Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, December 29, 2012

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?
ஊழலுக்கு எதிராக டெல்லியில் நடந்ததைப் போன்றதொரு போராட்டம் தற்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு நடந்து வருகிறது. ஊழலை ஒழிக்க, கடுமையான லோக்பால் சட்டம் தேவை எனக் கோரியவர்களைப் போலவே பாலியில் வன்கொடுமை செய்வோரை மிகக்கடுமையக தண்டிக்கவேண்டும்; அதிலும் டெல்லி மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் எனக்கோரி தற்போது போராடுபவர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியாடுடே’ ஆங்கில ஏட்டில் ஒரு கட்டுரை படித்தேன். மராட்டிய மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தி அது. ஒரு காமுகன் அப்பாவி பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னப்படுத்தி விடுகிறான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் பலமுறை முறையிட்டும் காவல்துறையோ மற்றபிற வாக்கு வங்கி அரசியல் கட்சிகளோ உள்ளுர் பெரிய தலைகளோ இதை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் யுத்தக் குழுவைச்சார்ந்த (PWG) நக்சல்பாரி புரட்சியாளர்களிடம் (இன்றைய மாவோயிஸ்டுகள்) முறையிடுகின்றனர். நக்சல்பாரிகள் முன்னிலையில் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டமக்கள் நீதிமன்றம் கூடுகிறது. பொது விசாரணைக்குப் பின் குற்றம் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. தண்டனை வழங்குவது குறித்து மக்கள் மத்தியில் அப்போதே கருத்து கேட்கப்படுகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இவன்தான் என்பதற்கு அடையாளமாக அவனது மூக்கை அறுக்க வேண்டும் என மக்கள் தீர்ப்புக்கூற, அதுவே முடிவாகி அவனது மூக்கு வெட்டப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச) பிரிவு 375, 376, 376A, 376B, 376C, 376D ஆகிய பிரிவுகள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி சொல்கிறது. பிரிவு 376 ன்படி பாலியல் வன்கொடுமைக்கு (rape) அதிகபட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கமுடியும்.
 
மேற்கண்ட வழக்கில் நீதிமன்றம் சென்றிருந்தாலும்கூட அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான் வழங்கியிருக்க முடியும். ஆயுள் தண்டனை என்ன; தூக்கு தண்டனை நிச்சயம் என்றாலும்கூட அதற்கு யாரும் அஞ்சிவிடுவதில்லை. நமது கால்துறை மற்றும் நீதிமன்றங்களைப்பற்றி நம்மைவிட குற்றவாளிகளுக்கு மிக நன்றாகவேத் தெரியும். அது மட்டுமல்ல, தூக்கு தண்டனைக் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்பதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி தப்பித்துவிடுவர் என்பதால் தூக்கு தண்டனை சரியான தீர்வு கிடையாது என்பதை பெண் வழக்கறிஞர்களே முன்வைக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுவதற்கு சட்டமே இல்லாத போதும், தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு மாளிகையை முற்றுகையிடுகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற அதேவேளையில் இனி குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைதான். உணாச்சிப் பெருக்கான இதுபோன்ற போராட்டங்கள், பாலியல் தொடர்பான குற்றங்களின் சமூகப்பின்னணியை பரிசீலிப்பதற்கும், குற்றங்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவதற்கான தீர்வை நோக்கி இட்டுச்செல்வதில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைப் போன்று நாடெங்கிலும் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டெல்லியில் நடந்தது போன்ற ஒரு சில குற்றங்கள் மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

மன்னர்கள் காலத்தில்

அடிமை உடைமைச் சமுதாயத்தில் தொடங்கிய பெண்கள் மீதான வன்கொடுமைகள், நிலவுடமைச் சமுதாயத்தில் கேள்வி கேட்பாரின்றி நடந்தேறின. பண்ணை நிலவுடமையாளர்கள் இதை ஒரு அன்றாட நிகழ்வாகவே செய்து வந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கூலி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. இன்றும்கூட வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை. அதே போல முதலாளிகளும், பணக்காரர்களும் இன்று பெண்கள் மீதான வன்கொடுமையை கமுக்கமாக அறங்கேற்றி வருகின்றனர். பணபலமும், அதிகார பலமும், சாதி பலமும்தான் இவர்களை எப்போதும் பாதுகாத்து வருகிறது.

மன்னர்கள் தங்கள் காமலீலைகளை கஜூராவ்க்களில் செதுக்கினார்கள்; எல்லோராவில் தீட்டினார்கள; காமசூத்திரங்களாக எழுதித் தள்ளினார்கள். இத்தகைய கழிவுகளைத்தான் இந்தியாவின் பாரம்பரியப் பெருமை என்று இன்றும் பேணிக்காத்து வருகிறார்கள் காமத்தின் பாதுகாவலர்கள்.

திரைப்படங்களில்

“மாங்கா - அட தேங்கா - கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா” என எம்.ஜி.ராமச்சந்திரன் பாடியதில் காமம் இல்லையா?  சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டு கலைப்பணியாற்றும் கேப்டன்களால் பாலியல் தூண்டல் ஏற்படாதா? காம வெறியை வளர்ப்பதற்காகவே ஜெயமாலினிகள், சில்க்ஸ்மிதாக்கள், அனுராதாக்கள், டிஸ்கோ சாந்திகள், சிம்ரன்கள், நமீதாக்கள் என தொடர்ச்சியாக காமக்கிழத்திகளை திரைப்பட முதலாளிகள். அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஏடுகளில்

ஆடுகளைத் தோலுரித்து தொங்கவிடுவதைப்போல தினமலர், குமுதம், ஆனந்த விகடன், விகடன் டைம்பாஸ்,  நக்கீரன், சினிமா எக்ஸ்பிரஸ் ஈரான ஏடுகளில் அரைகுறை ஆடைகளுடன் காமக்கிழத்திகளின் ஸ்டில்களைப் போட்டு காமத்துக்கு கடை விரிக்கவில்லையா பத்திரிக்கை முதலாளிகள்?

தொலைக்காட்சிகளில்

மானாட - மயிலாட என்ற பெயரில் காமத்தைத் தூண்டும் கலா மாஸ்டர் அக்காள்களுக்கு பாலியல் குற்றங்களைத் தூண்டுவதில் பங்கு இல்லை என்று மறுக்க முடியுமா? குத்தாட்ட பாடல்களை நேயர் விருப்பம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி இஞைர்களிடையே காம போதையை ஏற்றவில்லையா தொலைக்காட்சி ஊடக முதலாளிகள்?

நாவல்களில்

சான்டில்யன்கள், சுஜாதாக்கள், ராஜேந்திரகுமார் - ராஜேஸ்குமார்கள் முதல் ‘சரோஜாதேவி’ புத்தகங்கள் வரை பெண்களின் அவையங்களை வர்ணித்து எழுதித் தள்ளியதில் காமம் வளர்க்கப்படவில்லையா?

நட்சத்திர விடுதிகளில்

‘டிஸ்கொத்தே’ என்கிற பெயரில் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் இரவு நேர களியாட்டங்களால் காமம் தூண்டப்படாதா? உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்கூட காமக்கிழத்திகளை ஆடவிட்டுத்தானே பக்தியை வளர்க்கிறார்கள் நம்மூர் ‘நாட்டாமைகள்’.

