Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, July 16, 2012

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து போர் குற்றம் புரிந்த கொலைகாரர்களை தண்டிக்க வேண்டியது இந்தியாவின் கடமை.




வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் எந்த பக்கம் போறதுன்னு முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும் -- இது நண்பன் பட வசனம்.    இது நண்பர்களுக்கு மட்டும் இல்லை,  நாடுகளுக்கும் உண்டு.  

இப்போது இந்தியாவிற்கு. 

சமீபத்தில் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம்  ஜெனிவாவில் நடைபெற்றது.  இக் கூட்டடத்தில்  இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை கண்டித்தும்,  விசாரணை நடத்துவதற்கும் அமெரிக்க ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

பல நாடுகளும் பரபரப்பாக இதை பற்றி பேச ஆரம்பித்து விட்டது.  சிலருக்கு மனதில் சந்தேகம் வரும். 

தனக்கு பிடிக்கவில்லை என்றாலே,  எதாவது நொண்டி காரணத்தை சொல்லி விட்டு குண்டு போடும் அமெரிக்காவிற்கு,  மனித உரிமைகள் பற்றி பேச தகுதி உண்டா என்பதுதான் அது. 

அமெரிக்கா நடத்தியது  எல்லாமே நேரடி யுத்தங்கள்.  அப்படியே மீறி இருந்தாலும் அதை பற்றி பேச இது தருணம் அல்ல.

ஆனால் மதிப்போடும், மரியாதையோடும், சுய கவுரவத்தோடும், பாதுகாப்பு உணர்வோடும் பாதுகாத்திருக்க வேண்டிய தன் நாட்டு மக்களையே கொன்று குவித்து,  சொத்துக்களை சூறையாடி,  அப்பாவி பெண்களை கற்பழித்து,  குழந்தைகளை கூட இறக்கம் இல்லாமல் கொன்று,  மருத்துவமனைகள் மீதும் கூட குண்டு வீசி, கோர தாண்டவம் ஆடி முடித்திருக்கிறது இலங்கை.

அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக மடிந்த போது,  தட்டி கேட்க வேண்டிய இந்தியா,  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்பதுதான் வேதனை.

இலங்கை தமிழர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை.  இந்தியாவோடும்,  தமிழர்களோடும் தொப்புள் கொடி உறவாக இருப்பவர்கள்.  வெறும் 50 மைல் தொலைவில் நம் சொந்தங்கள் அழுது துடித்த போது,  இந்தியா காதை மட்டும் அல்ல ... கண்ணையும் சேர்த்து முடிக்கொண்டது.

இது அடுத்த நாட்டு விஷயமாம்.

இந்தியாவின் வெளிஉறவு கொள்கை என்பது விநோதமானது.  எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் இந்த கைபிள்ளை என்ற கதைதான்.  இல்லாவிட்டால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுடும் போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்குமா இந்தியா.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ,  கடுமையானது, கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம், பொறுத்து கொள்ள முடியாது, சகித்து கொள்ள முடியாது என்று அறிக்கை வீட்டு விட்டு அமைதியாகி விடுவதுதான் இந்தியாவின் வெளிஉறவு கொள்கை.

இந்தியா அயல் நாட்டு விவகாரத்தில் தலை இட்டதே இல்லையா.

இந்திராகாந்தி  அம்மையார் பாக்கிஸ்தான் விஷயத்தில்  தலை இட்டு தான் பங்களாதேஷ் உருவானது.

ஏன்?  அங்கு வாழ்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா.  நம் சொந்தங்களோ.  இலங்கையில் இருப்பவர்கள் நம் சொந்தம் இல்லையா....ரத்தம் இல்லையா .... தொப்புள் கொடி உறவு இல்லையா...

இலங்கையில்  தமிழர்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று இருப்பது வளரும் வல்லரசுக்கு நல்லதல்ல.

இந்தியா நினைத்திருந்தால் ஒரு வார்த்தையில் போர் நின்றிருக்கும். இலங்கை சமாதானத்திருக்கு வந்திருக்கும். அப்பாவி  தமிழர்கள் கொல்லபட்டிருக்க மாட்டார்கள்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாய்,  யாரும் கேட்க ஆள் இல்லாத அனாதையாய்  அலையவேண்டி வந்திருக்காது.

இந்தியாவின் மவுனத்திருக்கும்,  பாராமுகத்திற்கும் காரணம் உண்டு. 

ராஜீவ்காந்தி படுகொலை.

