள்ளது. 

ஏற்கனவே முத்துமாலை திட்டத்துக்கு உதவக்கூடாது என மறைமுகமாக பாகிஸ்தானை அமெரிக்கா மிரட்டி வருகிறது. எகிப்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது, மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவும் தன் பங்குக்கு விளையாட தொடங்கியுள்ளது. முத்துமாலை திட்டத்தை உடைக்க, சீனாவின் நாட்டாமை கனவை தகர்க்க மேற்கத்திய நாடுகளோடு இந்தியாவும் போராட தொடங்கியுள்ளன. 

இனி வரும் உலகம்


இனி வரும் உலகம் என்னும் தொகுப்பில் தந்தை பெரியார் கூறியுள்ள செய்திகள் .வரும் காலம் எப்படி இருக்கும் என்பது  குறித்த அவரின் அறிவுப் பார்வை இதன் முதல் பதிப்பு 1944


* மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் அனுபவிப்புக்கும் இன்றுள்ள உழைப்புகள் கஷ்டங்கள் கட்டுகாவல்கள் இருக்காது .


*வாழ்வுக்காக எப்படி உழைப்பது என்கின்ற கவலையும் முயற்சியும் மிக சிறிய அளவிற்கு வந்துவிடும்


*சரீரத்தால் செயப்பட வேண்டிய எல்லாக் காரியமும் அனேகமாக இயந்திரங்களாலேயே செய்து முடிக்கப்படும்


*கம்பியில்லா தந்தி  சாதனம் ஒவ்வ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்


* உருவத்தை தந்தியில் அனுப்பும் சாதனம் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக்கொள்ளத்தக்க வசதி ஏற்படும்


*அதன் மூலம் கல்வி கற்று  கொடுப்பதும் சாத்தியப்படும்


*உணவுகளுக்கு பயன்படும்படியாக உணவு சத்து பொருள்களாக சிறு குப்பியில்
கிடைக்கும்


*பிள்ளை பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது நீக்கப்படலாம் வீரியத்தை இன்ஜெச்ஷனில் எடுத்து பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்க செய்யப்படும்


*பெட்ரோலுக்கு பதிலாக மின்சாரம் பயன்படும்


*அறிவியல் வாழ்க்கை இன்பம் அனுபவிக்க பயன்படும்படியான அதிசிய பொருள்களும் கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவரின் இலாபமாக முடங்காமல் சகல மக்களும் சௌகர்யம் தரும் பொது சாதனமாக அமையும்


என் பார்வை:


         மக்கள்    யாரோ எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள் . சுய சிந்தனையோடு செயல்படுவார்கள் என்பது போன்ற அவரின் சில எதிர்பார்புகள் பொய்த்துவிட்டது
கடவுள் மறுப்பு என்ற ஒரு தளத்தை தவிர அவர் இயங்கிய மற்ற தளங்கள் குறித்த எந்த பதிவுகளுமே மக்களை சென்றடையவில்லை . அவரின் மற்ற சமூக போராட்டங்கள் குறித்த தகவல்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும்