Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, March 16, 2012

ஒரு நிமிடம் யோசிச்சி பாருங்க ,,,,,தங்கச்சி ,,,,,,,,உங்க அப்பாவ......?;;;;;;;;;;விக்னேஷ்


ஒரு நிமிடம் யோசிச்சி பாருங்க ,,,,,தங்கச்சி ,,,,,,,,உங்க அப்பாவ......?-----------விக்னேஷ்
இந்த போஸ்ட் நான் போட காரணம் இருக்கு ,,,,,

ரன் படம் எல்லாம் பார்த்து இருப்பிங்க எல்லாம்,
மாதவன் ,மீரா ஜஸ்மின இழுத்திட்டு ஓடுவரு ,
,அத பார்த்த பாவி புள்ளைங்க ,,

இப்ப இங்க ava அப்பன் ஆத்தாவ vittu ஓடிபோகுதுங்க ,,,,,,,

ஏன்டி உனக்கும் அறிவு இல்லை 

உன் அப்பன் கஷ்டபடுறது இதுக்கு தானா,,,,

நீங்க எப்ப தான் திருந்த poringa ,,,,,,,,
              இல்ல 
நீங்க எப்ப da  திருந்த poringa ,,,,,,,,,,

லவ் பண்ண நினைச்சா போதாது ,,,,,,இத நான் சொல்ல காரணம் இருக்கு ,லவ் பண்ற பேர்ல izhuthukittu ஓடி உங்க அப்பன்  ஆத்தா பெர கேடுதிடாதிங்க ,,,,,,,அவுங்க உங்களை நம்பி இருக்காங்க ,,,அவுங்க வைத்துல மண்ணை வாரி போடதிங்க,,,,நாசமா போய்டுவிங்க ,,,இங்க நான் போட காரணம் இன்னைக்கு மதியம் ஒரு பையனும் பொன்னும் ஓடி போய்ட்ட விஷயம் கேட்டு தான் போடுறன் ,,,,

இது இழுத்திட்டு ஓடுற உங்களுக்கு அழகா இருக்கலாம் ,,,இல்ல ,,,,இது ஒரு புது பேஷன் சொல்லுவிங்க நீங்க ,,,,

அக்கால கவிஞர் பெருமக்கள் அவர்களின் உரைநடைக்காக தன் செய்யுல் பகுதியில் பாடலுக்காக ஒரு பெண்ணையும் ஆண்ணையும்சேர்த்து வைத்தார்கள் ,,,

ஆனால் அந்த நிகழ்வை நினைத்து இக்கால மக்கள் செய்வது சிரிப்பை எற்படுத்துகிறது,,,

ஆனால் அவர்கள் சொல்வது புதிய நாகரிகம் என்று,,,,,

ஆனால் அது உண்மை இல்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை,,,,

இந்த நாசம போன இந்த சினிமா செய்த வேலை ,,என்பது அவர்களூக்கு தெரியவில்லை,,,,,,,,,,,, ஏன்,

இந்த ரஜினி விஜய் சூர்யா அஜித் போன்றோர்களை நாடு கடத்துனா எல்லாம் சரி ஆகிடும்,,

இல்ல இந்த படம் எடுக்கும் புண்னியவான்களை உதைக்கனும்,,,,

அதை பார்த்த பாவி புள்ளைஙக இது மாதிரி செய்றங்க போல,,,,,,,,,

நான் ஒரு வரில சொல்றது என்ன தெரியுமா,,,

18 ல இருந்து 25 குல்ல வருவது காதல் இல்லை

உண்மையை சொன்ன காதல் எந்த வயசுலையும் வரும்,,,,


உண்மையா காதலிக்கிறவங்க சொல்ல்றது....

உண்மையா ல்வ் பண்றவங்க சொல்ல்றதும் இது தான்,,,,

அப்படி இல்லாம இழ்த்துகிட்டு ஒடி போய் 4 நாள் நல்லா இருப்பிங்க,அப்புரம் என்ன செய்விங்க யோசிச்சு பாருங்க,,,,,
 இப்ப எல்லாம் சொல்ல்றது ...(என் நண்பன் இருக்கான் பர்த்துப்பான்,,ஆனால் உன்மையாக சொல்ல போனால் 10 பெரை நம்பலாம்),,அதுக்கு மேல என்ன சொல்லவறன்னு உங்களூக்கு புரியும்,,,,இழுத்துகிட்டு ஒடும் போது ஒரு நிமிடம் யோசிச்சு பாருங்க,,