இணையதளங்களில்

கூகுளைத்தட்டினால் கொட்டப்படும் உடலுறவுக்காட்சிகள் - படங்கள் மூலம்  சைவ சித்தாந்தத்தையா போதிக்கின்றனர் இணைய தள முதலாளிகள்? இவைகளைத் தடைசெய்ய வக்கில்லாமல் சைபர் குற்றங்களில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டம் பாயும் என மிரட்டுகிறது அரசு. ஆளும் கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அம்பலப்படுத்தி எழுதுவதுதான் இவர்கள் மொழியில் சைபர் குற்றங்கள் போலும்!

விளைவு

வேலை ஏதுமின்றி தண்டச்சோறு திங்கும் காம வெறிபிடித்த திமிங்கலங்களும், அரசே ஊற்றிக்கொடுக்கும் சாராயத்தை ஏற்றிக்கொண்ட வெறியர்களும் தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து குதறுகிறார்கள்.  இதில் பெற்ற மகள் என்றும் பாராமல் சீரழிக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன. பணத்திமிர் கூடிவிட்டால் காமத்தின் வன்மம் மேலும் உக்கிரமாகிறது. கீழ்சாதிப் பெண்தானே என்கிற சாதிய வன்மமும் பாலியல் குற்றங்களில் முக்கியப்பங்காற்றுகிறது.

ஆளும் வர்க்கத்தின் பங்கு

இப்படி மன்னர் காலம் தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களை போகப்பொருளாக சித்தரித்து, ஆண்களிடம் காம வெறியை வளர்த்தவர்கள் – வளர்த்து வருபவர்கள் பணக்காரர்களும் முதலாளிகளுமே. இவற்றை எல்லாம் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இத்தகைய இழி செயல் புரிவோருக்கு கலைப்பணிக்கான விருதுகளையல்லவா வழங்கி கௌரவிக்கிறது!

எப்படித்தான் தடுப்பது?

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலட வேண்டும் என ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் தூத்துக்குடியில் பள்ளிச்சிறுமியைக் குதறினார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்துவது, கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்வது, தற்காப்பு ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்திருப்பது, தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது, இறுதியில் ஆண்கள் பெண்களை ஒரு மனுசியாக மதிக்கக்கற்றுக்கொள்வது என பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கப்படுகின்றன. முற்றும் துறந்த முனிகளே முந்தானைகளைத் தேடும் போது பக்திகூட இதில் சக்தியற்றுப்போகிறதே!

டெல்லியில் நடைபெறுவது போன்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் மூலமாகவோ அல்லது ‘பெண்ணியவாதிகள்’ முன் வைக்கும் தீர்வுகள் மூலமாகவோ புரையோடியிருக்கும் பாலியல் வன்மத்தையும், பாலியல் குற்றங்களையும் முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.

தற்போதைய உலகமயக் கொள்கை “எதைச் செய்தேனும் பணத்தை ஈட்டு! எல்லாவற்றையும் அனுபவி!” என மக்களிடையே நுகர்வு வெறியை வளர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் போன்ற ஊடகங்கள் மூலமாக பெண்களையும் ஒரு நுகர்வுப் பண்டமாக - அனுபவிப்பதற்கான ஒரு பொருளாக பார்க்கிற எண்ணத்தை வளர்த்துவருகிறார்கள்.  காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட திரைப்பட – பத்திரிக்கை - தொலைக்காட்சி – இணையதள - முதலாளிகளையும் இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் அரசுகளையும் ஒழித்துக்கட்டாமல் பாலியல் குற்றங்களுக்கு ஒரு போதும் முடிவுகட்டமுடியாது.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் மட்டுமே நடத்தி வெற்றி பெற்றுவிடவும் முடியாது. முதலில் பெண்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் போராளிகளாக மாறவேண்டும். அமைப்பாய் அணிதிரள வேண்டும். அப்பாவி பெண்களிடம்தான் காமாதி காம சூரர்களின் ‘வீரம்’ எடுபடும். அஜிதாக்களைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை என பெருகிவரும் மக்கள் பிரச்சனைகளுக்குக் காரணமான தனியார் மயம் -  தாராள மயம் - உலக மயத்தை எதிர்த்த போராட்டங்களோடு பாலியல் வெறியைத் தூண்டுகிற சமூக வெறியர்களுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் போது பாலியில் வன்மங்களும் வெறியாட்டங்களும் இச்சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படும்.

Wednesday, December 26, 2012

Photo: நடுநிலைவாதி என்று சொல்லிக்கொள்ளும் தலித்வாதிகளா.. இங்க வாங்கடா..

காதல் எப்படி திணிக்கபடுகிறது என்பதற்கு காரைக்கால் வினோதினி சம்பவம் ஒரு எடுத்துகாட்டு. காதிலிகலைனா ஆசிட் வீசுவீங்களா..?? இந்த சம்பவத்திற்கு எதிரா பேசினாலும் ஆதிக்க சாதி வெறியா...?? இதுக்கெல்லாம் வாயே திறக்க மாட்டானுங்க.

இளையோர் தங்கள் துணையை தேர்வு செய்யும் விசயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று சட்டம் பேசிய அறிவாளிகளே, ஏன் மவுனம். இன்று அந்த பெண்ணின் வாழ்க்கை சிதைந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள். நீங்கலாடா பார்க்க போறீங்க..? இப்பவும் பெற்றோர் தான் பார்க்க வேண்டும்..?? 

நீங்கள் புற்ச்சி செய்ய எங்கள் வீட்டு பெண்கள் தான் பகடைக்காய்களா..??நடுநிலைவாதி என்று சொல்லிக்கொள்ளும் தலித்வாதிகளா.. இங்க வாங்கடா..

காதல் எப்படி திணிக்கபடுகிறது என்பதற்கு காரைக்கால் வினோதினி சம்பவம் ஒரு எடுத்துகாட்டு. காதிலிகலைனா ஆசிட் வீசுவீங்களா..?? இந்த சம்பவத்திற்கு எதிரா பேசினாலும் ஆதிக்க சாதி வெறியா...?? இதுக்கெல்லாம் வாயே திறக்க மாட்டானுங்க.

இளையோர் தங்கள் துணையை தேர்வு செய்யும் விசயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று சட்டம் பேசிய அறிவாளிகளே, ஏன் மவுனம். இன்று அந்த பெண்ணின் வாழ்க்கை சிதைந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள். நீங்கலாடா பார்க்க போறீங்க..? இப்பவும் பெற்றோர் தான் பார்க்க வேண்டும்..??

நீங்கள் புற்ச்சி செய்ய எங்கள் வீட்டு பெண்கள் தான் பகடைக்காய்களா..??Photo

இதற்க்கு பதில் ........

சரிசம வாய்ப்பு – திறமைக்கு வாய்ப்பு – அனைவருக்கும் பொதுவான சட்டம்

Photo: பூட்டை செய்தவன் தான் சாவியையும் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு கொண்டு வந்த அம்பேத்கர் அதை எவ்வளவு காலம், எந்தெந்த சூழலில் மாற்ற விடும் என்பன போன்ற எல்லைகளை தெளிவாக வரையறுக்காது ஓர வஞ்சனை செய்து விட்டார். அதன் காரணமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை சலுகைகளுக்கும் இட ஒதுக்கீடுகளுக்கும் விடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக 100/100 எடுத்தாலும் சில சமூகங்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கபடுவதால் சமூகங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் மிக கடுமையாக வளர்கிறது. அம்பத்கரை கொண்டாடும் அனைவரும் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்த (இட ஒதுக்கீடு பெறும்) இனத்தவரின் நிலையை விட இன்று நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த ரிசர்வேசனை மறு ஆய்வுக்கு உட்படுத்தி குறைக்க வழி செய்ய வேண்டும்.