நான் இந்தியன்.  இந்தியனான என்னால் இந்த படுகொலையை ஏற்று கொள்ள முடியாது.  தொலை நோக்கு பார்வை கொண்ட ராஜிவ்காந்தியை இந்தியா இழந்ததால் 20 வருடங்கள் பின் நோக்கி தலைப்பட்டது இந்தியா.

என் வீட்டிற்குள் நுழைந்து, என் வீட்டில் உள்ளவர்களை அடித்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் வேடிக்கை பார்க்க மனம் வராது.

இது தவறுதான்.  நடந்துவிட்ட ஒரு சம்பவம்.  இதையே ஒரு காரணமாக வைத்து கொண்டு அப்பாவி தமிழர்களை தவிக்க விடுவது என்ன நியாயம்.

நான் விடுதலை புலிகளை ஆதரிக்கவில்லை.  அவர்கள் செய்த எல்லாமே நியாயம் என்று நான் சொல்ல மாட்டேன்.

இன்று கேட்க நாதி இல்லாமல் ஈழ தமிழர்கள் தவிக்க காரணமே அவர்கள்தான். 

எந்த நோக்கத்திற்காக களத்தில் நின்றார்களோ, அந்த நோக்கத்திற்காக களத்தில் நின்ற  சக சகோதர அமைப்புகளை ஒடுக்கினார்கள்.

 ஒழித்து கட்டினார்கள்.  அமைதிதலைவர் அமிர்தலிங்கத்தை அழித்தார்கள்.

 தங்களை தவிர வேறு யாரும் இல்லை இல்லை என்ற நிலை வந்தபோது,  யார் இல்லாமல் தனி நாடு வரமுடியாதோ, யார் இல்லாமல் அங்கே அமைதி நிலவாதோ,  அங்கேயே கை வைத்தார்கள்.

ராஜீவ் படுகொலை. 

இதற்கு ஆயிரம்  காரணம் சொல்லலாம்.  இந்த படுகொலையை நியாய படுத்தினால்,  இந்தியாவின் இந்த நிலையும் நியாயம் என்பதுதான் உண்மை. ஆனால் விவாதம் செய்ய இதுவல்ல நேரம்.

வன்னியில் 40000 தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷ்சே மற்றும் அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷேவும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  அதற்கு இந்தியா என்ன செய்ய போகிறது என்பது தான் கேள்வி.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டு என்றார் இயேசு நாதர்.  ஆனால் மறுகன்னத்தில் அறைந்தால் ஏசுவுக்கும் கோவம் வரும்.

ஆனால் இன்னும் ஒரு படி மேலே போய் முதுகை திருப்பி காட்டும் இந்தியா இந்த விஷயத்தில் வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லதல்ல. 

இலங்கையில்..............பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு,  சீனாவின் நேரடி தொடர்பு,  கால் பதிக்க துடிக்கும் அமெரிக்கா  என்று பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்து,  தமிழர்கள் விஷயத்தில் தவறான முடிவை இந்தியா எடுத்தால்,  உலக அளவில் இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும்.

இன்று ஐநா சபையாக இருந்தால் என்ன,  மனித  உரிமைகள் சபையாக இருந்தால் என்ன...முதல் முழக்கம் இட்டுருக்க இந்தியா,  இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து போர் குற்றம் புரிந்த கொலைகாரர்களை  தண்டிக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

அங்கே வாழும் தமிழர்கள் கவுரவத்தோடு வாழ,  ஒரு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. 

இது மனிதாபிமான அடிப்படையில் மட்டும் அல்ல,  நம் ரத்தங்கள் சுயமாய் வாழவும்,  சூறையாடிய கயவர்கள் தண்டனை பெறவும் தான். 

வரலாற்று தவறை இந்தியா செய்ய கூடாது...... செய்யவே கூடாது...விக்கி 

உலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...


நீ விரும்பியதை செய்.  

உன் உள்ளுணர்வு சொல்வதை கேள்.

உன்னை நம்பு.  

உன் மனம் கூறுவதை கவனி. 

எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உன்னை உந்துகிறதோ அந்த வழியில் நட.  

அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள்.  உங்களுக்கு பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்கள்.

ஊருக்கு செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக்கொள்வார்கள். எந்த ஊருக்கு போக வேண்டும் என்கிற தெளிவில்லாமல் என்று வைத்து கொள்ளுங்கள் ,  அது போல ஏதோ சோற்று பாட்டிற்கு  வேலை  என்று,  ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து  எல்லாம் சரிதான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.

வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையை கேட்டு பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள். 

