Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, October 4, 2016

உங்கள் நம்பிக்கை..

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழுஎளிய வழிகள்…!

1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும்வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

2 உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங் கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்து மிதமாக உள்ள உணவுவகைகளைத்தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.

3 உங்கள் முகத்திற்கும் மேனிக்கும் பொருத்தமான அழகுசாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்த வராக மாற்றும்.

4 உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றிகாணுங்கள். உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக் கற்கள் வெற்றி யின் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள்.

5 உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும்.

6 வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை.கொஞ்சம் `ரிஸ்க்’ எடுங்கள்.ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும்.

7 உங்களை நீங்கள் நம்புங்கள்…! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கைகொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள்.

நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்…!

தூக்கம் சில ரகசியம்..

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம்இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் .

இதன் விளக்கம் :-இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்  அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது,  தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே,இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோமாக..

வெற்றி தரும்....மொழிகள்

வெற்றி தரும் எண்ணங்கள்..

வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து.

*."வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.

வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.

மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது

. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது"     -  வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)

*."நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது "   -    வில்லியம் ஜேம்ஸ்

*."எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே

*."தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர்  வால்டர் ஸ்கட்

*."நாம் என்ன  நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும்அதுதான் நிர்ணயிக்கிறது "-  டாக்டர் எம்.ஆர். காப்மேயர்

*."ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான்"-பைபிள்*."

நாம்  இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது

அழகு யார்...?

இந்த உலகம் அழகானது. அதில் நிறைய அழகான மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் பாதையில் நடந்து செல்லும் போதும் வைபவங்களில் பங்கேற்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அழகான மனிதர்கள் பலரைக் காண்கிறோம். மனிதர்கள் பொதுவாகவே அழகானவர்கள். நாம் ஒவ்வொருவரும் அழகை விரும்புகிறோம்.

அழகாக இருக்க ஆசைப்படுகிறோம். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடும் பலரையும் காண்கிறோம். நாமும் அப்படிச் செய்ய எத்தனிக்கிறோம்.அழகை பலர் பல கோணங்களில் பார்க்கின்றனர்.

அழகான உடலைக்கொண்டவர்களைப்பார்த்து அழகானவர்கள் என்றும், அழகாக ஆடை அணிந்திருப்பவர்களைப் பார்த்துஅழகானவர்கள் என்றும் நினைப்பவர்களும் சொல்பவர்களும் அப்படி இருக்க முயற்சிப்பவர்களையும் காணத்தான் செய்கிறோம்.

மனிதர்களின் அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் தென்படலாம். எப்படித் தென்பட்டாலும் எந்தக்கோணத்தில் பார்த்தாலும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழகானவர்களே. ஆனால்…

• உண்மையான அழகு எப்படி வெளிப்படுகிறது?

• எப்படி அதைக் கண்டுகொள்வது?

• உண்மையான அழகுடையர்கள் யார்?என்ற வினாக்களுக்கான சரியான பதிலை நாம் கண்டிப்பாகவே தேடிப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். தேடி அறிந்துகொள்ள ஆசையும் காட்டுகிறோம். உண்மையான அழகு மிகவும் அரிதாகவே மனிதர்களில் இருந்து வெளிப்படுகிறது. நாம் இயல்பாகப் பெற்றவை, நாம் கற்றுக்கொண்டவை,

எமக்குள் விதைத்து வளர்த்துக்கொண்ட நல்லவைகள் போன்றவற்றின் கூட்டுச் சேர்வுதான் அழகு என்ற வடிவில் வெளிவரும் அற்புதமான மனித வெளிப்பாடாகும். அது சற்றென்று வருவதல்ல. அது ஒன்றோடு மட்டும் சம்பந்தப்பட்டதுமல்ல.‘அழகு இயல்பாகக் கிடைக்கிறது. புரிந்துகொள்வதன் மூலம் அது வளர்கிறது. வளர்த்துக்கொள்வதன் மூலம் அது அழகாக வெளிப்படுகிறது.’

அழகை அழகாக வெளிப்படுத்த வேண்டுமானால் அழகாக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வளர்த்துக்கொண்டிருக்கவும் வேண்டும். உண்மையான அழகு என்பது ஒருவரது சிநதனையில் இருந்து உருவாகிறது. அது அவரது நடத்தையின் மூலம் வெளிப்படுகிறது.

உண்மையான அழகிற்குச் சொந்தக்காரர்கள் பல அழகான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக்குணங்கள்தான் அவர்கள் அழகானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் பயனும் பெறுமதியும் மிக்கவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

அழகாக வாழக்கற்று, அழகை வளர்த்து வாழ்ந்துகொண்டு வருபவர்களிடம் இருக்கும் ஒரு சில அழகான குணங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம். அவை அழகின் அரத்தத்தைப் புரிய எமக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.உண்மையான அழகு மன அமைதியினதும், மனமகிழ்ச்சியினதும் பிரகாசமாக வெளிவரும்.அழகான மனிதர்கள்,

*.எப்போதும் சந்தோசமாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.

*.அவர்கள் அதிகம் புன்னகைப்பார்கள்.

*.அமைதியாகவும் அழகாகவும் சிரிப்பார்கள்.

*.அவர்களில் இருந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் வெளிவரும்.