உண்மையில் அம்பேத்கர் சீர்திருத்தவாதியாக அனைவரும் கருதினால் மக்களுக்குள்  வேற்றுமைக்கு காரணமாக இருக்கும் ஒருதலைபட்ச வன்கொடுமை சட்டம், பல ஆண்டுகளாக சீரமைக்கபடாத இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை மறு ஆய்வு செய்து திருத்த வேண்டும்.

சரிசம வாய்ப்பு – திறமைக்கு வாய்ப்பு – அனைவருக்கும் பொதுவான சட்டம்

பூட்டை செய்தவன் தான் சாவியையும் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு கொண்டு வந்த அம்பேத்கர் அதை எவ்வளவு காலம், எந்தெந்த சூழலில் மாற்ற விடும் என்பன போன்ற எல்லைகளை தெளிவாக வரையறுக்காது ஓர வஞ்சனை செய்து விட்டார். அதன் காரணமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை சலுகைகளுக்கும் இட ஒதுக்கீடுகளுக்கும் விடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக 100/100 எடுத்தாலும் சில சமூகங்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கபடுவதால் சமூகங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் மிக கடுமையாக வளர்கிறது. அம்பத்கரை கொண்டாடும் அனைவரும் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்த (இட ஒதுக்கீடு பெறும்) இனத்தவரின் நிலையை விட இன்று நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த ரிசர்வேசனை மறு ஆய்வுக்கு உட்படுத்தி குறைக்க வழி செய்ய வேண்டும்.

உண்மையில் அம்பேத்கர் சீர்திருத்தவாதியாக அனைவரும் கருதினால் மக்களுக்குள் வேற்றுமைக்கு காரணமாக இருக்கும் ஒருதலைபட்ச வன்கொடுமை சட்டம், பல ஆண்டுகளாக சீரமைக்கபடாத இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை மறு ஆய்வு செய்து திருத்த வேண்டும்.

சரிசம வாய்ப்பு – திறமைக்கு வாய்ப்பு – அனைவருக்கும் பொதுவான சட்டம்

இந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்?ஏன் இந்தியர்களுக்கு மட்டும் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்? ஏனெனில், இந்து தர்மம் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எப்படி வாழ வேண்டும்? என்பதை மனித யுகம் நாகரீகமடைந்ததிலிருந்து இன்று வரையிலும் போதித்திருக்கிறது; போதித்துக் கொண்டேஇருக்கிறது,
இந்த போதனைகளின் தொகுப்பே உலக வரலாறு என்பதே சத்தியம் ஆகும். நாம் ஒவ்வொருவரும் இந்து என்ற உணர்வு ஏற்படும்போது மட்டுமே இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மனம் வரும்.

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும், அவனைச் சுற்றி வாழும் மனிதர்களிடம் சிறந்த தாக்கத்தை அவன் உருவாக்குவான் . இந்த தாக்கம் அப்படியே அவனைச் சார்ந்திருக்கும் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று பரவி ஒரு முன்னுதாரணமான உலகத்தை உருவாக்கிட முடியும்.

800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களால் இந்து தர்மத்தின் வேரைக் கண்டறிய முடியவில்லை; ஆனால்,வெறும் 250 ஆண்டுகள் சுரண்டிய ஆங்கிலேயன், இந்துதர்மத்தின் வேர், ஆத்மா இரண்டையும் சிதைக்கத் திட்டமிட்டான். அதற்கான உலகளவில் ஒருங்கிணைந்தும் செயல்படத் துவங்கினான். அதனாலேயே மகத்தான வெற்றியும் பெற்றான். இந்த அழிவுப்பணி இன்றும் தொடர்கிறது. இதை எதிர்கொள்ளுமளவுக்கு நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நமது மக்கள் தொகையில் ஒரு சதவீதம்கூட இந்த விழிப்புணர்வைப் பெறவில்லை.

தேசபக்தி இல்லாத தெய்வபக்தியின் விளைவால் தான் கி.பி.1000 முதல் இன்று வரையிலும் நாம் நமது இந்துப் பண்பாட்டின் முக்கியத்துவமான இடங்களை இழந்தோம். மஹாபாரதத்தில் அரசியாக இருந்த காந்தாரி பிறந்த காந்தாரம் இன்று ஆப்கானிஸ்தானாக நமது பக்கத்து நாட்டின் நாடாக போய்விட்டது. சமஸ்க்ருதத்தை நமது நாட்டில் பரப்பிய பாணினி என்ற துறவியின்பிறந்த நாடான பாகிஸ்தானை ( பிரிட்டனின் நயவஞ்சகத்தால்) பிரித்துக் கொடுத்தோம். நமது நாட்டில் பிறந்த மாமனிதர் புத்தர். அவர் உருவாக்கிய அன்பு மதம் புத்தம்! !புத்த மதத்தை தமது தேசியமாக கொண்டிருக்கும் திபத்தின் சுயமரியாதையை இழப்பதற்கு நாம் (தொலைநோக்கு சிந்தனை இல்லாத நமது தலைவர்களால்) காரணமாக இருந்தோம். அதன்விளைவாக, நமது பாதுகாப்புக்கவசத்தையும் இழந்தோம். திபத் என்ற அற்புதமான நண்பனையும் இழந்தோம். உலகத்தின் ஒரே இந்து நாடாக இருந்து வந்த நேபாளத்தில் டிராகனின் வால் பதிவதற்கும் நாம் காரணமானோம்.

எந்த மாநிலப் பகுதிகளில் இருந்து அளவற்ற தேசபக்தர்கள் உண்டானார்களோ அந்தப் பகுதியை ஆங்கிலேயன் . நம்மை நமது ஆத்ம செல்வங்களை, நமது அறிவுக் களஞ்சியங்களை முற்ற முழுக்கத் திருடியப்பின்னர், நமக்கு சுதந்திரம் தரும்போது அந்த மாநிலப்பகுதிகளை இரண்டு பகுதிகளாக பிரித்தே தந்தான்.ஆமாம்!

பஞ்சாப் பகுதியிலிருந்து அளவற்ற தேசபக்தர்கள் பிறந்தார்கள். அதே போல வங்காளத்தில் அந்தக் காலத்தில் படித்தவர்கள் மிக அதிகம்; அதனால் அங்கேயிருந்தும் ஏராளமானவர்களிடமிருந்து தேசபக்தி கனலாகப் பரவிக்கொண்டே இருந்தது. (எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வருமோ, அப்போதெல்லாம் தேசபக்தி நிறைந்த பாகிஸ்தான் சீக்கியர்களும், இந்திய சீக்கியர்களும் தத்தமது நாடுகளுக்காக கடுமையாகப் போராடுவார்கள்.சகோதரராக இருந்தாலும்,அவர்களுக்குள் தீராப்பகையை உருவாக்கியது நாம் அல்ல. நமது இந்து தர்மம் சார்ந்த விழிப்புணர்வு இன்மையே!!!) நமது சுதந்திரப்போராட்ட வரலாற்றை முழுக்க வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

