தமிழினம் தன் மானம் ,,,,,,
Monday, July 16, 2012
தமிழக இளைஞர்களுக்கு… -சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னுடைய சீடர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இவை:
1. சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும். அறிவாற்றலும் தூய்மையும் மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள். நாம் இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்.
2. சென்னையைப் பற்றி எனக்கு எப்போதுமே மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவையே மூழ்கடிக்க இருக்கும் மிகவும் பெரிய ஓர் ஆன்மிகப் பேரலை, சென்னையிலிருந்தே கிளம்பி வரப் போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது.
3. சுயநலமற்றவர்களாகவும், முழு ஆற்றலையும் கொண்டு தேச முன்னேற்றத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் – உயிர் போகும்வரையிலும் பாடுபடத் தயாராக இருப்பவர் களாகவும் உள்ள எத்தனை பேரை சென்னை தந்துதவ தயாராக இருக்கிறது?
4. எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே தைரியமுள்ள என் இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள்!
சென்னை மக்களாகிய உங்களிடம் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
சென்னை மக்களாகிய உங்களிடம் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
5. நீங்கள் உண்மையில் என் குழைந்தைகள் என்றால், எதற்கும் பயப்படமாட்டீர்கள். சிங்கங்கலாகத் திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும்.கோழைத்தனம் கூடவே கூடாது.
உயிரே போவதானாலும் நேர்மையுடன் இருங்கள்.
உயிரே போவதானாலும் நேர்மையுடன் இருங்கள்.
6. நமது நாட்டிற்கு வீரர்களே தேவைப்படுகிறார்கள். வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கை எல்லாம் சென்னையிடமே இருக்கிறது. தாங்கள் பணியைத் செய்து முடிப்பதற்கு நெருப்பில் குதிக்க வேண்டியது அவசியமானால், அப்படியே செய்வதற்கும் என் குழைந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.
7.தைரியம் மிக்க என் இளைஞர்களே! நீங்கள் அனைவரும் மத்தான காரியங்களைச் சாதிப்பதற்குப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்.
8. வாழ்நாள் குறுகியது. ஒரு பெரிய காரியத்தின் பொருட்டு அதைத் தியாகம் செய்துவிடுங்கள்! நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு வேலை செய்யுங்கள்! வேலை செய்யுங்கள்!
Monday, July 9, 2012
நட்புக்கில்லை எல்லை......வெண் மேகம் போல வெள்ளை....விக்னேஷ்.
நட்புக்கில்லை எல்லை ...
வெண் மேகம் போல வெள்ளை
நீ வந்த பின்னே வான்மழை....
கையோடு கை சேர்த்து....
உன் தோலில் தலை சாய்த்து.....
நான் போகும் இடம் சொர்க்கமே...... அட வானம் வெகு தூரமே......
நம் நடப்பை பற்றி பேசுமே ..... விக்னேஷ் (உலகத்தமிழர் நெட்வொர்க்)
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சேர்ந்த சரண்யா, தனது உடல் உறுப்புகளை 7 பேருக்கு வழங்கி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார். ''மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்கிறாள்'' என்று சரண்யா தந்தை கூறுகிறார்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்த கே.மணியன் - கலாமணி தம்பதியரின் மூத்த மகள் சரண்யா. சிறுவயது முதலே படிப்பில் சுட்டி சரண்யா. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தார். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தார்.
21 வயதான சரண்யா, பி.இ. எலெக்டிரிக்கல் படித்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதிதான் தேர்வு முடிவு வந்துள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சரண்யா,தனது உறவினர்கள், தோழிகள் 5 பேருடன் சேலத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு காரில் கோவை திரும்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சரண்யா வந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தசரண்யாவும், தோழி பானுப்பிரியாவும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரண்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தந்தையிடம் கூறிவிட்டனர்.
தான் வளர்த்த மகள் இறந்து போகும் நிலையில் உள்ள சோகம் ஒருபுறம் இதயத்தை கனக்க வைத்தாலும், மகளின் உடல் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு தானம் செய்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும், அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த தந்தை மணியன், மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சரண்யாவின் ஈரல், இருதய வால்வு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதோடு, இரண்டு நோயாளிகள் சரண்யாவால் வாழ்வு பெற்றனர்.
சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டோடு, இரண்டு பேருக்கு கண்கள் பொருத்தப்பட்டது.சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை, கோவையில் உள்ள 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். சரண்யாவின் உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச்செல்வதை பார்த்த மணியன், அவருடைய மனைவி கலாமணி, தங்கை அர்ச்சனா கண்கலங்கியபடி அனுப்பி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியது.
சரண்யாவின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கே.எம்.சி.எச். மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூறினார்.
''ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்'' என்று தந்தை மணியன் கூறியுள்ளார்.
மகளை இழந்த வேதனையிலும், உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்துவிடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள்'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் மணியன்.