எல்லாரையும் நம்பி நாச்ம போறத விட உங்க அப்பன் ஆத்தா சொல்றத கேளுங்க,,


உன்மையா லவ் பண்ற ஒரு நண்பன் எனக்கும் இருக்கான் ,,அவன் பெரை சொல்ல விரும்பலை ஏன் தெரியுமா அவன் இத பார்த்து வர்த்தபடகூடாது அதனால தான்,,,


நல்ல லவ் பண்னினாங்க,,,,2 ம் நல்ல ஜோடி தான் இருவரும் ,,,ஒரு பிரிவு தான்,,ஆனாலும் என் நண்பன் சொன்ன ஒன்னு என்ன தெரியுமா,,அவங்க குடும்ப சுழ்னிலை மற்றும் அவன் முன்னேற்றம்,,அது தான் ,,,ஆனாலும் அவனக்கும் ஆசை தான்,,,
அவன் இஞ்ஜினியரிங் முடிச்சு நல்ல் வேலை இப்ப இருக்கான்,அந்த பொண்ணூ அப்பா அவளுக்கு கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க ,அவ 1000 தடவை போன் பண்ணி கூப்பிட்டு போக சொன்னா,,,,இவன் வேணாம் சொல்லிட்டான்,,,,,,அப்ப கூட நாங்கலும் இருந்தம்,,,,,அந்த பொண்ண தூக்கிட்டு வந்து கல்யாணம் பன்ன முடியும்,,,,,ஆனா இவன் சொன்னது,,,,,, அவுங்க அப்பா அம்மா என்ன பன்னுவாங்க நீங்க நினைச்சு பருங்கடா இது மாதிரி உங்க தங்கைச்சியை செஞ்சா என்ன பன்னுவிங்க சொல்லுங்க டா அப்ப்டி கேட்டான்,,செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது,,,,இருந்தா ல்வு பன்றவங்க இது மாதிரி இருக்கனும்,,,,,,,,,,,


இல்ல ல்வ் பன்னாம இருங்க உங்களை பெத்தவங்களுக்கு தெரியதா உங்களுக்கும் என்ன வேணும்னு,,,,,யோசிச்சி பாருங்க தோழி மற்றும் தோழர்களா,,,,,,,,,உங்க விக்கி (தப்பா சொன்னா மன்னிச்சிடுங்க)

Tuesday, March 13, 2012

சொந்த நாடு வரலாமா...?குப்புராஜ்,துபாய்  • வணக்கம் நான் சுமார் 14 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன் மனைவி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் இதுவரை நான் குடும்பத்தோடு நிரந்தரமாக வாழமுடியவில்லை வெளிநாட்டு வாழ்க்கை சலித்துவிட்டது குழந்தைகளோடு வாழ்வதற்கு ஆசைபடுகிறேன் சொந்த நாட்டிற்கு வந்து தொழில் செய்யவும் விரும்புகிறேன் ஆனால் என்ன தொழில் செய்வது என்று புரியவில்லை நான் நாடு வரலாமா? தொழில் செய்யலாமா? என்பதை தாங்கள் விளக்கமாக சொல்லவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

குப்புராஜ்,துபாய்

    திரைகடலோடியும் திரவியம் தேடு என்று நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு அதாவது கடல் தாண்டி போயாவது சம்பாதி நாலு காசு கையில் பாரு பெத்தவங்களை பிள்ளைகுட்டிகளை கண்கலங்காமல் பார்த்துக்க என்பது தான் இந்த பழமொழியின் உள்ளர்த்தம் ஆனால் கடல் தாண்டி போகும் போது ஒரு மனிதன் எவ்வளவு விதமான கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறான் என்பதை பார்த்தால் கல்லுபோல மனசும் ஒரு நிமிஷம் கண்ணீர் விடும்

அந்நிய பூமி அந்நிய மொழி அந்நிய பண்பாடு அந்நிய பழக்கவழக்கம் என்று எத்தனையோ அந்நிய தன்மைகளை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியம் அமைகிறது தாகம் எடுக்கும் போது ஒரு துளி தண்ணீரின் அருமை தெரியும் என்பது போல அந்நிய தேசத்திற்கு போனபிறகு தான் சொந்த நாட்டின் மகத்துவம் புரியும் அருமை தெரியும்