இந்து தர்மத்தின் வேர்களாக பசுக்கள், விவசாயம், பெண்கள், கோவில் போன்றவை இருந்தன; 1900 வரையிலும் இந்த ஐந்தும் மிகவும் மரியாதைக் குரியவையாக போற்றப்பட்டன. இந்த நான்குமே இந்து தர்மத்தின் வேர்கள் என்று மட்டும் நாம் நினைப்பது தவறு. எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்த நாடு சுபிட்சமாகவும், குறையேதுமின்றியும் இருக்க வேண்டுமெனில்,அந்த நாட்டின் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த நாடு உணவுக்காக எந்த ஒரு நாட்டையும் சார்ந்திருக்காது. (சோமலியாவை நினைத்துப்பாருங்கள்). விவசாயி மன நிம்மதியோடு விவசாயம் செய்தால் தான் விளைச்சல் கொட்டோ கொட்டு என்று கொட்டும். சுதந்திரம் வாங்கியது முதல் இன்று வரையிலும் வந்த அரசுகள் (ஒன்றிரண்டைத்தவிர) விவசாயி, விவசாயத்தை விட்டே ஒடும் விதமாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன . எந்த ஒரு மத்திய திட்டக்கமிஷனும், அதன் அதிகாரிகளும், ஆள்பவர்களும் இந்தியாவின் ஆத்மா விவசாயம் என்பதை உணர்ந்துகொள்ளவே இல்லை;(ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஆக்ஸ்போர்டு அல்லது ஹார்வேர்டில் படித்ததால் நமது விவசாயத்தின் பெருமைகள் புரிவதில்லை ) இதன்  விவசாயத்தின் பெருமைகள் விளைவாக சுதந்திரம் வாங்கியபோது நமது நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன . தற்போது இரண்டரை லட்சம் கிராமங்களே இருக்கின்றன. இதனால்,உணவு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . மேலும் பல அரிய உணவுப் பொருட்களின் விளைச்சல் காணாமல் போய்விட்டன.

ஒருவேளை இந்தியாவில் இனி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், உலகத்தில் இருக்கும் 240 நாடுகளும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவின் பசியைத் தீர்க்க முடியாது. உலகத்து பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போய்விடும். இந்த உண்மை , ஆக்ஸ்போர்டில் & ஹார்வேர்டில் படித்த அறிவு ஜீவிகளுக்குப் புரிவதே இல்லை;

ஒரு பசுவை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த பசு கொல்லப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சதுரகி.மீ. தூரத்தில் இருக்கும் கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அவமானம் வரும். இதற்கான காரணங்கள் ஆன்மீக ரகசியமாக இருப்பதால் வெளிப்படுத்த குருமுகமாக அனுமதியில்லை. இதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயன் பசுவதைக் கூடங்களை இந்தியாவில் தனது அரசியல் திமிர்த்தனத்தால் நிறுவத் துவங்கினான். கி.பி.1800களில் இந்தியாவின் மக்கள் தொகை 20 கோடியாக இருந்தது. ஆனால் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 60கோடிகளாக இருந்தன. இதன் மூலமாக இயற்கைச் சமநிலையும். நீர்நிலைகளில் பயோ வித் கவ் டைவர்சிட்டியும் பாதுகாக்கப்பட்டு வந்தது;

மக்களிடையே ஆங்கிலேயன் பரப்பிய பொய் என்ன தெரியுமா? உயிருள்ள ஜீவன்கள் மனிதனுக்கு உணவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஜீவன் இந்தியாவில் பசு என்பதை ஆழமாக பதியச் செய்தான். இதற்கென்றே நாடு  நெடுக ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தான். இதன்விளைவாக இன்று 2012 இல் நமது நாட்டில் இருக்கும் பசு வதைக் கூடங்களின் எண்ணிக்கை 30,000!!!

இவைகளால் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பசுக்களை உயிரோடு கொன்று தேவை(?)யானவைகளை பிரித்து பதப்படுத்த முடியும். இந்த ஒரு கருத்திலிருந்துதான் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரிவினை விதையை ஆங்கிலேயன் விதைத்தான். அது பெரிய விருட்சமாக வளர்ந்து இன்று பாகிஸ்தானாகி விட்டது. ஆன்மீகத்தை எப்படி கிரிமினல்தனமாக பயன்படுத்தி நமது இந்து தர்மத்தின் நடுமண்டையில் அரசியல் அடித்திருக்கிறான் ஆங்கிலேயன்!!!

ஆங்கிலேயன் 1900களில் மதுரையில் (சுதந்திர)தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்களை நிர்வாணப்படுத்தி ஓட வைத்தான். உதட்டுச்சாயம் என்ற லிப்ஸ்டிக் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே சினிமாவை அறிமுகப்படுத்தினான். சுத ந்திரம் வாங்கியப்பின்னரும்,இன்று வரையிலும் பெண் இனத்தை போகப்பொருளாக பார்க்குமளவுக்கு சினிமா, டிவி, டிவி விளம்பரங்கள் நம்மிடையே பரவிக்கொண்டே இருக்கின்றன.சினிமாவிலும் இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகமே சிறந்தது என்று நமது நாட்டுப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக நமது கல்வித்திட்டம் இன்னும் இருக்கிறது.அந்தக் கல்வித்திட்டத்தின் பெயரே மெக்காலே கல்வித்திட்டம்!!

மெக்காலே கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் மனப்பாடத்திறனை சோதிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது;நமது குருகுல கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் சிந்திக்கும் திறனையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறது.மெக்காலே கல்வித்திட்டத்தால் நான் என்ற அகங்காரம் பிடித்த சமுதாயத்தை கடந்த 200 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.அதே சமயம், குருகுலக் கல்வித்திட்டம் கடந்த 20 நூற்றாண்டுகளாக உலகத்திலேயே தலைசிறந்த சமுதாயத்தை நமது நாட்டில் தான் உருவாக்கிவந்தது;
மெக்காலே கல்வித்திட்டத்தால் மனிதர்கள் மனிதத்தன்மையோடு உருவாகவில்லை. ஈகோ பிடித்த பிடிவாதம் நிறைந்த மனிதர்களை மட்டுமே உருவாக்க முடிகிறது. அதுதான் இன்று இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்போது இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமே மெக்காலே கல்வித்திட்டமே! இன்று குருகுலக் கல்வித்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றிவருகிறது. அவர்களின் உதவாக்கரைத்திட்டமான மெக்காலே கல்வித்திட்டத்தை பின்பற்றி நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்கால சந்ததியினரிடம் இருப்பது நான் என்ற அகங்காரமும், சுயநலமும் தான்! இதுபோக ஆங்கிலவழிக்கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தி சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

தோலால் மட்டும் இந்தியர்கள்! ஆனால்,சிந்தனையால் செயல்பாடுகளால் மேல்நாடுகளுக்கு ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கு நமது பண்பாட்டின் பெருமைகள் புரியாது. குடும்ப அமைப்பின் அமைப்பு ரகசியமும் தெரியாது. இதன் விளைவுகளே இன்று திருமணமான ஒரே வருடத்தில் மணவிலக்கு கோரி நீதிமன்றங்களில் கூடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம்!!! இந்தக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.பள்ளி ஆசிரியர்கள் தம்மிடம் கல்வி பயில வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்குமளவுக்கு சமுதாயச் சீரழிவு உருவாகிவிட்டது.மாதா,பிதா,குரு என்ற வரிசையெல்லாம் மெக்காலே கல்வித்திட்டத்தினால் அழிந்து வரும் மரபாக மாறிவருகிறது.