இந்த உலகம்  நம் காதுபட   சதா  சொல்லி கொண்டிருக்கிறது.  

வங்கி வேலைக்கு போ.... நிறைய பணம் கிடைக்கும். நல்ல இடத்தில் இருந்த பெண் கொடுப்பார்கள். 

சொந்த தொழில் இறங்கு.  ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். 

தாலுக்கா ஆபிஸ் வேலையில் இறங்கு.  ஆயுசு பூராவுக்கும் யாரும் உன்னை அசைக்க முடியாது. 

ஆசிரியர் வேலைக்கு போ.  அதிக கஷ்டமில்லை. இப்படி பல வாசகங்களை கேட்கிறோம். 

நமக்கோ வாலிப வயசு,  அனுபவமோ இல்லை. பெரியவர்களை சார்ந்தே பழகி இருக்கிறோம்.  எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்து கொள்கிறோம். 

பின்  கொஞ்ச  நாளில்..... நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனையாக எழுகிறது.  என்ன சாதிக்கிறேன் இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.

இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை.  என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோவமாக எழுகிறது.

அக்கவுன்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை இருந்தது. நாடகம் சினிமாவில் மிகவும் வாய்ப்பு இருந்தது.  லாப நஷ்டம் பாதுகாப்பு என்று பார்க்காமல் கலைத்துறையை தேர்ந்தெடுத்தார் பாலசந்தர்.

கம்புட்டர் கம்பெனியில் வேலை.  எனினும் மனத்திலோ எழுதும் உந்துதல். அன்று உந்துதலை பின்பற்றிய சுஜாதா இன்று எழுத்துலகில் ஒரு தனி சிறப்பிடத்தை பெற்றார். 

அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எதிர்ப்பு இல்லை என்று என்னுகிறிர்களா?  லாப நஷ்டங்கள் ஏற்படுவதில்லை என்று கூற முடியுமா.

உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையை தேர்ந்தேடுத்து கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

தன்னை நம்புகிறார்கள் தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.

தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன் படுகிறார்கள்.  அவர்கள் சவால்களை கண்டு அஞ்சுவதில்லை.

சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழு திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்கு தெரியும்.

இது வாழ்க்கை வாழ்ந்து பார் ---விக்னேஷ்


முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன்....
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்.....
உன் லட்சியம்....?

 
இது சாதாரண வார்த்தை இல்லை. வாழ்க்கையில் உயர துடிக்கும் ஒவ்வொருவர்க்கும் இது பொன் மொழி.
 
வணக்கம் நண்பர்களே... !

நீங்கள் இந்த பேஸ்புக்கில் இருப்பதன் காரணம்  என்ன?
 
நல்ல நண்பர்களை தேட என்பது உங்கள் பதிலாக இருக்கும். 

நல்ல கருத்துக்களை அறிந்து கொள்ள என்பது இன்னொரு பதிலாக இருக்கும். 

அல்லது என் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு வழி என்பதாக இருக்கும். 

நீங்கள் இளைஞர்கள்.  

வரும்கால இந்தியாவின் தூண்கள். 

உங்களுக்கு என்று ஆசைகள் இருக்கும், 

லெட்சியங்கள் இருக்கும், 

எதிர்காலத்தில் இப்படி வாழ வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். அதற்காக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள்.

இந்த கேள்வி எதற்கு தெரியுமா? 

எண்ணங்கள் தான் மனிதனை ஆள்கின்றன என்கிறார்கள். 

உங்களுக்கு டாக்டராகணும்னு ஆசை இருக்கலாம். 

வைக்கிலாகனும்னு ஒரே முடிவில் இருக்கலாம். 

நான் பெரிய கோடிஸ்வரானாகனும் என்பது லெட்சியமாக இருக்கலாம். 

நான் பெரிய தொழில் அதிபராகனும் இப்படி எத்தனையோ கனவுகள் இருக்கலாம்.

அதை பத்தியே எந்த நேரமும் யோசியுங்க. 

நீ எதை நினைக்கிறாயோ அதாகவே மாறுவாய் என்பது தான் உண்மை. சில வேலையற்ற வெங்காயங்கள் இருக்கு.

ஆபாச படங்களை அனுப்புவது.  விடியோக்களை அனுப்புவது,  யாராவது ஒரு பெண் ஆன்லைனில் வந்து விட்டால் போதும் ஹாய் ஹாய் ஹாய் என்று மேஜெஸ் அனுப்புவதையே வாடிக்கையாக வைத்து இருப்பார்கள்.