சில பேர் இருக்கிறார்கள் என்னோவோ தாங்கள் பிறந்தது எதற்கும் புண்ணியமில்லாத பூமி வாழ்வதற்கு அருகதை அற்ற தேசம் அதனால் அயல்நாட்டில் வாழ்வது தான் தங்களது தகுதிக்கி சரியானது என்று கருதுகிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மனைவி மக்களை அந்த நாட்டிற்கு அழைத்து செல்ல விரும்பாமல் நீங்கள் சொந்த நாட்டிற்கு வர நினைப்பது பாராட்டத்தக்க செயலாகும்

உங்கள் ஜாதகப்படி இப்போது நீங்கள் எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட தொழிலில் தான் இருக்க வேண்டும் அந்த தொழிலையே ஊருக்கு வந்து சிறிய அளவில் துவங்குங்கள் படிப்படியாக வளர்ந்து நல்ல நிலைக்கு தொழில் வந்துவிடும் நீங்கள் கைகட்டி வேலை செய்து சம்பளம் வாங்கும் நிலைமாறி சம்பளம் கொடுக்கும் நிலைக்கு கண்டிப்பாக வளர்வீர்கள்

2012 ஆம் ஆண்டு முடிந்த பிறகு தாய்நாடு திரும்புங்கள் பெரிய நகரங்களில் தொழில் ஆரம்பிக்க தேவையில்லை உங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரத்திலேயே துவங்குங்கள் நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

Monday, March 12, 2012

ஆண்களே! தைரியமாக அழுங்கள்!! ---விக்னேஷ்   திகமா சிரிக்கும் பெண்களையும் அழுகின்ற ஆண்களையும் நம்ப கூடாது என்று சொல்வார்கள் அதாவது இதன் அர்த்தம் என்னவென்றால் ஆண்கள் அழக்கூடாது அழுகை என்பது ஆண்களுக்கு இல்லை என்பதாகும் உண்மையில் ஆண்கள் அழக்கூடாதா? அழுதால் என்னவாகிவிடும்?

நமது பண்பாட்டில் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் போய்கேட்டாலும் கம்பீரத்தின் இலக்கணமாக ஆண்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள் விதிவிலக்காக ஆண் தன்மையுடைய பெண்களில் சிலர் கம்பீர வடிவாக காட்டபட்டாலும் அதிகமாக குறிப்பிடுவது ஆண்களை தான்

கம்பீரம் வீரம் போன்றவைகள் அழக்கூடாது அழுவது என்பது கோழைத்தனத்தின் அடையாளம் அஞ்சி நடுங்குபவர்கள் சோதனைகளை எதிரிகொள்ள முடியாதவர்கள் மட்டுமே அழ வேண்டுமென்று பொதுவான ஒரு நீயதி உலக முழுவதும் நடைமுறையில் இருக்கிறது இந்த நடைமுறை பழக்கம் இந்தியாவில் சற்று அதிகம் அதனால் தான் கோழைகளை நம்பாதே என்று சொல்வதற்காக அழுகின்ற ஆண்களை நம்பாதே என்று சொன்னார்கள்


எல்லாம் சரி அழுவது என்பது கோழைத்தனமா? அழுபவர்கள் அனைவரும் கோழைகளா? மனிதனாக பிறந்தவர்கள் அழாமல் இருக்க முடியுமா? முடியும் என்றால் அழுகின்ற உணர்ச்சியை ஆண்டவன் மனிதனுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்னை கேட்டால் அழுவது கோழைத்தனமல்ல திக்கு தெரியாத காட்டில் தன்னந்தனியாக தவிப்பவர்களுக்கு ஒற்றையடி பாதை வெளிச்சத்தை காட்டுவது போல் உணர்சிகளின் கொந்தளிப்பில் கிடந்தது உழலும் மனிதனுக்கு அழுகை என்பது தெளிவை காட்டும் ஞான வெளிச்சம் என்பேன்