ஒரு சர்வே எடுக்கவேண்டும்: ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் நீதிமன்றங்களிலும் ஒரு வருடத்தில் பதிவாகும் மணவிலக்கு வழக்குகளின் பட்டியலை எடுக்க வேண்டும்;அந்த பிரிந்திருக்கும் தம்பதியரின் வாழ்க்கைப்பின்னணி, அவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கை முறை, அந்த பிரிந்த தம்பதியரின் கல்வி கற்ற விதம் போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வியை பயின்றவர்களே அ திகமானவர்கள் இருப்பார்கள் என்பது புலனாகும்.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் ஒரு சித்தாந்தம் அல்லது தத்துவம் உண்டானாலும், அந்த தத்துவம் அல்லது மதம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி வாழும் இடம் நமது பாரதம் மட்டுமே! சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலுமே இந்து தர்மத்தின் அடையாளங்கள்!இந்த சகிப்புத்தன்மையால் நாம் இன்று நமது நிலப்பரப்பை இழந்து வருகிறோம்;பெருமைகளை இழந்து வருகிறோம்;சுயமரியாதையை இழந்து வருகிறோம்;வெகு விரைவில் நமது தேசியத்தையும்,சுய கவுரவத்தையும்,இந்து தர்மத்தின் வேர்களையும் இழக்க இருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் இந்து உணர்வு என்ற தேசபக்தியைப் பெறாவிட்டால் என்ன நடக்கும்? அடுத்த பாராவை வாசிக்கவும்:

இதோ ஒரு நேரடி ஆதாரமும் நமக்கு குமுதம் ரிப்போர்ட்டர் என்ற அரசியல் வார இதழ் 1.11.2012 ஆம் வெளியீட்டில் கிடைத்திருக்கிறது.இதுபோல,அடிக்கடி ஏராளமான நேரடி ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தாலும், நாம் அதன் பின்னணியின் கோர முகத்தை உணர்வதே இல்லை;அது என்ன அந்த நேரடி ஆதாரம்? பார்ப்போமா:-

தலைப்பு: ஐயா வைகுண்டரை சீண்டினால் . . .கட்டுரை: "சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டிலேயே புரட்சிகளைச் செய்தவர் அய்யா வைகுண்டர்.ஆனால்,மத்திய அரசின் சி.பி.எஸ்.சி.பாடத்திட்டத்தில் அவரைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலேயர்களுக்குத் துதி பாடியிருப்பது என்ன நியாயம்? எனக்கொதிக்கிறார்கள்,தமிழகமெங்கும் உள்ள அய்யா வழி பக்தர்கள்!!!

இந்த விவாதத்தைக் கிளப்பிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் நம்மிடம், 'மெட்ரிக் பாடத்திட்டங்களில் பல மாநிலங்களில் இப்போது குழப்பம் நிலவுவதால், மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு ஏராளமானோர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலைப் பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறது மத்திய அரசின் கல்வித் துறை. அம்பேத்கர் குறித்து ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன் வெளியிட்டது. பாலகங்காதர திலகரை தீவிரவாதியாகச் சித்தரித்தது எல்லாம் இந்த ரகம் தான். இப்போது அதே வரிசையில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தியிருக்கிறது ஒரு பாடம்.

ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும் என தலைப்பிட்டுள்ள அந்தப் பாடத்தில், 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் சாணார்(தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள். நாயர் நிலப்பிரபுக்களின் நிலங்களில் வடிப்புத்(கள் இறக்கும்)தொழில் செய்வதற்காக வந்து குடியேறியவர்கள் அவர்கள்.செருப்புப் போடக் கூடாது நகைகள் அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன.1820 இல்கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள்,மேல்சாதியினரைப் போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்தனர்.இதனால் மேல்சாதியினர், நாடார் பெண்களின் மேலாடைகளைக் கிழித்து எறிந்தார்கள் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடார் சமூகத்தினரை 'வந்தேறிகள்'எனக் குறிப்பிட்டிருப்பது மகா அக்கிரமம். அதே போல, சாதிய ஒடுக்குமுறைகளை கிறிஸ்துவ மிஷனரிகள் தான் தகர்த்தது போல இதில் வரலாற்றைத் திரித்திருக்கிறார்கள். அதே கால கட்டத்தில் அங்கு சாதி ஒழிப்புக்கும், சமத்துவத்துக்கும் போராடிய அய்யா வைகுண்டரை அந்தப்பாடத்தில் கண்டுகொள்ளவே இல்லை. 'தாழக் கிடப்பாரை தற்காத்துக் கொள்வதே தர்மம்' என்கிற உயரிய தத்துவத்தை விதைத்து, மொத்த தமிழ் சமூகத்திற்காக தென் தமிழகத்தில் போராடியவர் வைகுண்டர். கூடவே, அந்தப் பகுதியில் மதமாற்றத்தையும் தடுத்து நிறுத்தி லண்டன் மிஷனரிகளின் கோபத்திற்கு ஆளானவர்.

இதனால் அவரைப் புறக்கணித்திருப்பதை திட்டமிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வாகவே கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அய்யாவழி மக்களின் தலைவரான சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரைச் சந்தித்தேன்.

அய்யாவை இருட்டடிப்புச் செய்ததையும், நாடார் சமூகத்தினரை இழிவு செய்திருப்பதையும் கண்டித்து விரைவில் போராட்டத்தில் குதிப்போம் என்றார்.

சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளார் நம்மிடம், "ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். நாடார் சமுதாயப் பெண்கள் மட்டுமல்லாது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் யாருமே இடுப்புக்கு மேலே ஆடை அணியக் கூடாது என அந்தக் காலத்தில் ஆதிக்க சாதியினர் கெடுபிடி செய்தனர்.அய்யா வைகுண்டர், தன்னை சந்திக்க வரும் பெண்கள் கட்டாயம் தோள் சீலை அணிந்து வர கட்டளையிட்டார். பல இடங்களில் தடையை மீறி, 'தோள்சீலைப் போராட்டங்களை' நடத்தினார். அதே போல சாதிக்கு ஒரு கிணறு என இருந்த நிலையை மாற்ற, 'முந்திரிக் கிணறு' எனப்படும் பொதுக்கிணறு முறையை அறிமுகப்படுத்தினார்.அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் சாப்பாடு தயார் செய்து, 'துவையல் பந்தி'களை நடத்தினார்.இன்றளவும் சாமித் தோப்பில் அந்த பொது பந்தித் திட்டம் செயல்படுகிறது.

பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஆண்கள் இடுப்பில் துண்டு கட்ட வேண்டும் என விதிக்கப்பட்ட தடையை மீறி, அந்தக் காலகட்டத்திலேயே அனைவரையும் தலைப்பாகை அணிய வைத்தார். பிற்காலத்தில் கன்னியா குமரியில் தியானம் செய்த விவேகானந்தர், சாமித்தோப்பு கோவிலுக்கு வந்தப்பிறகு தான் தலைப்பாகை அணியத் துவங்கினார் என்பது வரலாறு. எனவே இந்தப் பாடத்திட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.' என்று சீறினார்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுடன் வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் பழமையான கோவில்களுக்கு அழைத்துச் சென்று,அந்தக் கோவிலின் பெருமைகளையும், உருவான வரலாற்றையும் சொல்லுவோம்; ஏழு வயதுக்குள் நாம் நமது குழந்தைகளுக்கு பக்தி உணர்வினை ஊட்டாவிட்டால், அதன்பிறகு ஒருபோதும் அவர்கள் மனதில் "பக்தி உணர்வை" ஊட்டவே முடியாது.நமது குழந்தைகளை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், ஸ்ரீசின்மயாமிஷன், ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம், ராஷ்டீரிய சேவிகா சமிதி, சேவாபாரதி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீசாரதா பீடம், மாதா அம்ருதானந்தமயி பீடம், மனவளக்கலை மன்றம் போன்ற அமைப்புக்கள் அடிக்கடி நடத்தும் ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள், பயிற்சி முகாம்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு கலந்து கொள்ள வைக்க வேண்டும்.இதன் மூலமாக முழுமையான இந்து உணர்வு நமது அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படும்.இது நாம் ஒவ்வொருவருமே கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை ஆகும்.இவ்வாறு செய்யாமல் நம்மால் சுயச்சார்புள்ள நாடாகவும்,வல்லரசாகவும் உயர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலைநகரில் நடந்த பாலியல் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நிறைய புலிகள் பசுந்தோலை போர்த்திக்கொண்டு அறிக்கை விடுகின்றன..

Photo: தலைநகரில் நடந்த பாலியல் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நிறைய புலிகள் பசுந்தோலை போர்த்திக்கொண்டு அறிக்கை விடுகின்றன.. 

இப்போது ஏதாவது சொன்னால் அது பெண்ணுரிமை வாதிகளை சீண்டி விடுவதாக இருக்குமோ என்ற பயம் அல்லது "நானெல்லாம் யோக்கியனாக்கும்" என்று காட்டிக்கொள்ளும் ஆர்வம் தான் தெரிகிறதே தவிர யாரும் மனச்சாட்சிப்படி பேசுவதாக தெரியவே இல்லை.. நூற்றாண்டுகளாய் , ஆயிரமாண்டுகளாய் தொன்றுதொட்டு வந்த இந்திய கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் நவீன யுவதிகள் உடைத்து சிதறடிக்க பதாகைகளை ஏந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு "நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாய்"ஆண்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

நடந்த சம்பவம் நமக்கெல்லாம் செய்தி.. ஊடகங்களுக்கோ தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங் கை உயர்த்த கிடைத்த வரம்.. ஆனால் அந்த பெண்ணின் நிலை.. அந்த பெண்ணை பெற்றோரின் நிலை...??

******************************************
அந்தப் பெண் ஒன்றும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன்னுடைய பெற்றோருக்கு மருந்துவாங்கவோ , இல்லை தான் படிப்பை முடித்துவிட்டோ இரவு பதினோரு மணிக்கு வரவில்லை. ஒரு ஆண் நண்பனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்,,,
******************************************

இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதே.. அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முன்வருவாரா.??? இதனால் அவருக்கு இழப்பு என்ன?

கொஞ்ச நாளில் ஊடகங்கள் அவர்களை மறந்துவிடும். நாமும் மறந்துவிடுவோம். ஆனால் அவர்கள் உயிரோடிருப்பார்கள். இரவில் ஒரு இளம்பெண்ணுடன் ( யாரோ பெற்ற பெண்தானே ) ஜாலியாக ஊர் சுற்ற போனவர் தனக்கு மனைவியாக வேறொரு பெண்ணை தேடிப்போய் விடுவார்... ஆனால் அந்தப் பெண்ணை பெற்றவர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து பார்த்து வாழ்நாளெல்லாம் நரகம் அனுபவித்து செத்து போவார்கள்.. அதையும் மீறி யாரோ ஒரு தியாகி அந்த பெண்ணை மணம் செய்ய முன்வரலாம். ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை...

******************************************
ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே..
ஒரு பெண்ணுடன் நட்பாயிருக்க பத்து ஆண்கள் தயாராயிருப்பார்கள் ஆனால் அந்த பெண் காதலியாக இருந்தால் அவள் வேறொரு ஆணுடன் சகஜமாக பழகுவதை ஏற்க மாட்டார்கள்.. அவளே மனைவியாகிவிட்டாலோ வேறொரு ஆணுடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்... இதுதான் நிஜம்.
***********************************************
ஒரு பெண்ணுடன் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வெளியிடங்களுக்கு மிக சந்தோசமாக செல்லும் ஐந்து ஆண்கள் , அந்தப் பெண் "என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா.." என்று கேட்கும்போது மறுத்து விடுவார்கள். இதை "லவ் டுடே " என்ற படத்தில் திரு பால சேகரன் என்ற இயக்குனர் ஆணி அடித்ததுபோல் சொல்லி இருப்பார்... இதுதான் ஆணின் நிஜ முகம்..

உங்கள் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.. நீங்கள் சுதந்திரம் என்று சொல்வது உங்கள் பெற்றோரின் வயிற்றில் புளிகரைப்பதை உங்களால் இப்போது உணர முடியாது.... அப்படி உணர நீங்கள் பெற்றோராக வேண்டும்.

சும்மா அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருப்பதுமாதிரி பேசினால் மட்டும் ஆகாது... நமது கலாச்சாரத்தை விரும்பி அந்த மக்கள் வாழ ஆசைபடுகிறார்கள்.. ஆனால் வியாபாரிகளோ.. அதுதான் நிஜமான நாகரீகம் என்று ஒரு மாயையை விதைத்து அதனை வளர்க்கிறார்கள்.. அதை நம்பி அந்த நாகரீகத்தை பின்பற்ற ஆர்வமாயிருக்கிறீர்கள்.
அந்த மாயவலை உங்களை வீழ்த்தி அவர்களை பணக்காரர்கள் ஆக்கும்..

சிங்கத்தை வேண்டுமானால் வலை விரித்து பிடிக்கலாம்பிடிக்கலாம்... யானையை குழிவெட்டி பிடிக்கலாம்.. ஆனால் கொசுவுக்கு பயந்து வலைக்குள் ஒளிவது புத்திசாலித்தனமே தவிர அசிங்கம் இல்லை... உங்கள் பெற்றோரை நம்புங்கள்..
உங்கள் சகோதரனை நம்புங்கள்...
உங்கள் கணவனை பிள்ளைகளை நம்புங்கள்...

தூண்டில்காரனை நம்பாதீர்கள்.
அந்த புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம் இருக்கும்...

செந்தில்.கே. நடேசன்


டேய் நாய்களா ..........இன்னைக்கு பெண்கள் மானத்தை பற்றி பேச குரல் கொடுக்க வந்துள்ளிர்களே ....

அன்னைக்கு உலகம் முழுக்க பேச வேண்டிய நேரத்தில் எவனும் வாய் திறக்காமல் போனது ஏன்டா...........

இலங்கை ல மானம் இழந்த பெண்ணும் பெண் தானடா நாய்களா .........

அன்னைக்கு எங்கடா போனிங்க........

உலகம் முழுக்க வாய்விட்டு அழுது காப்பாற்றுங்கள் என்று சொல்லும் போது ....
அது அடுத்த நாட்டு பிரச்சினை என்று வாய் அடைத்த எத்தனை நடுநிலைவாதி நாய்கள் நம் நாட்டில் இருக்கிறது ........