*.அவர்களின் புன்னகையில் அணைப்பு இருக்கும். அழைப்பும் இருக்கும்.

*.அவர்களைப்பார்க்கும் போது நாம் அவர்கள் மீது இலகுவாகவே ஈர்க்கப்பட்டுவிடுவோம்.

*.அவர்களின் தோற்றம் மற்றவர்களை வரவேற்பது போல் இருக்கும்.

*.அழகானவர்கள் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் எதுவாக இருப்பினும் அதை சளிக்கமாலும் முகம் சுழிக்காமலும் முகம் கொடுப்பார்கள். அவர்களில் இருந்து எட்டிப்பாயும் உள்ளார்ந்த அமைதி அவர்களது மனநிலையை மட்டுமல்ல, மற்றவர்களின் மனநிலையையும் சாந்தப்படுத்திவிடும்.

*.உண்மையான அழகுடையவர்கள் நாம் யார் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். அதாவது அவர்களுக்கு அவர்களை தெரியும். அவர்கள் வேறு எவராவது ஒருவராக வாழவே மாட்டார்கள். எதிர்பார்ப்புள்ளவர்களாகவும்,இலட்சியம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது தகைமைகள், திறமைகள், பலம், பலவீனம் என்பன தெரியும்.

*.உண்மையான அழகுடையவர்கள் அவர்களை நன்றாகத் தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பார்கள். மற்றவர்களை தெரிந்தும் புரிந்தும் கொள்வதை விட தன்னைத் தெளிவாகத் தெரிந்து வைப்பதும் புரிந்துகொள்வதுமே ஒரு தரமான மனிதனின் மிகச்சிறந்த அடையாளமாக இருக்கும். எமக்கு எம்மைத் தெரியாவிட்டால் நாம் மற்றவர்களுக்கு பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஆகலாம். அழகானவர்கள். எப்பொழுதும் அவர்ளை தெரிந்து கொண்டவர்களாகவும், புரிந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

*.நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக பாடுபடுவது அழகான மனிதர்களின் பண்பாக இருக்கும். அவர்கள் ஒரு போதும் பிழையான தெரிவுகளை தெரிவு செய்ய மாட்டார்கள். மிகவும் உறுதியான உள்ளுணர்வுகளுடன் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். எது சரி, எது பிழை என்பதுஅவர்களுக்குத் தெரியும். அதனால் முட்டி மோதுண்டு, குற்ற உணர்வால் அவதிப்படாமல் வாழ இவை பலமான ஊன்றுகோள்களாக இருக்கும்.

*.சரியை சரியாகப் புரிவது போன்று, பிழையையும் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டும் தான் சரியான தீர்மானம் எடுக்கவும், முன்னேறிச் செல்லவும், சவால்களை சாதிக்கவும் முடியுமாக இருக்கும். அழகானவர்களிடம் இந்தப்பண்பு நிரப்பமாகவே இருக்கும்.‘நாங்கள் தெரிந்து வைத்திருக்கின்ற மிகவும் அழகான மனிதர்கள் எவ்வாறானவர்கள் என்றால், அவர்கள் வாழ்கைக்கு முகம் கொடுக்க முடியுமானவர்களாக இருப்பார்கள்.

*.நோவுகளையும், தடங்கல்களின் தன்மைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

*.இழப்புகளின் இயல்புகளை அறிந்துவைத்திருப்பார்கள்.*.கடன்பட்டு கஷ்டப்படாமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் அறிந்து வைத்திருப்பார்கள்.

*.அவர்களுக்கு பாராட்டுதல், அங்கீகாரம், கௌரவம் என்பன கிடைப்பதால் கருணையாலும் அமைதியாலும் ஆழமான அன்பாலும் அவர்களின் வாழ்வு அலங்காரமாகி இருக்கும்.‘அழகானவர்கள் திடீரென தோன்றக்கூடியவர்கள் அல்லர்’என பிரபல மனோதத்துவ நிபுணர் எலிசபத் ரொபர் குறிப்பிடுவதிலிருந்து இதன் உண்மையை புரிந்துகொள்ளலாம்.அழகான மனிதர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது கணிவும் கரிசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதிலும் வாழவும் வளரவும் உதவி ஒத்துழைப்பதிலும் ஆர்வமாய் இருப்பார்கள். அவர்களது வார்த்தைகள் வளமானதாகவும், அவர்களது செயற்பாடுகள் தன்னலமற்றதாகவும் இருக்கும். அவர்களது ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாட்டிலும் அவர்களது குணத்தின் அழகைக் காணலாம்.அழகான மனிதர்கள் ஒருபோதும் அவசரப்படமாட்டார்கள். ஆவேசப்படவும்மாட்டார்கள். அமைதியும் நிதானமும் அவர்களில் நிரம்பியிருக்கும். அழகான மனிதர்கள் எப்பொழுதும் அழகானவர்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். அழகாகவும் அளவாகவும் உண்பார்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். போதுமான அளவு உறங்குவார்கள். அவர்களது உடலுக்குப் பொருத்தமான ஆடைகளையே அணிவார்கள்.அழகான மனிதர்கள் எப்பொழுதும் இறைவனின் உறவில் நாட்டம் கொண்டவர்களாகவும், நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள்பிழைத்துப்போக மாட்டார்கள்.உண்மையான அழகு உறுதியானது. அது ஆன்மாவின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பப்பட்டதாக இருக்கும். இப்போதும் அந்தஅழகை கட்டியெழுப்பியவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். உண்மையான அழகுக்குப் பின்னால் அறிவும் இருக்கும். ஆற்றலும் இருக்கும். அனுபவமும் இருக்கும். அர்ப்பணமும் இருக்கும்.அழகானவர்கள் எப்பொழுதும் சங்கடங்களை சந்தித்து அவற்றை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்வார்கள். அவர்கள் தான் அழகானவர்கள். அவர்கள் தான் வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டவர்கள்.நாமும் இப்படியான அழகால் மனநிறைவு பெற்றவர்களாக, உண்மையான அழகிற்கு சொந்தக்காரர்களாக எங்களை ஆக்கிக்கொள்ளவே ஆசைப்படுவோம்.

இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற குணங்கள் எங்களை நாம் உண்மையான அழகானவர்களாக மாற்றியமைத்துக்கொள்ளதுணைபுரியும் அழகான குணங்களாக அமையும்..

பெண்கள் பாதுகாப்பு...

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கேலி, கிண்டல், சைகை என ‘ஈவ் டீசிங்’கில் ஆரம்பித்த அந்த கேள்விக்குறி, இப்போது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தின் இன்டர்நெட் வரை நீண்டு கொண்டே தான் போகிறது..!நாம் நினைப்பதை விட அதிகமான பாதிப்புகளை, பெண்கள் திந்தினம் சந்திக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அதற்கு பலமான ஒரு ஆதாரமாய் நிற்கிறது சமீபத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்று..!

ஐ.நா-வின் புதிய அறிக்கை ஒன்று உலகம் முழுக்க, ஆன்லைன்னில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று தெரிவிக்கிறது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் ஆன்லைன் வன்முறை, உலகம்விழித்துக்கொள்ள ஒரு குரல் (Combating Online Violence Against Women & Girls: A Worldwide Wake-Up Call) என்ற ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது ஐ.நா..!

பெண்களுக்குஎதிரான ஆன்லைன் குற்றங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகளை பெறும் நாடுகளில் இந்தியாவும் அடங்குகிறது. அப்படியாக இந்தியாவை பொருத்தமட்டில், 35% பெண்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக புகார் அளிக்கும் அதே நேரத்தில் 46.7% பெண்கள் புகார்கள் எதுவும் அளிப்பது இல்லை என்கிறது ஐ.நா அறிக்கை.

மேலும் 18.3% இந்திய பெண்கள் தாங்கள் பாதிக்கபடுவதைக்கூட உணராமல் இருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் ஐ.நா அறிக்கை அம்பலபடுத்தியுள்ளது. உறுதி அளிக்கும் வகையில், இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 6 நாடுகளை சேர்ந்த 67% பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார்களாம்.

உலகம் முழுக்க 18 முதல் 24 வயதிற்குள் உள்ள பெண்கள் தான்,பின்தொடர்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆன்லைன் குற்றங்கள், இன்டர்நெட் சுதந்திரத்தை திசை திருப்பும் வகையில் அமைவதாகவும், பல இடங்களில் அது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான செயல்களில் ஈடுபடுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

ஆக பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்களுக்கு எதிராக உலக நாடுகள் விழித்து கொண்டு, இதை தடுக்க செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

Friday, July 29, 2016

உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ற துணை யார்......?

 1. http://www.paristamil.com/image.php/news_26-12-2014_69couple%20neumro.jpg?width=590&height=311&image=http://www.paristamil.com/content_images/news/news_26-12-2014_69couple%20neumro.jpg

 2. பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 3. 1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர் :

 4. இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.

 5. 2,11,20,29 ம் தேதியில் பிறந்தோர் :

 6. இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணேமிகவும் சிறந்தவள்.ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
 7. 3,12,21,30 ம் தேதியில் பிறந்தோர் :

 8. இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

 9. 4,13,22,31 ம் தேதியில் பிறந்தோர் :

 10. இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில்பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தைஅடையலாம்.

 11. 5,14,23 ம் தேதியில் பிறந்தோர் :

 12. இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும்திருமணத்திற்கு உகந்தவை.மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

 13. 6,15,24 ம் தேதியில் பிறந்தோர் :

 14. இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.மேலும் திருமண 1, 10, 19, 28,6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.7,16,25 ம் தேதியில் பிறந்தோர் :இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.

 15. 8,17,26 ம் தேதியில் பிறந்தோர் :

 16. இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது.  2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

 17. 9,18,27 ம் தேதியில் பிறந்தோர் :

 18. இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை  மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்பவாழ்க்கை நன்கு அமையும்.

Saturday, February 20, 2016

காதல், கல்யாணம் என்றால் என்ன?

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான். 

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.

அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நாம் குழந்தை வளர்ப்பதில் முன்பை விட  தற்போது முழு கவனம் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சியே. எனினும் கிழே கொடுக்கபட்டுள்ளவற்றை கண்டிப்பாக அறிதல் வேண்டும்.

நம்முடைய குழந்தைகளின் மூளை வளர்ச்சி முட்டை உருவானதில் இருந்து 4வது வாரத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. அதாவது நமக்கு குழந்தை பிரக்கபோகிறது என்று நாம் உறுதி செய்யும் காலத்தில் இருந்து. இந்த சமயத்திலிருந்தே நாம் உண்ணும் உணவு முதற்கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக இருக்க பழக வேண்டும்.

மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் 90% முதல் 5 வயதிற்குள்ளாகவே நிறைவடைந்து விடுகிறது. நாம் இதன்னை சாதனைகளையும் வெறும் 5 - 10% மூளையை வைத்துத் தான் நிறைவேற்றியிருக்கிறோம் என்றால் மீதி மூளையையும் பயன்படுத்தினால் யோசித்து பாருங்கள்.

ஆகவே நாம் கருவுற்றிருகிறோம் என்று அறிந்த நாள் முதல் உண்ணும் உணவில் மட்டுமல்லாது நமது செய்கைகளிலும் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டால்  ஆரோக்கியமான மற்றும் அறிவாளியான குழந்தைகளை பெறலாம்.

குழந்தை வளர்ப்பதை எளிதாக்க சில டிப்ஸ் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெறவும்

குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

OR

குழந்தைகள் மீதான வன்முறை கல்வி நிலையங்களில் கயமை இருள்

2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியார் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு - சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு - ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது.
நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.
விசாரணை முழுதும் தனிமையில் (in camera) நடத்தப்பட்டது. குழு உறுப்பினரில் ஒருவரான மருத்துவ-குழந்தைநல வல்லுநரால் மாதவி தனியாக விசாரிக்கப்பட்டாள். அவள் கொடுத்த ஒவ்வொரு விவரமும் திடுக்குற வைத்தது. ஆசிரியரின் விஷமத்தனங்கள் ஓராண்டுக்கு முன்பே, அவள் மூன்றாம் வகுப்பில் இருந்தபோதே தொடங்கிவிட்டன. ஒவ்வொரு முறையும் கழிப்பறைதான் குற்றக் களம். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, அவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாதவியை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு முறையல்ல, பல முறை மாதவி இத்தகைய வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறாள். அவள் மட்டுமல்ல; இன்னும் வேறு இரண்டு மாணவிகள் அந்த ஆசிரி யரிடம் அதே கதிக்கு ஆளாயினர் என்று அவள் சொன்னாள். அவர்கள் இருவரும் பள்ளியை விட்டு நின்றுவிட்டனர்.
இறுதியில் நிலைமை முற்றி வெடித்தபோது, மருத்துவப் பரிசோதனையில் மாதவி பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்ததும் அவளது பெற்றோரும் உறவினரும் பள்ளியின் மற்ற பெற்றோரும் பள்ளியின் மேல் படையெடுத்து வந்து, குற்றவாளியை அடித்து நொறுக்கவும் பள்ளி நிர்வாகம் வேறு வழியின்றிக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தது, குற்றவாளி கைதுசெய்யப்பட்டான்.
எங்களது ஆய்வில் வெளிவந்த நெஞ்சை உலுக்கும் உண்மைகள்:
பள்ளி, அறுபதுகளில் தொடங்கப்பட்டிருந்தாலும் 2000ஆம் ஆண்டுதான் முதன்முறையாக உடற்பயிற்சி ஆசிரியர் நியமிக்கப்பட்டார். குற்றவாளி ஆசிரியரின் நியமனக் கோப்பைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்தோம். நியமனம் செய்யப்பட்டபோது அவனுக்கு வயது 18. கொடுக்கப்பட்ட ஊதியம் மாதம் ரூ. 1,200. பள்ளியின் அனைத்து மாணவர்களும் - பருவம் எய்திய பெண்கள் உட்பட - அவனது பொறுப்பில் விடப்பட்டனர். ஆசிரியர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. கண்காணிக்கும் பொறுப்புடைய கல்வித் துறையோ கண்டுகொள்ளவேயில்லை. நடந்த பாலியல் வன்முறைச் சம்பவம் செய்தித்தாள்களில் வெளிவந்து ஒரு வாரமாகியும் கல்வித் துறை அதிகாரி எவரும் விசாரணைக்குச் செல்லவில்லை.
மாதவியின் குடும்பம் கேரளாவிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறிய குடும்பம். குற்றம் நீதிமன்றம் ஏற வேண்டும்; குற்றவாளி கடுமையான தண்டனை பெற வேண்டும் என்பதில் குடும்பத்தினர் ஆத்திரம் கொண்ட தெளிவுடன் இருந்தனர். நம் சமுதாயத்தில் விதிவிலக்கான குடும்பம் அது. சராசரிக் குடும்பத்திலோ பெண் குழந்தைக்கு நடந்த அக்கிரமத்தை மூடி மறைக்கவே முயல்கின்றனர். அதே பள்ளியில் வேறு இரு குழந்தைகளுக்கும் இதே கதி ஏற்பட்டிருந்தபோதிலும் விஷயம் வெளிவரவே இல்லை. குழந்தைகள் சத்தமில்லாமல் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். பெண்ணடிமைச் சமுதாயத்தின் ஆண் ஆணவ ஆதரவு இது. பெண் குழந்தையின் உடலில் படிந்த கறை, பெண்ணின் தலையில்தான் விடியும் என்னும் அச்சம்; அவளது திருமண வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்னும் கவலை. பொறுப்பின்றிப் புரளும் நாக்குகளுக்கு நடுங்கி, மூடி மறைத்து, குற்றவாளியைத் தப்பவிட்டு, குற்றங்கள் தொடர ஏதுவாக அமையும் சூழல் இவ்வாறுதான் உருவாகிறது. மௌனத்தில் மறையும் குற்றங்கள் ஏராளம். வெளிவரும் குற்றம் ஒவ்வொன்றைப் போலும் பல மடங்கு குற்றங்கள் வெளிவராமல், சமுதாயத்தின் மௌடீகத்தால் தழைக்கின்றன.