விபத்தில் கோவையை சேர்ந்த மாணவி சாலினா, ஓட்டுநர் செந்தில்குமார், மாணவர்கள் ஆனந்தகுமார், கோகுல் பிரபு ஆகியோர் இறந்தனர். இவர்களில் மாணவி சாலினா, மூளைச்சாவு ஏற்பட்ட சரண்யாவின் தோழி. அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்த இருவரும் எல்.கே.ஜி. முதல் பொறியியல் படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள். பொறியியல் படிப்பில் இருவரும் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தனர்.
சென்னை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் தேர்வு பெற்று ஆண்டிற்கு ரூ.3.56 லட்சம் ஊதியத்தில் பணியாற்றுவதற்காக காத்திருந்தனர். கடந்த 30ஆம் தேதி மாணவி சாலினா இறந்து போனார். நேற்று சரண்யா இறந்து போனார்.
சரண்யா இறக்கவில்லை, 7 பேருக்கு தனது உடல் உறுப்புகளை தானம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
ஒரு நாள் வாழ்ந்தாளும் இவர்களை போல் வாழனும் ,,,,,,விக்னேஷ்
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை.......விக்கி
உலகத்தமிழர் பதிவு--விக்கி
முதலில் அரசு இந்த செய்தியை அலசுமா ......விக்னேஷ் ,,
ஐந்து வருடங்களுக்கு முன் பொறியியற் கல்லூரிகள் அது அமைந்திருந்த மாவட்டத்தில் இருந்த அல்லது அதன் அருகில் இருந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த வேளையில் 2005ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை சீராக்குகிறோம் என்று அறை கூவல் விடுத்தும் மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டும் அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.
அப்போது தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதே உண்மை. மிகுந்த எதிர்ப்பார்ப்போடு 2005ல் நிறைய புதுக் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்துக் கல்லூரிகளையும் இணைக்கப்பட்ட புதிதில் அதாவது 2005ல் எதிர்ப்பார்க்கப்பட்ட தரம் இல்லாவிட்டாலும் ஓரளவு சொல்லிக் கொள்ளக்கூடிய தரத்தோடு விளங்கியது. இது 2005ல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படித்த மாணவர்களிடம் கேட்டால் தெரியும். தரம் என்று நான் குறிப்பிடுவது கேள்வித்தாள் கேட்கும் முறை, விடைத்தாள் திருத்தும் முறை, தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளிவிடுவது. இதில் நான் பாடத்தை நடத்தும் முறையைக் கூறாதது ஏனெனில் மேற்கூறப்பட்ட அனைத்தும் தரத்தோடு இருந்து விட்டால் பாடத்தை நடத்தும் முறை தரத்தோடு இருந்தே ஆக வேண்டும். வருடங்கள் ஆக ஆக பல்கலைக்கழகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே வந்தது. இடையில் அரசியல் பிரமுகர்கள் பினாமி பெயரில் பலக் கல்லூரிகளை முளைக்கச் செய்தனர். ஓரளவு தரத்தோடு இருந்த காரணத்தினால் அதிகமான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர். அளவுக்கு அதிகமான கல்லூரிகளும் அதிகளவிலான தோல்வி அடைந்த மாணவர்களின் பதிவையும் சரிவர மேலாண் செய்யத் தெரியாத காரணத்தினால் கேள்வித்தாள் கேட்கும் முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறையில் இருந்த தரத்தை சிறிது தளர்த்தியது. இந்த தளர்த்தலினால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது என்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் தேர்வில் தேறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தரத்தை தளர்த்துவது முட்டாள்தனமாக இல்லையா?
தொழில்நுட்பத்தின் உச்சியில் இருக்கும் யுகத்தில் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமே இப்படி செய்யலாமா?
பின்பு மீண்டும் புதிதாக துவக்கப்பட்ட கல்லூரிகளாலும் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையாலும் தனது தரத்தை மேலும் தளர்த்தியது இப்பல்கலைக்கழகம். ஒரு சமயத்தில் 75% முதல் மதிப்பெண்ணாக அறிவித்த இப்பல்கலைக்கழகம் இன்று 85% என்பது சராசரி மதிப்பெண். ஒரு காலத்தில், அதாவது 2005 2006ல், 80% என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதே பல்கலைக்கழகத்தில் இன்று 95% பெறுவது என்பது ஒன்றும் கடினமல்ல. அப்போது தான் ஒரு முக்கியமான விஷயம் எனக்கு புலப்பட்டது. வெறும் மூன்று மணி நேரத்தேர்வில் ஒருவனின் அறிவை சோதித்து விட முடியாது என்பதே அது.
95% பெற்ற அனைவரும் அறிவாளிகளும் அல்ல!!!
75% பெற்ற அனைவரும் முட்டாள்களும் அல்ல!!!
உலகத்தரம் உலகத்தரம் என்று அனைவரும் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப நூற்றாண்டில் இந்தியத் தரத்தைக் கூட இப்பல்கலைக்கழகம் அடையாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
நிலைமை இவ்வாறிருக்க, இப்பல்கலைக்கழகமோ மீண்டும் தமிழ்நாட்டின் பழைய நிலைமைக்கே கொண்டு செல்வதாக அறிவித்தது. அதன் பலன் தான்
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி
அண்ணா பல்கலைக்கழகம் - கோவை
அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி
இன்னும் பல வருங்காலத்தில் வரும்.
