தமிழினம் தன் மானம் ,,,,,,
Thursday, May 30, 2013
அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!....
நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை
>>>மகனும் தந்தையும்...
மகனுக்குத் தந்தைமேல் கோபம், அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை...
எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்...
‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.
‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ என்றபடி மீண்டும் கத்தினான்.
தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார்...
பிறகு மெதுவாய்ச் சிரித்தார். ‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க?’’.
தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்...
‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான்.
நானும் சொன்னேன்..ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக்கொண்டே இருந்தான்...
நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’
இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.
‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை...
மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது...!

>>>மகனின் ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்!

காலங்கள் பல கடந்தாலும், உலக மக்களின் நினைவில் ஆபிரஹாம் லிங்கன் இருக்க காரணம் அவரது ஆட்சித்திறமை மட்டும் காரணமல்ல. யாருக்கும் தீமை செய்யாமல், சட்டம் மற்றும் விதிகளை மீறாமல் அவர் நடந்து கொண்டதே. இதற்கு உதாரணமாக, தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதத்தை குறிப்பிடலாம். இதோ அந்த கடிதம்...
'அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களில் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அவனுக்கு பொறாமை குணம் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது, கோழைத்தனம் என்பதை புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குகற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்கு பயிற்சிகொடுங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுத்த வேண்டும். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம்.
தவறு கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...
இதில் உங்களுக்கு சாத்தியமான தையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

Friday, May 24, 2013
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ணசொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்தசெயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள் .
முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள் .
E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும்செய்யவும் .
இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்யசொல்லவும்
பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரைசொல்லாதிர்கள்.
தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.
உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்ககூடாது என சொல்லுங்கள்.
தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால்அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.
WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில்உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்
பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள். நீங்கள்அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது.
மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Cardஇரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்தஇடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள்,வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்............
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
Subscribe to:
Posts (Atom)