மாதவி பல முறை வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் எவரிடமும் அது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. பெற்றோரிடமோ வகுப்பு ஆசிரியரிடமோ அதைப் பற்றிச் சொல்லவில்லை. குடும்பம் விதிவிலக்கான, ஓரளவு தைரியமான குடும்பமாக இருந்தபோதிலும், அதைச் சொல்லும் துணிவு அவளுக்கு வரவில்லை. விசாரணையின்போது ஏன் எவரிடமும் சொல்லவில்லை என்று மாதவியிடம் கேட்டபோது, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி ஆசிரியர் அச்சுறுத்தியதாகக் கூறினாள். அது மட்டுமே காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. இதேபோல்தான் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் குழந்தைகள் நடந்த விபரீதத்தை எவரிடமும் சொல்வதில்லை என்னும் உண்மை பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஏன் இந்தத் திரை? குழந்தைகள் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடுகின்றனரா? பெற்றோர் தங்களையே குறை சொல்வர் என்னும் அச்சமா? பெற்றோர் மனம் வேதனைப்படும் என்னும் கவலையா? கொடுமைக்குள்ளாகி மருகிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளின் வாயை அடைப்பது எது?
பள்ளியில் பல முறை நடந்த குற்றம் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியவில்லை என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. விசாரணையின்போது தலைமை ஆசிரியரும் பள்ளித் தாளாளரும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளியைச் சுற்றி வந்து மேற்பார்வையிடுவதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் வசிப்பதும் பள்ளி வளாகத்தில்தான். குற்றம் அவர்கள் காதில் விழும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் அச்சம் இருந்திருந்தால், குற்றவாளிக்குத் துணிவு வந்திருக்குமா என்பது சந்தேகமே. உடற்பயிற்சி வகுப்பின்போது ஆசிரியர் மாதவியைக் கழிப்பறைக்கு அழைத்துச் செல்வதும் வெகுநேரம் கழித்து வெளி வருவதும் விளையாடிக்கொண்டிருந்த மற்ற மாணவரின் கண்ணெதிரிலேயே நடந்தபோது, அதைப் பற்றிய பேச்சு எழவில்லை என்பதும் நிர்வாகத்தின் காதுக்கும் எட்டவில்லை என்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால், குற்றப் பத்திரிகையில் பள்ளி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை.
மாணவியின் வகுப்பாசிரியரும் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் நடந்தது எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டனர். சுயநிதிப் பள்ளிகளில் ஆசிரியரின் கொத்தடிமை நிலை அனைவரும் அறிந்ததே. 'இம்' என்றால் சம்பள இழப்பு, 'ஏன்' என்றால் வேலை இழப்பு; கிடைக்கும் ரூ. 2,000இலும் மண். ஆகவே, பள்ளிக்குப் பெரும் அவப்பெயர் அளிக்கும் இந்நிகழ்வு குறித்து அவர்கள் வாய் திறந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. சுயநிதிப் பள்ளிகள் அச்சம் அடையடையாய் அப்பிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள்.
பெற்றோர், முனிசிபல் கவுன்சிலர், பகுதிவாழ் மக்களின் நல்வாழ்வுச் சங்கம் . . . எவருக்கும் பள்ளி குறித்த குறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், அனைவருமே அது நல்ல பள்ளி என்று சர்டிபிகேட் கொடுத்தார்கள்; ஏதோ விபத்துபோல் இந்த நிகழ்வு நடந்துவிட்டது; இதற்காகப் பள்ளியின் நல்ல பெயர் கெட்டுவிடக் கூடாது என்று கவலைப்பட்டனர். நல்ல பள்ளி என்று அத்தாட்சி கொடுப்பதற்கு என்ன ஆதாரம்? 'தேர்வில் நல்ல ரிசல்ட்; ஸ்டேட் ராங்க் கூட ஓரிரு முறை பெற்றிருக்கிறது. நல்ல டிசிப்ளின்; சில பள்ளிகள்போல் மிக அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதில்லை. ரெயில்வே கேட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பதால் குழந்தைகள் கடந்து போக வேண்டிய அவசியம் இல்லை.' பதினெட்டு வயது இளைஞன் உடற்கல்வி ஆசிரியராக இருப்பதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிப்பறைகள் இருப்பதும் சம்மதம்தானா? 'எங்களுக்கு அதெல்லாம் தெரியாது, மேடம்.' குழந்தைகளின் நலனில் எத்தனை கரிசனை சமுதாயத்திற்கு? பெற்றோருக்கோ குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் போதும்; பன்னிரண்டாம் வகுப்பு முடியும்வரை கவலைப்பட வேண்டியதில்லை.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்கக அதிகாரிகள் இருவர் விசாரணைக்கு வந்திருந்தனர். மாநிலத்தின் ஏராளமான சுயநிதிப் பள்ளிகளைக் கண்காணிக்கும் சாத்தியப்பாடே இல்லையென்று அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். அதற்கான கட்டுமான, நிதி ஆதாரங்கள் எவையும் இந்த இயக்ககத்திற்கு அளிக்கப்படவில்லை. பெயருக்கென்று நிறுவப்பட்டிருக்கும் இயக்ககம் இது.
பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது. குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.