அவர்களை பற்றி நாம் கவலை பட தேவையில்லை. அது மாதிரியான விஷ ஜந்துக்களை ஒதுக்கி புறம் தள்ளுவோம். 

அந்த மாதிரியான நபர்களை உங்கள் முக பக்கத்தில் தடை செய்யுங்கள். உங்கள் உயர்ந்த எண்ணங்களை நோக்கி நடை போடுங்கள். வாழ்க்கை என்பது ஓட்ட பந்தயம். நீங்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

கொஞ்சம் தாமதித்தாலும் போதும் உங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு போக ஒரு கூட்டமே காத்திருக்கிறது. 

இன்னும் விளக்கமாக சொல்லவா? 

இந்த வருடம் நீங்கள் ஒரு தேர்வு எழுதினீர்கள் என்று வைத்து கொள்வோம். உடன் எழுதியது 5 லட்சம் பேராக இருப்பார்கள். இது ஒரு தோராயமான கணக்கு. 

ஒருவேளை நீங்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்தால், உங்களுக்கு முன்னால்  5 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நீங்கள் தேர்வு எழுதும் போது இன்னொரு  5 லட்சம் பேர் போட்டியாக வந்து விடுவார்கள். ஆக பத்து லட்சம் பேரோடு நீங்க போட்டி போட வேண்டி இருக்கும்.

அதனால் ஓடுங்கள்.. உங்கள் ஆசைகளை லெட்சியங்களை தேடுங்கள். அது தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

இது வாழ்க்கை வாழ்ந்து பார் ---விக்னேஷ் 

விவேகானந்தரின் வீர முரசு – மதம்



                         விவேகானந்தரின் வீர முரசு – மதம்

மனிதனின் ஏற்கனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.

மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது,சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை குறிப்பாக நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படி தலையிட்டதன் காரணமாகவே என்பதையும் மறக்கக் கூடாது.
ஒருமதம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது உத்வேகம் மிக்கதாக இருக்க வேண்டும். அதே வேளையில் அதில் உட்பிரிவுகள் பெருகிக் கொண்டே போகின்ற அபாயத்தை  தடுக்க வேண்டும். பிரிவினை வாதம் அற்ற பிரிவாக இருப்பதன் மூலம் இதை நாம் தடுக்க முடியும்; ஏனெனில் இதில் ஒரு பிரிவிற்கான அனுகூலங்கள் அனைத்தும் இருக்கும், உலகம் தழுவிய ஒரு மாதத்திற்கான பரந்த தன்மையும் இருக்கும். எப்போது ஆன்மா ‘அன்பான இறைவனின்’ தேவையை ஆசையை, ஏக்கத்தை உணருமோ அப்போதுதான் மத உணர்வே ஆரம்பிக்கிறது, அதற்கு முன்பு அல்ல.
மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது —– இதுதான் மதத்தின் முழுப்பரிமாணம்.
புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும்போதுதான் மனிதனின் இதயத்தில்மத உணர்வு உதயமாகிறது. ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும்,அவன் தன் சுதந்திரத்தை வலியுறுத்த உதவி செய்வதும் தான் மதத்தின் முழுநோக்கம்.
என்னென்ன தீமைகளுக்கு மதம் காரணம் என்று சொல்கிறார்களோ அவை எதற்கும் மதம் காரணம் அல்ல. எந்த மதமும் மனிதர்களைக் கொடுமைப்படுத்தவில்லை, எந்த மதமும் சுனியக்காரிகளைக் கொளுத்தவில்லை, எந்த மதமும் இத்தகைய செயல்களைச் செய்யவில்லை, அப்படியானால் இவற்றைச் செய்யும்படி மக்களைத் தூண்டியது எது? அரசியல், ஒருபோதும் மதம் அல்ல. மதத்தின் பெயரில் அரசியல் நிலவுமானால் அது யாருடைய தவறு?
மனிதன் இறையனுபூதி பெறவேண்டும், அவரை உணர வேண்டும், அவரை பார்க்க வேண்டும், அவருடன் பேசவேண்டும். அதுதான் மதம்.