கோழைதனத்தால் வருகின்ற அழுகை வேறு நயவஞ்சகத்தை மறைப்பதற்கு வடிக்கும் நீலி கண்ணீர் வேறு சோகத்தை தாங்க முடியாமல் வாய்விட்டு அலறி புலம்பும் அழுகை என்பது வேறு எனக்கொரு மகள் இருந்தாள் அவள் பூமியில் பிறந்தநாள் முதல் அவளை மண்ணில் நடக்க விடவில்லை நான் கைகளில் தாங்கினேன் அவளது ஒவ்வொரு சிரிப்பிற்கும் நான் ரத்த வேர்வை வடித்தாலும் அது எனக்கு சுகமாக இருந்தது அப்படி வளர்த்த அன்பு மகள் தன்னை எவனோ ஒருவன் காதலிக்கவில்லை என்று மரத்தில் கயிறு போட்டு தொங்கிவிட்டாள் இந்த நிலையில் நான் அழாமல் இருக்க முடியுமா? என்னை அழக்கூடாது என்று யாரும் தடை போட முடியுமா?

மரணத்தால் வருகின்ற இழப்புகளை தாங்க முடியாத துயரங்களை தாங்கி கொள்ள அழுகை என்பது அவசியம் ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் அழவில்லை என்றால் அவன் மனதில் எதோ ஒரு பாதிப்பு இருக்கிறது கண்ணீரால் நனைக்கபடாத துயரங்கள் மனதிற்குள் பெறுக பெறுக மனம் இறுக்கமாகிவிடும் நந்தவனத்தில் வாழ்ந்தாலும் இனம்புரியாத சூன்யத்திற்குள் கிடப்பது போல வாழ்நாள் முழுவதும் எரிந்த சாம்பலாகி விடும்


அழ வேண்டும் கண்களில் உள்ள கண்ணீர் வற்றி போகும் வரை அழவேண்டும் ஒரு துணியை தண்ணீரில் போட்டு காயவைப்பதற்கு பினிவது போல அழவேண்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட மிச்சமில்லாத அளவிற்கு அழவேண்டும் அப்படி அழுதால் தான் துயரங்களை தாண்டி அதற்கு அப்பாலுள்ள வசந்த காலத்தை இருகரம் நீட்டி வாரி அனைத்து கொள்ள முடியும் எனவே ஆண்கள் அழக்கூடாது என்பது போலி வேஷம் அழாத ஆண்கள் இல்லை என்பதே எதார்த்த உலகம்

கடவுளின் வடிவான ராமன் கூட அழுதான் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தகப்பன் தசரதன் இறந்த செய்தி கேட்டு அழுதான் தனது காதல் மனைவி தன்னைவிட்டு எங்கோ காணமல் போனபோது அழுதான் தன தோளோடு தோள்நின்று தனது துயரத்தை தன் துயரமாக ஏற்றுக்கொண்ட சகோதரன் யுத்த களத்தில் காயப்பட்டு வீழ்ந்த போது அழுதான் அந்த அழுகையை யாரும் கோழைத்தனம் என்று சொல்லவில்லை மாறாக அது ராமனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகத்தான் அறியப்பட்டது

இந்த உலகம் வேண்டாம் என்று சொல்வது காரியமுடிக்க நயவஞ்சகமாக சிரித்தாளே சூர்ப்பனகை அந்த சிரிப்பு பெண்ணுக்கு வேண்டாம் என்கிறது காரியமுடிக்க வஞ்சகமாக அழுதானே சகுனி அந்த அழுகை ஆண்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறது மற்றப்படி நீ அழவே கூடாது என்று யாரவது சொன்னால் அவன் உன்னை மனநோயாளியாக்க முயற்சிக்கிறான் என்று தான் அர்த்தமாகும்


அதனால் நீ அழு நன்றாக அழு இரவு முடிந்து விடியற்காலை பொழுது வரும் பொழுது மனமும் உடலும் சந்திக்குமே ஒரு விதமான மலர்ச்சி அந்த மலர்ச்சியை அழுது முடித்தபிறகு நீ அனுபவிப்பாய் அந்த அமைதியில் தான் நீ எடுக்க வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் தெளிவாகத்தெரியும் எனவே அழுகை என்பது தடைகல் அல்ல படிக்கல் என்பதை மனதில் வைத்து துயரங்களை போசுக்க அழு நன்றாக அழு. 