இத்தகைய அக்கறையற்ற, அனைத்தையும் அனுமதிக்கும் permissive சூழல்தான் கல்வி நிலைய இடுக்குகளில் பதுங்கியிருந்து குழந்தைகளின் மேல் பாயும் வன்முறைக்கும் வக்கரிப்புக்கும் பெரும்பாலும் காரணம். இதுவரை பேசப்பட்ட குறிப்பிட்ட வன்முறைத் தாக்குதல் சுயநிதிப் பள்ளியில் நடைபெற்றதால், இப்பள்ளிகளின் கேட்பாரற்ற, தான்தோன்றித்தனச் சூழல்தான் இதற்குக் காரணம் என்று பொருள்படுத்தக் கூடாது. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இலக்காகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக, பரிசோதனைக் கூடங்களில், தனி வகுப்புகள் (sஜீமீநீவீணீறீ நீறீணீssமீs) நடக்கும்போது, என்று பல இடங்களில் இத்தகைய கொடுமைகள் நடப்பதாகக் கேள்விப்படுகிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டது கேவலம் ஒரு விதிவிலக்கான நிகழ்வா? இல்லை என்று அனைத்து ஆய்வுகளும் பறைசாற்றுகின்றன. சமீபத்தில் மத்திய அரசே செய்வித்த ஆய்வு ஒன்று சில நடுநடுங்கச் செய்யும் விவரங்களை நம் முன் வைத்தது. நாட்டில் இரண்டில் ஒரு குழந்தை வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது; மூன்றில் ஒரு குழந்தை பாலியல் தாக்குதலுக்கு இலக்காகிறது; இந்தக் குரூரங்களில் ஈடுபடுபவர் குழந்தை அறிந்த குடும்ப உறவினரோ நண்பரோதான். நடந்த கொடுமையைக் குழந்தை, பெற்றோர் உட்பட எவரிடமும் சொல்லுவதில்லை. பிஞ்சுப் பருவத்தில் உள்ளுணர்வின் ஆழத்தில் விழுந்த பலமான அடி, ரணமாகி, சீழ்கட்டி, காலப் போக்கில் மாறாத வடுவாகி, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஆரோக்கியமற்ற, அச்சம் கொண்ட, வக்கரிப்புகளை உருவாக்குகிறது. தலைமுறைகளாகத் தாக்கம் தொடருகிறது.
குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் - பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி - அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
சில உலுக்கும் விவரங்கள்: (பள்ளிகளில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் நடந்தவை)
* துளிர் என்னும் நிறுவனம் 2006இல் சென்னையில் பள்ளி செல்லும் 2211 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வுவின் முடிவுகள்: 42% குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு இலக்காகின்றனர். அனைத்து வகைப்பட்ட சமூக-பொருளாதார நிலை சார்ந்த குழந்தைகளும் கொடுமைகளுக்கு இலக்காகிறார்கள். ஆண் குழந்தைகளில் 48%, பெண் குழந்தைகளில் 39% இலக்காகியுள்ளனர். 15% கடுமையான வன்முறையை அனுபவித்துள்ளனர்.
* சாக்ஷி என்னும் அமைப்பு, புது டில்லியில், 1997இல் பள்ளி செல்லும் 350 பெண் குழந்தைகளிடம் செய்த ஆய்வு: 63% குழந்தைகள் குடும்ப உறுப்பினரால் கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 25% பாலியல் பலாத்காரத்திற்கோ (rape) மற்ற கடுமையான பாலியல் வன்முறைக்கோ உள்ளாக்கப்பட்டனர்.
* ராகி என்னும் அமைப்பு 1997இல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவா ஆகிய நகரங்களில் நடுத்தர, மேல்தட்டுப் பெண்களிடையில் நடத்திய ஆய்வு: 75% தாங்கள் குழந்தையாக இருந்தபோது பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியுள்ளனர். 71% சொந்தக்காரர் அல்லது தங்களுக்குத் தெரிந்த, நம்பிக்கைக்கு உரியவராலேயே கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
* சம்வாதா அமைப்பு பெங்களூரில் 1996இல் மாணவரிடையே நடத்திய ஆய்வு: 47% பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர்; அவர்களில் 62% பாலியல் பலாத்காரத்திற்கு (rape) ஒரு முறையும் 38% வன் முறைக்கும் இலக்காயினர்.
உண்மை இவ்வாறிருக்க, இந்த விபரீதத்தைப் பற்றிய உணர்வோ புரிதலோ நிவாரணமும் தீர்வும் காண வேண்டுமென்ற கவலையோ இன்றி, மூடி மறைத்து விட்டால், நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்ற மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது நம் சமுதாயம். ஒரு மௌனச் சதி (conspiracy of silence) நடக்கிறது.
எங்களது விரிவான விசாரணை அறிக்கை அரசுக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. அதில், நடந்த குற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தோம். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும், பெயில் கொடுக்கக் கூடாது; பள்ளி நிர்வாகத்தின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும். கல்வித் துறையும் துறைவழி நடவடிக்கை (departmental action) எடுக்க வேண்டும். அத்துடன் புரையோடிக் கிடக்கும் இப்பிரச்சினை தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, எடுக்க வேண்டிய தொலை நோக்கு நடவடிக்கைகள் குறித்தும் பல சிறந்த பரிந்துரைகளை எங்கள் அறிக்கை அளித்தது. இதே வழக்கு மீண்டும் ஒரு முறை ஆணையம் நடத்திய பொது விசாரணை மன்றம் முன்பும் வந்தது.