மதம் என்பது அனுபூதி, வெறும் பேச்சோ, நம்ப முயற்சிப்பதோ, இருட்டில் தேடுவதோ,முன்னோர்களின் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துவிட்டு அதுதான் மதம் என்று நினைப்பதோ,மத உண்மைகளை அரசியலாக்குவதோ மதம் அல்லவே அல்ல.
பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெரும். ஆயிரக்கணக்கான ஒரே  விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.
ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இந்த வாழ்விற்கும் உதவ வேண்டும்,மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும் அதே வேளையில், மரணத்தை ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.
மதத்தைப் பற்றிக்கொண்டு சண்டையில் இறங்காதே. மதச்சண்டைகளும் வாதங்களும் அறிவிமையின் அறிகுறி. தூய்மையும் அறிவும் வெளியேறி, இதயம் வரலும்போதே சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னாள் அல்ல.
கொள்கைகளையோ, நம்பிக்கைகளையோ, மதப்பிரிவுகலையோ கோவில்களையோ பொருட்படுத்தாதே. ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் சாரமாக அமைகின்ற அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை என்ன? ஒரு மனிதனிடம் இந்த அறிவு முதிரும் அளவிற்கே,நன்மை செய்யும் ஆற்றல் அவனிடம் அதிகரிக்கின்றது. முதலில் அந்த அறிவைத் தேடித் பெறு. யாரையும் குறைகூறாதே.ஏனெனில் எல்லா கொள்கைகளிலும் முடிவுகளிலும் சிறிதாவது நன்மையுள்ளது. மதம் என்பது கொள்கைகளோ கோட்பாடுகளோ அல்ல; அனுபூதியே மதம். அதை உனது வாழ்க்கையில் காட்டு.

தமிழக இளைஞர்களுக்கு… -சுவாமி விவேகானந்தர்


சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னுடைய சீடர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இவை:

1. சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும். அறிவாற்றலும் தூய்மையும் மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள். நாம் இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்.
2. சென்னையைப் பற்றி எனக்கு எப்போதுமே மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவையே மூழ்கடிக்க இருக்கும் மிகவும் பெரிய ஓர் ஆன்மிகப் பேரலை, சென்னையிலிருந்தே கிளம்பி வரப் போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது.
3. சுயநலமற்றவர்களாகவும், முழு ஆற்றலையும் கொண்டு தேச முன்னேற்றத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் – உயிர் போகும்வரையிலும் பாடுபடத் தயாராக இருப்பவர் களாகவும் உள்ள எத்தனை பேரை சென்னை தந்துதவ தயாராக இருக்கிறது?
4. எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே தைரியமுள்ள என் இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள்!
சென்னை மக்களாகிய உங்களிடம் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
5. நீங்கள் உண்மையில் என் குழைந்தைகள் என்றால், எதற்கும் பயப்படமாட்டீர்கள். சிங்கங்கலாகத் திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும்.கோழைத்தனம் கூடவே கூடாது.
உயிரே போவதானாலும் நேர்மையுடன் இருங்கள்.
6. நமது நாட்டிற்கு வீரர்களே தேவைப்படுகிறார்கள். வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கை எல்லாம் சென்னையிடமே இருக்கிறது. தாங்கள் பணியைத் செய்து முடிப்பதற்கு நெருப்பில் குதிக்க வேண்டியது அவசியமானால், அப்படியே செய்வதற்கும் என் குழைந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.
7.தைரியம் மிக்க என் இளைஞர்களே! நீங்கள் அனைவரும் மத்தான காரியங்களைச் சாதிப்பதற்குப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்.
8. வாழ்நாள் குறுகியது. ஒரு பெரிய காரியத்தின் பொருட்டு அதைத் தியாகம் செய்துவிடுங்கள்! நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு வேலை செய்யுங்கள்! வேலை செய்யுங்கள்!

Monday, July 9, 2012

நட்புக்கில்லை எல்லை......வெண் மேகம் போல வெள்ளை....விக்னேஷ்.


நட்புக்கில்லை எல்லை ...


வெண் மேகம் போல வெள்ளை

நீ வந்த பின்னே வான்மழை....


 


கையோடு கை சேர்த்து....
உன் தோலில் தலை சாய்த்து.....
நான் போகும் இடம் சொர்க்கமே...... 


அட வானம் வெகு தூரமே......
நம் நடப்பை பற்றி பேசுமே ..... விக்னேஷ் (உலகத்தமிழர் நெட்வொர்க்) 







விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சே‌ர்‌ந்த சர‌ண்யா, தனது உடல் உறுப்புகளை 7 பேருக்கு வழ‌ங்‌கி அவ‌ர்க‌ளு‌க்கு மறுவாழ்வு கொடு‌த்து‌ள்ளா‌ர். ''மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்‌கிறா‌‌ள்'' எ‌ன்று சர‌ண்யா த‌ந்தை கூறு‌கிறா‌ர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்த கே.மணியன் - கலாம‌ணி த‌ம்ப‌திய‌ரி‌ன் மூ‌த்த மகள் சரண்யா. சிறுவயது முதலே படிப்பில் சுட்டி சர‌‌ண்யா. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தா‌ர். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தா‌ர்.