கோரக்கர் சித்தரின் வாழ்க்கையும்,கலியுகம் பற்றி அவரது எளிமையான பாடல்களும் நன்றி:கோரக்கர் அருளிய சந்திர ரேகை


உலகின் நல்லன பெருக்க இறைவன் மனித வடிவெடுப்பான் என்பது கீதையின் பொன்மொழி.இவ்வாறு உலகில் பல சித்தர்கள் தோன்றினர்.இவர்கள் மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பெருந்தொண்டுகள் செய்தனர்.இத்தகு சித்தர்கள் வரிசையில் தோன்றியவர் கோரக்கர்.இவர் தம் நூல்களில் மனித சமுதாயம் மேம்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
கோரக்கர் சித்தர் மற்ற சித்தர்கள் மறைபொருளாய் எழுதியவற்றையெல்லாம் இகம் பரம் இரண்டின் ரகசியங்களையும் எளிதாய் அறிந்து பேரின்ப நிலையை அடைந்து அழிவின்றி வாழும் வகையில் அனைத்தையும் 16 நூல்களில் 8450 பாடல்களாய்ப் பதிவு செய்தார்.இதையறிந்த பிற சித்தர்கள் மறைபொருளாய் பாடியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பாடி வைத்ததனால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூறி கோரக்கரை கடிந்தனர்.
ஆனால்,கோரக்கரோ சித்தர்களாகிய நாம் தவ வலிமையால் பெற்ற விஷயங்களை ரகசியமாய் வைத்துக்கொள்வதால் என்ன பயன்? இவை நம்மோடு மறைவதால் யாருக்கு என்ன லாபம் என்றார்.
இவரது வாதத்தை சித்தர்கூட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை;கோரக்கரிடமிருந்து அதனைப் பறிப்பதிலேயே குறியாய் இருந்தனர்.இருப்பினும் கோரக்கரின் மனம் ஒப்பவில்லை;தன் சக சித்தர்களையும் எதிர்க்கவும் முடியவில்லை;அவர்களை தம் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து சுவடிகளைத் தருவதாகக் கூறி,அதற்கு முன் தான் தரும் அடையைச் சாப்பிடும்படி வேண்டினார்.அடையில் கலந்த கஞ்சாவினால் சித்தர்கள் மயக்கமுற்றனர்.

                                 அந்த இடைவெளியில் தம் 16 நூல்களில் உள்ள 8450 பாடல்களின் முக்கியமான சாரத்தையெல்லாம் தொகுத்து 200 பாடல்களில் அடக்கி அந்த நூலுக்கு ‘சந்திர ரேகை’ எனப் பெயர் சூட்டினார்.மேலும் அதனைப் பாதுகாப்பாக மறைத்த உடன் அதனைக் காக்குமாறு சிவனையும்பார்வதிதேவியையும் வேண்டினார்.இவ்வாறாக கோரக்கர் பெருமானால் 16 நூல்களில் 8450 பாடல்களாக இருந்த தத்துவங்களின் சாறாக உருவானதே இந்த சந்திர ரேகை நூல் ஆகும்.


இந்த நூலின் விலை ரூ.110/-புத்தகம் கிடைக்கும் இடம்: குறிஞ்சி,15/21,டீச்சர்ஸ் கில்டு காலனி,2 வது தெரு,வில்லிவாக்கம்,சென்னை 49.தொலைபேசி:26502086.  


இந்த நூலில் சந்திரரேகை 200.நமனாசத் திறவுகோல் 100,இரவிமேகலை 75,முத்தாரம் 91,நாதபேதம் 25இல் 20,தனித்தொகுப்பு 9,போகநாதர் கற்ப சூத்திரம் 18 அடங்கியிருக்கிறது) ஓரளவு தமிழின் மீது ஆர்வமுள்ளவர்கள் வாங்கி,கோரக்கரின் சித்தர் உலக அனுபவங்கள்,உபதேசங்களை வாசிக்கலாம்.இந்த புத்தகம் முழுவதுமே பாடல்களாக இருக்கின்றன.இந்த புத்தகத்தில் கலியுகம் பற்றி 82 ஆம் பாடல் முதல் 87 ஆம் பாடல் வரையிலும் எளிமையாக எழுதியிருக்கிறார்.நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக அந்தப் பாடல்களை பதிவேற்றிட பலமுறை முயன்றும்,முயற்சி தோல்வியடைந்துவிட்டது.(எந்தவிதமான கணினித் தவறும்,நச்சுநிரலும் இதற்குக் காரணம் இல்லை;)எனவே,இந்த புத்தகத்தை வாங்கி வாசிக்கவும்.எல்லாம் கோரக்கரின் அருள்!!!


ஓம்சிவசிவஓம்