Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, May 30, 2015

சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?

பஞ்சபூத ஸ்தலங்கள்! நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, ஆகாயத்திற்காக சிதம்பரம், பூமிக்காக காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார். இதில் சிதம்பரம் கோவில் சுற்றுப்புற கட்டிடங்கள் 1000 வருடம் பழமையானவை. கோவிலின் புராதன உட்புறம் எவ்வளவு காலத்திற்கு முந்தையது என்று யாருக்கும் தெரியாது. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம். இப்படியாகத்தான் இந்நாட்டின் கலாச்சாரம் இருந்திருக்கிறது. ராமேஸ்வரம் கோவிலோ, சிதம்பரம் கோவிலோ, மதுரை கோவிலோ இவையெல்லாம் ஆயிரமாயிரம் வருடங்கள் பழைமையானதாகும். பிரம்மாண்டமான கட்டிடங்கள் உடையதாகும். இத்தகைய கோவில் கட்டப்படுகின்ற காலத்தில் அரசனைத் தவிர ஏனையோர் இப்பணி நிமித்தம் கூடாரங்களிலேயே தங்கியிருந்தனர். எந்திரங்களோ, வாகனங்களோ, பளு தூக்கும் சாதனங்களோ இல்லாமல் இரண்டு தலைமுறைக்கான காலமாக ஒரே குறிக்கோளை மனதில் கொண்டு மனிதர்களால் இக்கோவில்கள் உருவாக்கப்பட்டன. கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். ஏனெனில் இக்காரியமே அவர்கள் வாழ்வின் நோக்கமாக இருந்தது. CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்! சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை வடிவில் இருக்கின்றான். நான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்திற்குப் போனேன். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். நடராஜரின் வடிவம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒன்றாகும். இவ்வடிவம் படைப்பின் தொடக்கத்தை பரவெளியிலிருந்து ஒரு நாட்டியம் போல தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய விதத்தைக் குறிப்பதாகும். சிதம்பரம் என்பது அசைவற்ற முடிவில்லாத நிலையைக் குறிக்கும் என்பதால் அக்கோவிலில் நடராஜர் நிற்பது போன்ற வடிவம் அமைந்துள்ளது. அந்நிலைதான் கோவிலின் கருவறையிலும் குடிகொண்டுள்ளது. மனிதனுள் பொதிந்துள்ள இந்த அசைவற்ற தன்மை, நுண்கலை வடிவமாகவும் வெளிப்படுகிறது. இத்தன்மையில்லாமல் உண்மையான கலைவடிவு கிடையாது. நடராஜமூர்த்தி ஒருபுறம் இருக்க கருவறையின் மூலவர் என்பது இங்கு எல்லையில்லாத வடிவமில்லாத பரவெளியே ஆகும். பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கோவில் பதஞ்சலி முனிவர்தான் இக்கோவிலை உருவாக்கினார். நவீன யோகக் கலையின் தந்தையாக பதஞ்சலி அறியப்படுகிறார். அவர் கண்டுபிடித்ததல்ல யோகா. மாறாக ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் இருந்த யோக முறைகளை அவர் ஒரு தொகுப்பாக முறைப்படுத்தினார். யோக சூத்திரங்களும் அவரால்தான் எழுதப்பட்டன. பதஞ்சலி முனிவர் ஒரு குறிப்பிட்ட கட்டிட விஞ்ஞான (ஆகம) முறைப்படி சிதம்பரம் கோவிலைக் கட்டினார். அவர் வெறும் பக்தரல்லர். யோக விஞ்ஞானியுமாவார். எனவே அந்தக் கோவிலின் அன்றாடப் பணிகள், பூஜைகள் எப்படி நடைபெற வேண்டும் என்றும் சொல்லி வைத்துள்ளார். இதற்காக ஒரு குழுவுக்கு பயிற்சி அளித்து அந்தக் கோவிலை எப்படி ஒழுங்காக பராமரிக்க வேண்டும், அங்கு எத்தகைய சடங்குகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் சொல்லிச் சென்றுள்ளார். அக்குழு பல குடும்பங்களாக பெருகி இன்றும் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றது. பதஞ்சலி சொன்ன நடைமுறைகள் அவர்களால் இன்றும் கடைப்பிடிக்கப் படுகின்றன. சிதம்பரம் கோவிலின் கட்டிடங்கள் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. அவை முற்றிலும் கற்களால் ஆனவை. இது தவிர நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோவிலைச் சார்ந்தவை. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் இருந்தன. பிரிட்டிஷார் காலத்தில் அவர்கள் இக்கோவிலின் பெருஞ்சொத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். எனவே இப்போது எந்த நகைகளும் இல்லை. ஆங்கிலேயர்கள் இரண்டாவது உலகப் போரை நடத்த ஏற்பட்ட செலவில் பெரும்பகுதி இந்திய கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலிருந்து தான் ஈடுகட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவில் நிலங்களும் பல்வேறு வகையில் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டதால் இப்போது இக்கோவிலின் அத்தியாவசிய பராமரிப்பு செலவுகளுக்குக்கூட பணம் இல்லை. கோவிலை பராமரிக்கும் குடும்பங்கள் இன்று இந்த கோவில் நிர்வாகத்தைக் கொண்டு செல்லவும், சடங்குகள் மற்றும் பூஜைகளை நிறைவேற்றுவதற்காகவும் 360 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான வருமானம் இக்கோவிலில் இருந்துதான் பெறப்படுகின்றது. ஆனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுதான் பராமரிப்புப் பணியை செய்து வருகிறார்கள். ஏனெனில் கோவிலின் சுவர்கள், சிற்பங்கள், தீட்டிய வர்ணங்கள் ஆகியவை மிகவும் பழையதாகி உதிர்ந்துவிட்டன. போதிய கவனம் இன்றி கோவிலின் பல இடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. கோவிலின் அடிப்படை கட்டுமான விஞ்ஞானமறியாமல் கான்கிரீட் சுவர்கள் ஆங்காங்கே எழுப்பப்பட்டதன் விளைவாக கோவிலின் புனிதத்தன்மையும் அக இயல்பும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார். அந்த இடம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு அதே புனிதத் தன்மையுடன் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், நாமும் அவ்வாறே விரும்புகிறோம். இதற்காக கோவிலைச் சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தி முன்பு இருந்தது போல கோவிலை பராமரிக்க நிறைய செலவாகும். மேற்சொன்ன நோக்கத்துடன் வியாபார ஸ்தலங்களையும், விடுதிகளையும் வேறு இடங்களுக்கு மாற்றி அமைக்க முடியுமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். எனினும் இது ஆரம்ப திட்ட அளவிலேயே உள்ளது. இதற்காக எந்த பெரிய நிறுவன (corporate) மாவது முன் வருவார்களா என்றும் பார்க்கிறோம். ஏனெனில் சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்பிருந்ததைப் போல ஆன்மீகத் துடிப்புள்ள சக்திமிக்க ஸ்தலமாக மீட்க முடிந்தால் அது மகத்தான முன்னேற்றத்தை கொண்டு வரும். புனித ஸ்தலங்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? நாம் வாழும் இடம் 10,000 சதுர அடிகளாகவோ அல்லது 1000 சதுர அடிகளாகவோ இருந்தால் அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியப் போவதில்லை. ஆனால் சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்திற்கு அருகே இருப்பதென்பது ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டுவரும். இதை மனதில் கொண்டுதான் 25 வீடுகளுக்கு ஒரு கோவில் என்று ஊர்களை அமைத்தார்கள். கோவிலுக்குப் போய் வழிபடுகிறீர்களா, மந்திரம் உச்சரிக்கிறீர்களா என்பதல்ல முக்கியம். புனிதப்படுத்தப்பட்ட இடத்திற்கு அருகே இருக்கிறீர்களா என்பதே விஷயமாகும். வாழ்வின் இந்த பரிமாணம் குறித்த ஞானம் நமது கலாச்சாரத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது, மிக முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டது. நாம் என்ன உண்கிறோம், எப்படி வாழ்கிறோம், எத்தனை நாள் உயிரோடு இருக்கிறோம் என்பதையெல்லாம் தாண்டி படைப்பின் மூலத்தோடு எவ்வாறு தொடர்பு வைத்திருக்கிறோம் என்பதையே தேவையாக உணரும் ஒரு கட்டம் வாழ்வில் வரும். இவ்வாறு படைப்பின் மூலத்தோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கத் தவறினால் நாம் வாழும் சமூகமானது மக்கள் நல சமுதாயமாக இருக்காது.

  சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?