21 வயதான சர‌ண்யா, பி.இ. எலெக்டிரிக்கல் படி‌த்து‌ள்ளா‌ர். கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌திதா‌‌ன் தே‌ர்வு முடிவு வ‌ந்து‌ள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சர‌ண்யா,தனது உறவினர்கள், தோழிகள் 5 பேருடன் சேல‌த்‌தி‌ல் நட‌ந்த கரு‌த்தர‌ங்‌‌கி‌ல் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு கா‌ரி‌‌ல் கோவை ‌திரு‌ம்‌பியு‌ள்ளா‌ர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சர‌ண்யா வ‌ந்த கா‌ர் ‌மீது லாரி மோதிய ‌விப‌த்‌தி‌ல் 4 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ர‌த்த வெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌கிட‌ந்தசரண்யாவும், தோழி பானுப்பிரியாவும் கோவை அரசு மருத்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். சர‌‌ண்யாவை ப‌ரிசோதனை செ‌ய்த ட‌ா‌க்ட‌ர்க‌ள், சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தந்தை‌‌யிட‌ம் கூ‌றி‌‌வி‌ட்டன‌ர்.

தா‌ன் வள‌ர்‌த்த மகள் இறந்து போகும் நிலையில் உள்ள சோகம் ஒருபுறம் இதயத்தை கனக்க வைத்தாலும், மகளின் உடல் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு தானம் செய்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும், அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த த‌ந்தை ம‌ணிய‌ன், மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தா‌ர்.

செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌க்கு சரண்யாவின் ஈரல், இருதய வால்வு உறுப்புக‌ள் தானமாக வழ‌ங்க‌ப்ப‌ட்டதோடு, இர‌ண்டு நோயாளிக‌ள் சர‌ண்யாவா‌ல் வா‌ழ்வு பெ‌ற்றன‌ர்.

சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டோடு, இர‌ண்டு பே‌ரு‌க்கு க‌ண்க‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்டது.சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த‌ப்ப‌ட்டது.

சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை, கோவையில் உள்ள 7 பேர் மறுவாழ்வு பெற்றன‌ர். சரண்யாவின் உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச்செல்வதை பார்த்த மணியன், அவருடைய மனைவி கலாமணி, தங்கை அர்ச்சனா கண்கலங்கியபடி அனுப்பி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியது.

சரண்யாவின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்‌தி‌ உ‌ள்ளதாக கே.எம்.சி.எச். மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூ‌றினா‌ர்.

''ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்'' எ‌ன்று த‌ந்தை ம‌‌ணிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மக‌ளை இழ‌ந்த வேதனை‌யிலும், உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்துவிடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள்'' எ‌ன்று கண்ணீர் மல்க கூ‌றியு‌ள்ளா‌ர் மணியன்.

விபத்தில் கோவையை சேர்ந்த மாணவி சாலினா, ஓ‌ட்டுந‌ர் செந்தில்குமார், மாணவர்க‌ள் ஆனந்தகுமார், கோகுல் பிரபு ஆகியோர் இறந்தனர். இவர்களில் மாணவி சாலினா, மூளைச்சாவு ஏற்பட்ட சரண்யாவின் தோழி. அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்த இருவரு‌ம் எல்.கே.ஜி. முதல் பொ‌றி‌யிய‌ல் படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள். பொ‌றி‌யிய‌ல் படிப்பி‌ல் இருவரும் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

சென்னை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் தேர்வு பெற்று ஆ‌ண்டி‌ற்கு ரூ.3.56 லட்சம் ஊதியத்தில் பணியாற்றுவதற்காக காத்திருந்தனர். கடந்த 30ஆ‌ம் தேதி மாணவி சாலினா இறந்து போனார். நேற்று சரண்யா இறந்து போனார்.

சர‌ண்யா இற‌க்க‌வி‌ல்லை, 7 பேரு‌க்கு தனது உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்!



ஒரு நாள் வாழ்ந்தாளும் இவர்களை போல் வாழனும் ,,,,,,விக்னேஷ் 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை.......விக்கி

உலகத்தமிழர் பதிவு--விக்கி

ஐந்து வருடங்களுக்கு முன் பொறியியற் கல்லூரிகள் அது அமைந்திருந்த மாவட்டத்தில் இருந்த அல்லது அதன் அருகில் இருந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த வேளையில் 2005ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை சீராக்குகிறோம் என்று அறை கூவல் விடுத்தும் மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டும் அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.