இப்படி மண்டலம் வாரியாக பிரிப்பதற்காகவா மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டு அனைத்துக் கல்லூரிகளையும் 2005ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்துக் கொண்டது(Divide and Conquer wins here).
அடுத்தது இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முரையிலும் தரத்தைத் தளர்த்திய போது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டை நோக்கி கவனித்தது. நான் சொல்வது நுழைவுத்தேர்வைப் பற்றித் தான். 2007 வரை இருந்த நுழைவுத்தேர்வு அதன் பிறகு இல்லை என அறிவித்தது தமிழக அரசு. இதையே இந்த அரசின் சாதனை என்றும் கூறப்பட்டது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அப்படியெனில் கிராமங்களில் கல்வி நிலையில் தொய்வு இருப்பதை அரசே ஏற்றுக் கொள்கிறது. நிலைமை இப்படியிருந்தால் கிராம மாணவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கச் செய்வதா அல்லது நுழைவுத் தேர்வை ரத்து செய்வது என்பது சரியான முறையா? நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் அவ்விருவருக்கும் இடையே இருக்கும் அறிவு இடைவெளி நீங்கி விடுமா?
அண்ணா பல்கலைக்கழகம் ஓரளவு தரத்தோடு விளங்கிய காலத்தில், 2005 2006 2007ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பல்கலையோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தத்தம் நிறுவனத்திற்கு மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை ஆணையையும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. இன்று அந்த நிலைமை மாறியிருப்பது (2008, 2009ல் வெளிவந்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது) வெறும் பொருளாதார மந்த்/தொய்வு நிலையால் என்று மட்டும் கூறி நம் முகத்தில் நாமே சாயம் பூசிக் கொண்டிருக்காமல் இதற்கு ஒரு பகுத்தறிவு மிகுந்த தொலைநோக்கு சிந்தனை தேவை.
வெறும் பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கும் கல்லூரியாக இல்லாமல் சுய தொழில் தொடங்க பயிற்சி மற்றும் தைரியம் அளிக்கும் பல்கலைக்கழகமாக இது மாற வேண்டும் என்பதே பலருடைய ஆசை. அப்போது தான் எத்தகைய பொருளாதார நிலையிலும் மற்ற நாடுகளோடு நாம் போட்டிப் போட முடியும்.
மொத்த உலகப் பொறியாளர்களில் 35% அதிகமாக உள்ள இந்தியப் பொறியாளர்கள் அமெரிக்கா செல்வதை தம் கனவாக வைத்திருக்கின்றனர். இதை மாற்றி மற்ற நாட்டுப் பொறியாளர்களை இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என விரும்பும் நிலை வர வேண்டும். இதனால் இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்தாலும் பரவாயில்லை. இந்த நிலை என்று வருகிறதோ அன்று தான் கல்வியில் உலகத்தரம்/வல்லரசு அடைந்து விட்டோம் என்று நாம் கூற முடியும். அப்போது அப்துல் கலாமின் கனவும் நனவாகி விடும். இக்கட்டுரை சாதனை நாயகன், அணு விஞ்ஞானி, எம் தலைவன் அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம்.
கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு இருந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா சரியா ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா?
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே!!!

Wednesday, July 4, 2012
என் குடும்பம் ஆ ஜெயிலுக்கு சென்றது....
என் குடும்பம் ஆ ஜெயிலுக்கு சென்றது,,,,தமிழ்னாட்டு மக்களும் தான் போனார்கள் ...இப்போ எந்த அரசியல்வாதிகளும் எங்களை குற்றம் சொல்ல் முடியாது---கருணாநிதி

கடைசியில் பொது மக்களிடம் தஞ்சம் புகும் தி.மு.க....
தி.மு.க, இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் நடிகை குஷ்பு , தயாநிதி, மாஜி அமைச்சர் ரகுமான்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.,,,,,,,,,
திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது......மு.க.ஸ்டாலின்!
''எத்தனை ஆண்டு சிறை என்பது பற்றி கவலையில்லை''

தமிழகம் முழுவதும் இன்று நடந்த தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர் ,,,,,,,
அண்ணா சொன்ன கொள்கை இப்படி ,,,,,
திண்டுக்கல்: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பானது
இந்த போரட்டத்தில் சில அமைச்சர்கள் மிஸ்ஸீங்,,,,,,
முருகன்...கிரி....வழுதி,,,,
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேறும்...
இந்த நாட்டின் உள்ள எழைகளின் வாழ்வு என்னாகும்,,,,
சிறை சென்ற எல்லாறும் நாட்டிற்க்கு உழைத்த புண்ணியவான்கள்,,,
நாளைய வரலாறு வரவேற்க்கிறது பதிவுகளை
உலகத்தமிழர் நெட்வொர்க் ·-------விக்கி
Subscribe to:
Posts (Atom)