Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 28, 2012

இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,

கடற்கரை அருகே காற்று வாங்க போனால் இரண்டு வருடம் சிறை ===இப்படியும் சொல்லுவாங்க போல 

இலங்கை சிங்களருக்கு ஒரு வேண்டுகோள்----

இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,

சென்னை:  கச்ச தீவு பகுதியில் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு;
கேள்வி: பிரேஸில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்தால் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து  நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார். இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முன்வர வேண்டும். 

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் கொழும்பை எச்சரிக்குமாறு டில்லிக்கு கூறுகிறார் ராமதாஸ்

சென்னை:  தமிழக அரசியல் தலைவர்களினதும் தமிழர்களினதும் தன்மானத்திற்கு சவால் விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதியும் அவரது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ், தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படுமென மத்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரிழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

இந்தியா கண்டனம் தெரிவிக்காததால் தான் தமிழகத் தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மூலம் இந்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டும்.

Friday, June 22, 2012

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்




கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது,,,,,,,
உலகத்தமிழர் நெட்வொர்க் 33

ஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்

ஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்



ஒவ்வொரு உயிரிலும் கடவுள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

மன உறுதியுடன் இருங்கள்
* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.
* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.

உண்மையான மகிழ்ச்சி
* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக
நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது
செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை
தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்
அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி
சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

உன்னைப் பற்றியே சிந்திக்காதே!
* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல
பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய
முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து
கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!
நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்
என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி
அவனிடமிருந்து வெளிப்படும்.
* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது
சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு
ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

மதத்தின் ரகசியம்
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

விருப்பங்கள் நிறைவேறும்
* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

அன்புதான் வாழ்க்கை
* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

* உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி
எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
* நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து,
ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.
* “சமயம்’ என்ற பெரிய கறவை மாடு பல முறை உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.
“முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்.

Monday, June 18, 2012

நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,,,,,,,விக்னேஷ்

இந்த கால அரசியல்வாதிகள் தன் மக்களுக்கு உழைத்ததை விட அவர்களின் குடும்பத்திற்கு உழைத்தது தான் அதிகம் ,,,,,,,அனால் இவரோ இந்தியா-வில் பிறந்தது நமக்கு பெருமை ,,,விவேகனந்தர் மறு பிறவி எடுத்த சான்று இவரை நமக்கு நினைவுபடுத்துகிறது,,,,,,,,,,,,?

இவரை நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,.

உலகத்தமிழர் நெட்வொர்க் வேண்டுகோள் ,,,,,,



இந்தியனை மிச்சம் வைக்க இந்த அரசியல் நடக்கிறதா ,,,,,,,


குழந்தை கூட கொஞ்சும் இந்த வெண்ணிற தாமரையை --


நம் நாட்டு குடியரசில் தலைநிமிர செய்ய எந்த ஒரு அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கதது வருத்தம் அளிக்கிறது ,,,,, 


பொக்ரான் அணு குண்டு புகழ்ந்தது இந்த புத்துணர்வு மனிதனை ,,,,



ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்




 அடுத்த ஜென்மம் எனக்கு இவர் ஆசிரியர் ஆக இருக்க கடவுளிடம் வரம் கேட்பேன் ,,,,,,,


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும்ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 151931ராமேஸ்வரம்இந்தியாவின்முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும்பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO),பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.





அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ளராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன்பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரானதனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைக்கப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டுப் பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

உலகத்தமிழர் விக்னேஷ் 
இந்த பதிவு இந்திய அரசை ஒரு இந்தியன் மண்டியிட்டு கேட்கும் வேண்டுகோள் ,,,,