அப்போது தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் தன் வசம் ஆக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதே உண்மை. மிகுந்த எதிர்ப்பார்ப்போடு 2005ல் நிறைய புதுக் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்துக் கல்லூரிகளையும் இணைக்கப்பட்ட புதிதில் அதாவது 2005ல் எதிர்ப்பார்க்கப்பட்ட தரம் இல்லாவிட்டாலும் ஓரளவு சொல்லிக் கொள்ளக்கூடிய தரத்தோடு விளங்கியது. இது 2005ல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படித்த மாணவர்களிடம் கேட்டால் தெரியும். தரம் என்று நான் குறிப்பிடுவது கேள்வித்தாள் கேட்கும் முறை, விடைத்தாள் திருத்தும் முறை, தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளிவிடுவது. இதில் நான் பாடத்தை நடத்தும் முறையைக் கூறாதது ஏனெனில் மேற்கூறப்பட்ட அனைத்தும் தரத்தோடு இருந்து விட்டால் பாடத்தை நடத்தும் முறை தரத்தோடு இருந்தே ஆக வேண்டும். வருடங்கள் ஆக ஆக பல்கலைக்கழகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே வந்தது. இடையில் அரசியல் பிரமுகர்கள் பினாமி பெயரில் பலக் கல்லூரிகளை முளைக்கச் செய்தனர். ஓரளவு தரத்தோடு இருந்த காரணத்தினால் அதிகமான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர். அளவுக்கு அதிகமான கல்லூரிகளும் அதிகளவிலான தோல்வி அடைந்த மாணவர்களின் பதிவையும் சரிவர மேலாண் செய்யத் தெரியாத காரணத்தினால் கேள்வித்தாள் கேட்கும் முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறையில் இருந்த தரத்தை சிறிது தளர்த்தியது. இந்த தளர்த்தலினால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது என்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் தேர்வில் தேறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தரத்தை தளர்த்துவது முட்டாள்தனமாக இல்லையா?

தொழில்நுட்பத்தின் உச்சியில் இருக்கும் யுகத்தில் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமே இப்படி செய்யலாமா?

பின்பு மீண்டும் புதிதாக துவக்கப்பட்ட கல்லூரிகளாலும் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையாலும் தனது தரத்தை மேலும் தளர்த்தியது இப்பல்கலைக்கழகம். ஒரு சமயத்தில் 75% முதல் மதிப்பெண்ணாக அறிவித்த இப்பல்கலைக்கழகம் இன்று 85% என்பது சராசரி மதிப்பெண். ஒரு காலத்தில், அதாவது 2005 2006ல், 80% என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதே பல்கலைக்கழகத்தில் இன்று 95% பெறுவது என்பது ஒன்றும் கடினமல்ல. அப்போது தான் ஒரு முக்கியமான விஷயம் எனக்கு புலப்பட்டது. வெறும் மூன்று மணி நேரத்தேர்வில் ஒருவனின் அறிவை சோதித்து விட முடியாது என்பதே அது.

95% பெற்ற அனைவரும் அறிவாளிகளும் அல்ல!!!
75% பெற்ற அனைவரும் முட்டாள்களும் அல்ல!!!

உலகத்தரம் உலகத்தரம் என்று அனைவரும் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப நூற்றாண்டில் இந்தியத் தரத்தைக் கூட இப்பல்கலைக்கழகம் அடையாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

நிலைமை இவ்வாறிருக்க, இப்பல்கலைக்கழகமோ மீண்டும் தமிழ்நாட்டின் பழைய நிலைமைக்கே கொண்டு செல்வதாக அறிவித்தது. அதன் பலன் தான்
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி
அண்ணா பல்கலைக்கழகம் - கோவை
அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி
இன்னும் பல வருங்காலத்தில் வரும்.

இப்படி மண்டலம் வாரியாக பிரிப்பதற்காகவா மற்ற பல்கலைக்கழகங்களோடு சண்டையிட்டு அனைத்துக் கல்லூரிகளையும் 2005ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்துக் கொண்டது(Divide and Conquer wins here).