இன்று போராட போர்க்கொடி தூக்கும் நாய்களே .....அங்கும் இழந்தது  மானம் தான் 

இப்போது ஏதாவது சொன்னால் அது பெண்ணுரிமை வாதிகளை சீண்டி விடுவதாக இருக்குமோ என்ற பயம் அல்லது "நானெல்லாம் யோக்கியனாக்கும்" என்று காட்டிக்கொள்ளும் ஆர்வம் தான் தெரிகிறதே தவிர யாரும் மனச்சாட்சிப்படி பேசுவதாக தெரியவே இல்லை.. நூற்றாண்டுகளாய் , ஆயிரமாண்டுகளாய் தொன்றுதொட்டு வந்த இந்திய கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் நவீன யுவதிகள் உடைத்து சிதறடிக்க பதாகைகளை ஏந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு "நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாய்"ஆண்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

நடந்த சம்பவம் நமக்கெல்லாம் செய்தி.. ஊடகங்களுக்கோ தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங் கை உயர்த்த கிடைத்த வரம்.. ஆனால் அந்த பெண்ணின் நிலை.. அந்த பெண்ணை பெற்றோரின் நிலை...??

******************************************
அந்தப் பெண் ஒன்றும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன்னுடைய பெற்றோருக்கு மருந்துவாங்கவோ , இல்லை தான் படிப்பை முடித்துவிட்டோ இரவு பதினோரு மணிக்கு வரவில்லை. ஒரு ஆண் நண்பனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்,,,
******************************************

இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதே.. அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முன்வருவாரா.??? இதனால் அவருக்கு இழப்பு என்ன?

கொஞ்ச நாளில் ஊடகங்கள் அவர்களை மறந்துவிடும். நாமும் மறந்துவிடுவோம். ஆனால் அவர்கள் உயிரோடிருப்பார்கள். இரவில் ஒரு இளம்பெண்ணுடன் ( யாரோ பெற்ற பெண்தானே ) ஜாலியாக ஊர் சுற்ற போனவர் தனக்கு மனைவியாக வேறொரு பெண்ணை தேடிப்போய் விடுவார்... ஆனால் அந்தப் பெண்ணை பெற்றவர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து பார்த்து வாழ்நாளெல்லாம் நரகம் அனுபவித்து செத்து போவார்கள்.. அதையும் மீறி யாரோ ஒரு தியாகி அந்த பெண்ணை மணம் செய்ய முன்வரலாம். ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை...

******************************************
ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே..
ஒரு பெண்ணுடன் நட்பாயிருக்க பத்து ஆண்கள் தயாராயிருப்பார்கள் ஆனால் அந்த பெண் காதலியாக இருந்தால் அவள் வேறொரு ஆணுடன் சகஜமாக பழகுவதை ஏற்க மாட்டார்கள்.. அவளே மனைவியாகிவிட்டாலோ வேறொரு ஆணுடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்... இதுதான் நிஜம்.
***********************************************
ஒரு பெண்ணுடன் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வெளியிடங்களுக்கு மிக சந்தோசமாக செல்லும் ஐந்து ஆண்கள் , அந்தப் பெண் "என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா.." என்று கேட்கும்போது மறுத்து விடுவார்கள். இதை "லவ் டுடே " என்ற படத்தில் திரு பால சேகரன் என்ற இயக்குனர் ஆணி அடித்ததுபோல் சொல்லி இருப்பார்... இதுதான் ஆணின் நிஜ முகம்..

உங்கள் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.. நீங்கள் சுதந்திரம் என்று சொல்வது உங்கள் பெற்றோரின் வயிற்றில் புளிகரைப்பதை உங்களால் இப்போது உணர முடியாது.... அப்படி உணர நீங்கள் பெற்றோராக வேண்டும்.

சும்மா அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருப்பதுமாதிரி பேசினால் மட்டும் ஆகாது... நமது கலாச்சாரத்தை விரும்பி அந்த மக்கள் வாழ ஆசைபடுகிறார்கள்.. ஆனால் வியாபாரிகளோ.. அதுதான் நிஜமான நாகரீகம் என்று ஒரு மாயையை விதைத்து அதனை வளர்க்கிறார்கள்.. அதை நம்பி அந்த நாகரீகத்தை பின்பற்ற ஆர்வமாயிருக்கிறீர்கள்.
அந்த மாயவலை உங்களை வீழ்த்தி அவர்களை பணக்காரர்கள் ஆக்கும்..

சிங்கத்தை வேண்டுமானால் வலை விரித்து பிடிக்கலாம்பிடிக்கலாம்... யானையை குழிவெட்டி பிடிக்கலாம்.. ஆனால் கொசுவுக்கு பயந்து வலைக்குள் ஒளிவது புத்திசாலித்தனமே தவிர அசிங்கம் இல்லை... உங்கள் பெற்றோரை நம்புங்கள்..
உங்கள் சகோதரனை நம்புங்கள்...
உங்கள் கணவனை பிள்ளைகளை நம்புங்கள்...

தூண்டில்காரனை நம்பாதீர்கள்.
அந்த புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம் இருக்கும்...


உங்கள் விக்னேஷ் ....................

Friday, December 21, 2012

21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன் இயங்கும்;ஒரு போதும் அழியாது!!!

நீதிக்கிரகமான சனிபகவான் துலாம் ராசிக்குள் நுழைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.10.11.12 முதல் சனிபகவான் உச்சமாகத் துவங்கிவிட்டார்.இந்த உச்சநிலையானது பொதுவாக 100 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த முறை 220 நாட்கள் இருக்கப் போகிறது.இதே கால கட்டத்தில் கலியுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராகு பகவான் 2.12.12 அன்று துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
ராகு பகவான் நிழல் கிரகமாக இருந்தாலும்,அவருடன் யார் சேருகிறார்களோ அவரது சுபாவத்தை வாங்கி,பல மடங்கு பூமியில் மனிதர்களிடையே வெளிப்படுத்துவது அவரது வழக்கம்.யுத்தகிரகமான செவ்வாயுடன் சேரும்போது,திடீர் கலகங்களும்,போராட்டங்களும் அதிகரிக்கும்;சுக்கிரனுடன் சேரும் போது உலகெங்கும் முறையற்ற உறவுகள் பெருகும்;வக்கிரமான உறவுகள் பிரபலமடையும்.புதனுடன் சேரும் போது வர்த்தகத்தில் புதுப்புது குற்றங்கள் நடைபெறும்.சந்திரனுடன் சேரும்போது நம் அனைவருக்குமே விபரீதமான எண்ணங்கள் உருவாகும்.குருவுடன் சேரும் போது காவி உடுத்திய போலிகள் அவமானப்படுவார்கள்;போலி நிதிநிறுவனங்கள் இழுத்து மூடப்படும்;ஊழல் செய்த நிதித்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பாராமல் சிக்கி சிறைக்குச் செல்வார்கள்.