அடுத்தது இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முரையிலும் தரத்தைத் தளர்த்திய போது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டை நோக்கி கவனித்தது. நான் சொல்வது நுழைவுத்தேர்வைப் பற்றித் தான். 2007 வரை இருந்த நுழைவுத்தேர்வு அதன் பிறகு இல்லை என அறிவித்தது தமிழக அரசு. இதையே இந்த அரசின் சாதனை என்றும் கூறப்பட்டது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அப்படியெனில் கிராமங்களில் கல்வி நிலையில் தொய்வு இருப்பதை அரசே ஏற்றுக் கொள்கிறது. நிலைமை இப்படியிருந்தால் கிராம மாணவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கச் செய்வதா அல்லது நுழைவுத் தேர்வை ரத்து செய்வது என்பது சரியான முறையா? நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் அவ்விருவருக்கும் இடையே இருக்கும் அறிவு இடைவெளி நீங்கி விடுமா?

அண்ணா பல்கலைக்கழகம் ஓரளவு தரத்தோடு விளங்கிய காலத்தில், 2005 2006 2007ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பல்கலையோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தத்தம் நிறுவனத்திற்கு மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை ஆணையையும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. இன்று அந்த நிலைமை மாறியிருப்பது (2008, 2009ல் வெளிவந்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது) வெறும் பொருளாதார மந்த்/தொய்வு நிலையால் என்று மட்டும் கூறி நம் முகத்தில் நாமே சாயம் பூசிக் கொண்டிருக்காமல் இதற்கு ஒரு பகுத்தறிவு மிகுந்த தொலைநோக்கு சிந்தனை தேவை.

வெறும் பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கும் கல்லூரியாக இல்லாமல் சுய தொழில் தொடங்க பயிற்சி மற்றும் தைரியம் அளிக்கும் பல்கலைக்கழகமாக இது மாற வேண்டும் என்பதே பலருடைய ஆசை. அப்போது தான் எத்தகைய பொருளாதார நிலையிலும் மற்ற நாடுகளோடு நாம் போட்டிப் போட முடியும்.

மொத்த உலகப் பொறியாளர்களில் 35% அதிகமாக உள்ள இந்தியப் பொறியாளர்கள் அமெரிக்கா செல்வதை தம் கனவாக வைத்திருக்கின்றனர். இதை மாற்றி மற்ற நாட்டுப் பொறியாளர்களை இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என விரும்பும் நிலை வர வேண்டும். இதனால் இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்தாலும் பரவாயில்லை. இந்த நிலை என்று வருகிறதோ அன்று தான் கல்வியில் உலகத்தரம்/வல்லரசு அடைந்து விட்டோம் என்று நாம் கூற முடியும். அப்போது அப்துல் கலாமின் கனவும் நனவாகி விடும். இக்கட்டுரை சாதனை நாயகன், அணு விஞ்ஞானி, எம் தலைவன் அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம்.

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு இருந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா சரியா ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா?
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே!!!


முதலில் அரசு இந்த செய்தியை அலசுமா ......விக்னேஷ் ,,

Wednesday, July 4, 2012

என் குடும்பம் ஆ ஜெயிலுக்கு சென்றது....

என் குடும்பம் ஆ ஜெயிலுக்கு சென்றது,,,,தமிழ்னாட்டு மக்களும் தான் போனார்கள் ...இப்போ எந்த அரசியல்வாதிகளும் எங்களை குற்றம் சொல்ல் முடியாது---கருணாநிதி 

கடைசியில் பொது மக்களிடம் தஞ்சம் புகும் தி.மு.க....

 தி.மு.க, இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் நடிகை குஷ்பு , தயாநிதி, மாஜி அமைச்சர் ரகுமான்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.,,,,,,,,, 


 திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது......மு.க.ஸ்டாலின்!

''எத்தனை ஆண்டு சிறை என்பது பற்றி கவலையில்லை''


 தமிழகம் முழுவதும் இன்று நடந்த தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர் ,,,,,,,

அண்ணா சொன்ன கொள்கை இப்படி ,,,,,

திண்டுக்கல்: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பானது

இந்த போரட்டத்தில் சில அமைச்சர்கள் மிஸ்ஸீங்,,,,,,

முருகன்...கிரி....வழுதி,,,,

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேறும்...
இந்த நாட்டின் உள்ள எழைகளின் வாழ்வு என்னாகும்,,,,

சிறை சென்ற எல்லாறும் நாட்டிற்க்கு உழைத்த புண்ணியவான்கள்,,,


நாளைய வரலாறு வரவேற்க்கிறது பதிவுகளை

உலகத்தமிழர் நெட்வொர்க் ·-------விக்கி