அதே போல,நீதி நேர்மை நியாயம் இவைகளைப் பாதுகாப்பது சனிபகவானே! நம் ஒவ்வொருவருக்கும் ஆயுளையும்,தொழிலையும் தருபவரும் அவரே! அவர் உச்சமாகும்போது ராகு இணைவது என்பது சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்த அநீதிகளுக்கு உரிய நீதி இந்த ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்க இருக்கிறது.(சனிபகவான் 16.12.2014 வரையிலும்,ராகு பகவான் 21.6.2014 வரையிலும் துலாம் ராசியில் பயணிக்கிறார்கள்)

தீவிரவாதம்,ஒழுங்கீனம்,முறையற்ற உறவுகள்,வதந்தி,மல்டி லெவல் மார்கெட்டிங்,குறைந்த உழைப்பின் மூலமாக மித மிஞ்சிய வருமானம் பார்த்தல்,கமிஷன் தரக்  கூடிய தொழில்கள்,பிறப்பு உறுப்பு,அளவற்ற காம இச்சை,இன்றைய ஆங்கில மருத்துவம்,விதவை,சர்ப்பங்கள்,விஷப் பொருட்கள்,அதிரடி முன்னேற்றம்,உளவுத் துறை,கணிப்பொறி,செல்போன், நெட்வொர்க்குகள்,குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் போன்றவைகளுக்கு ராகு பகவான் மட்டுமே காரகத்துவமாகிறார்.
தொழில்,நீதி நியாயம்,ஆயுள்,மனித எலும்பு,இரும்புத்தொழில்,அடிமைத் தொழில்,அடிமைகள் வாழுமிடம், தொழிலாளர்கள் தங்குமிடம்,கீழ்ஜாதி மக்கள் இவைகளுக்கு காரகத்துவம் சனிபகவான் ஆவார்.


ராகு  தனித்து இருக்கும்போது ஒருவிதமாகச் செயல்படுகிறார்;அவரே ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்த கிரகத்தின் காரகத்துவத்தை வாங்கி பூமியிலிருப்பவர்களுக்கு வழங்குகிறார்.எனவே, அதர்மப்பாதையில் தர்மம் காக்கப்பட இருக்கிறது.


அதே சமயத்தில்,15.12.2012 சனிக்கிழமையன்று யுத்தக்கிரகமான செவ்வாய் தனது  உச்சராசியான மகர ராசிக்குள் நுழைகிறார்.நுழைந்து 23.1.2013 வரை மகரராசியைக் கடக்கிறார்.இந்த சூழ்நிலையில் உச்ச செவ்வாய் முழுப்பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.ஏற்கனவே,உச்சமாகிவிட்ட நீதிக்கிரகமான சனிபகவானும் தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையால் அதே கடகராசியைப் பார்வையிடுகிறார்.கடகராசியில் நாம் வாழும் பூமி பிறந்தது(???!!).நாம் வாழும் இந்தியாவும் கடகராசியில் சுதந்திரமடைந்திருக்கிறது.

உச்சச் செவ்வாயானவர் தனது நான்காம் பார்வையால் மேஷராசியை இதே 45 நாட்களுக்கு பார்க்கிறார்;உச்ச சனியானனவர் தனது ஏழாம் பார்வையால் மேஷராசியை ஏற்கனவே பார்த்து வருகிறார்.இதெல்லாம் ஜோதிட ஆர்வலர்களுக்கும்,ஜோதிடர்களுக்கும் புரியும் விஷயம்.எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக விளக்கியிருக்கிறேன்.


இந்த 45 நாட்களில் நாம் வாழும் பூமியும், இந்தியாவும் போரால்,கலகத்தால்,அன்னிய நாட்டு உளவுத்துறைகளின் குரங்குச் சேஷ்டைகளால் கடுமையாக பாதிக்கப்படும்;நயவஞ்சகத்தால் கோடிகளைச் சுருட்டியவர்கள் மாட்டிக்கொள்வார்கள்;தண்டனைக்குள்ளாவார்கள்;அல்லது அவமானப்படுவார்கள்;அவர்கள் அரசியலில் மீண்டும் தலையெடுக்கவேமுடியாது;


தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமல்ல;உலகம்முழுவதுமே பண மோசடி செய்த அயோக்கியர்கள் வகையாகச் சிக்கிச் சீரழிவார்கள்;கறுப்புப் பணம் மொத்தமும் அரசாங்கத்தை வந்து சேரும்.
கடகம் மற்றும் மேஷ ராசியினர்தான் அதிகமாக இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணாதீர்கள்;அனைத்து ராசியினரும் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள்;தனுசு ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வாகனப்பயணத்தின் போதும்,சாலையைக் கடக்கும்போதும்,ரயில் பாதையைக்கடக்கும் போதும் மிக  நிதானமாக இருக்க வேண்டும்.கடகராசியினர் கடந்த ஓராண்டில் செய்த தப்புக்களின் விளைவுகள் கர்மவினையாக திரும்பவரும்;மிதுனராசியினர் பேசும் பேச்சுக்கள் குடும்பத்திலும்,அலுவலகத்திலும்  குழப்பத்தை உருவாக்கும்;


 கன்னிராசியினர் அளவுக்கு மீறி பொறுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது; துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் காலபைரவ மந்திரத்தையோ,அவர்களுடைய இஷ்ட தெய்வ மந்திரத்தையோ விடாமல் ஜபித்து வருவது அவசியம்.கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில்  பிறந்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

கடந்த ஒரு வருடம் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் அல்லது தினமும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டு வருபவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னைகள் வராது;ஏழரைச்சனி நடைபெறும் கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினரும்,அஷ்டமச்சனி நடைபெறும் மீன ராசியினரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகும்.எனவே,இன்றிலிருந்தாவது ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.


முனீஸ்வரரைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள்,முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் தினமும் ஏதாவது ஒரு மிருகம் அல்லது பறவைக்கு உணவு தானம் செய்வது நல்லது;ஜோதிடர்கள் கண்டிப்பாக ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்;ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது;மது அருந்தக் கூடாது;முறையற்ற உறவில் ஈடுபடவே கூடாது.


பூமியின் புவியியல் அமைப்பில் மகத்தான மாற்றங்கள் நிகழும் காலம் இந்த 45 நாட்கள் ஆகும்.அல்லது மகத்தான மாற்றங்கள் நிகழ்வதற்கான அடையாளங்கள் வெளிப்படும்;இதே போன்ற சூழ்நிலை 10.4.2013 புதன் முதல் 21.5.2013 செவ்வாய் வரையிலும்;
19.8.2013 திங்கள் முதல் 8.10.2013 செவ்வாய் வரையிலும்; ஏற்பட இருக்கிறது.                                            இதோ,சீனாவும் ஜப்பானும் ஒரு தீவுக்காக நேற்று 12.12.2012 அன்று மோதத் துவங்கிவிட்டார்கள்;உலக நாடுகளில் பல தமது வெளியுறவுக்கொள்கைகளின் படி செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகும்;போராட்டங்களும்,யுத்த முன்னேற்பாடுகளும் துவங்கிவிட்டன;அரசின் கொள்கையை வடிவமைப்பவர்களின் மனதில் பேராசை மற்றும் போர்வெறி உருவாகியிருக்கிறது.


இந்தக் கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது தான்;அப்படிச் சென்று குறைந்தது 5 கிலோ நவதானியங்களையும்,குறைந்தது 1 கிலோ டயமண்டு கல்கண்டுகளையும் கிரிவலப்பாதையில் தூவ வேண்டும்.ஒவ்வொரு முறையும் கிரிவலம் வரும்போதும் மஞ்சள் நிற ஆடை அணிந்து ,இரு கைகளிலும் ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக்  கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக மனித உயிர்ச் சேதம் நிகழாது.இனி ஒரு போதும் அரசுகளை நம்பமுடியாத சூழ்நிலை இருப்பதால்,நாம் வாழும் பூமியை நாமே பாதுகாத்திட ஆன்மீக முயற்சிகளை எடுப்போம்;