இவ்வழக்கில் குறிப்பிட வேண்டிய ஒன்று, உள்ளூர்க் காவல் துறையின் பொறுப்பான, சிறந்த, உடனடிச் செயல்பாடு. குற்றவாளி உடன் கைதுசெய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் விரைவில் தாக்கல்செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தின் முன் 2006ஆம் ஆண்டு வந்தது. குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது; அத்துடன் பெயில் வழங்கப்பட்டு, குற்றவாளி வெளியில் நடமாடிக்கொண்டிருக்கிறான். குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் பெயில் கொடுக்கக் கூடாது என்னும் மாதர் இயக்கங்களின் நீண்டகாலக் கோரிக்கை பயனற்றுக் கிடக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிர்வாகம் செய்த அல்லது செய்யத் தவறிய குற்றம் (sins of omission and commission) எதுவும் தண்டனைக்கோ கண்டனத்திற்கோ உரியதாகக் கருதப்படவில்லை. கல்வித் துறையும் நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட வன்முறை மகளிர் ஆணையத்திற்கு வந்த பெண் குழந்தைகள்மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பான பல மனுக்களில் ஒன்றுதான். பெண் குழந்தைகள் எதிர்கொள்ள நேர்ந்த பல வகைப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்கள், வன்முறைகள் ஆகியவற்றைத் தனித் தனியாகக் கையாண்டபோதும், இவை குறித்துச் சமூக விழிப்புணர்வு தேவை என்ற எண்ணத்தால் இரு பொது விசாரணைகளை நடத்தினோம். ஒன்று, 2003 அக்டோ பரில் பெண் குழந்தைகள் மீதான பல வகைப்பட்ட வன்முறைகள் குறித்தது; அவற்றில் பள்ளிகளில் நடந்த பாலியல் பலாத்காரங்களும் அடங்கும். அதன் பின்னும் பல மனுக்கள் வந்து குவிந்ததால், 2004 டிசம்பரில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து மட்டுமே முழுப் பொது விசாரணை ஒன்றை நடத்தினோம்.
இங்குக் குறிப்பிட வேண்டியது, குழந்தை பாலியல் கொடுமைக்குப் பலியாவது பெண் குழந்தைகள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகளும் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், எங்கள் ஆணையம் மகளிர் ஆணையம் என்னும் காரணத்தினால், பெண் குழந்தைகள் தொடர்பான வன்முறைகள் மட்டுமே எங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்தன; ஆகவே, அவற்றை மட்டுமே ஆணையம் ஆய்வுக்குத் தேர நேர்ந்தது.
இரண்டு விசாரணைகளிலும் அரங்கத்திற்கு வந்த சில மனுக்களை மட்டும் இங்கு அளிக்கிறேன்.
1) நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பின் 14 வயது மாணவி, 45 வயதான ஆசிரியரால் பரிசோதனைக் கூடத்தில் பல முறை பாலியல் வன்முறைக்குப் பலியானாள். அவள் கருதரித்ததும் உண்மை வெளிவந்தது. குண்டர்களை வைத்து அவளது குடும்பத்தை அச்சுறுத்த முயன்றாலும் வழக்குப் பதிவாயிற்று.
2) மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் வக்கிரத்திற்கு நான்கு மாணவியர் பலியாகியுள்ளனர். உண்மை வெளிவந்ததும், கிராமப் பஞ்சாயத்தில் 'சமரசம்' செய்து, இரு பெண்களுக்கும் தலா ரூ. 50,000 கொடுத்து வாயடைத்துவிட்டனர். ஆனால், மற்ற இரு பெண்கள் வழக்கில் துணை நிற்கின்றனர். விசாரணையில் வெளிவந்த செய்தி: இதே ஆசிரியர் மற்றொரு பள்ளியில் இதற்கு முன்னும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கல்வித் துறை அளித்த தண்டனை வெறும் இடமாற்றம். ஆகவே, மற்றொரு பள்ளியிலும் அவர் துணிவுடன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்திருக்கிறார். இடமாற்றம்தான் இம்மாபெரும் குற்றத்திற்கு அரசு அளிக்கும் தண்டனையா? இந்தப் பொறுப்பற்ற அணுகுமுறை குற்றங்கள் வளர ஏதுவாக அமையாதா?
3) ஈரோடு மாவட்ட ஆரம்பப் பள்ளியில் ஏழே வயதான ஓரு பிஞ்சுக் குழந்தை தலைமை ஆசிரியரின் கொடிய பாலியல் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தக் குற்றவாளியும் மற்றொரு பள்ளியில் இதே குற்றம் செய்ததன் விளைவாக இடமாற்றம் செய்யப்பட்டவர்.
4) கோவை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதன் விளைவாகத் தற்கொலை செய்துகொண்டாள்.
5) கோவை மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பலாத்காரத்தால் கருத்தரித்து, கருச்சிதைவிற்கு உட்படுத்தப்பட்டு, உடலும் உள்ளமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன நோயாளியானாள்.
அடுக்கிக்கொண்டே போகலாம். இரண்டாவது, பொது விசாரணையில், நிறைய சாட்சியங்களுடன் மன்றத்தின் முன் நாங்கள் கொண்டு வந்தவையே 13 வழக்குகள். இரு பொது விசாரணைகளிலும் முதலில் விவரித்த தனி விசாரணையிலும் நடுவர் குழுக்கள் பல பரிந்துரைகளையும் குறிப்பிட்ட பிரச்சினை குறித்துப் பொதுவானவையையும் அளித்தன. அவற்றில் சில:
1) இவ்விசாரணைகளில் எடுத்துக்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்த பள்ளிகள் குறித்த கவலை தரும் விவரங்கள் பல வெளிவந்தன. அரசுப் பள்ளிகளிலும் விடுதிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லாமையால் பெண் குழந்தைகள் சுற்றிலும் உள்ள பொது இடங்களைப் பயன்படுத்தும்போது, வக்கிரமான குணம் கொண்டோ ர் அதைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாகிறது.
மகளிர் விடுதிகளில், குறிப்பாக ஆதிதிராவிடத் துறைப் பெண் விடுதிகள் பலவற்றில் ஆண்களே விடுதிக் காப்பாளர்களாக உள்ளனர்.
2) கல்வித் துறையின் ஒழுங்கு நடவடிக்கைகள் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் எடுக்கப்படுவதில்லை. காவல் துறையின் விசாரணை பயனளிக்காவிட்டால் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவியலாது என்னும் தவறான கருத்து நிலவுவதாகத் தெரிகிறது. இந்நிலை மாறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நீண்ட கால தாமதத்திற்குப் பின் நீதி கிட்டட்டும் என்ற அலட்சியம் மாறிக் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் உடனே துறைவழி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பற்றிய விவரங்களை ரகசியமாக மற்ற பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும் குழந்தைகளை இத்தகைய குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கும் வழி காண வேண்டும்.
4) தமிழ்நாடு கல்வி விதிமுறைகள் (Tamil Nadu Education Rules) மாற்றி அமைக்கப்பட்டு, பாலியல் கொடுமை இழைப்பவர்மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக்கப்பட வேண்டும்.
5) குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்து, கல்வி நிறுவனங்களில் நடந்த பாலியல் குற்றங்களை உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டியது அந்நிறுவனங்களின் பொறுப்பாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் நிர்வாகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6) மனித உரிமைகள், குறிப்பாகக் குழந்தை உரிமைகள், அனைத்துப் பள்ளிப் பாடத் திட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சியிலும் சேர்க்கப்பட வேண்டும். மாணவர் தங்களைச் சுற்றி நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும் குற்றவாளிகளை அச்சமின்றி அம்பலப்படுத்தவும் ஏதுவான சூழல் உருவாக வேண்டும்.
7) கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகள் உட்பட, நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் பொறுப்பினையும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8) குழந்தைகள்மீதான பாலியல் வழக்குகளுக்குக் காவல் துறை முன்னுரிமை கொடுத்து, வழக்குகளை வெகுவிரைவில் முடிக்க வேண்டும்.
9) இத்தகைய பலாத்காரங்களுக்குப் பலியாகும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை (Psychological counselling) மிகவும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாகவும் தொடர்ந்து நீண்ட காலமும் உளவியல் ஆலோசனை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் முன்வர வேண்டும்; இல்லாவிடில், வேறு வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.
10) குழந்தைகள்மீதான பாலியல் கொடுமையைத் தடுக்கும் விசேஷச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டம் நமது அரசியல் சாசனம் அளித்துள்ள குழந்தை உரிமைகள், ஐ.நா.வின் குழந்தை உரிமை சாசனம் (Convention on the Rights of the Child), சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் நடைமுறை அல்லது தண்டனை ஆகியவற்றிற்கு எதிரான சாசனம் (Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) ஆகியவை அனைத்திலும் உள்ள குழந்தை உரிமைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். பாலியல் கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் ஏன் அதை யாரிடமும் சொல்லத் தயங்குகின்றனர்? அவர்களது அச்சத்தின் அடிப்படை என்ன?
பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனத்தின் ஆழத்தில் புதைத்து, மறக்க முயல்கின்றனர். அதைப் பற்றிப் பேசுவதே மீண்டும் காயப்படும், வேதனைப்படும் அனுபவமாக இருக்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வினால் தாங்களே கறைபட்டுவிட்டதாக உணர்கின்றனர். வயது வந்தவருடன் ஏற்பட்ட அந்த அனுபவம் தவறானது என உணர்ந்து பெரிதும் அவமானப்படுகின்றனர். ஏதோ வகையில் தாங்களும் அதற்குப் பொறுப்போ என்னும் சந்தேகமும் தாங்களும் பொறுப்பு என்று பெரியவர்கள் நினைப்பார்களோ என்னும் கவலையும் அவர்களை வாட்டுகின்றன. இதனால் பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களது மற்றொரு குழப்பம், நடந்ததை மற்றவர்கள் நம்பமாட்டார்கள்; தாங்கள் கற்பித்துச் சொல்வதாக மற்றவர்கள் நினைப்பார்கள்; பாலியல் தொடுதல்களைத் (sexual touches) தாங்களே விரும்பியதாக நினைத்துக் கொள்வார்கள் என்னும் பயம். சில சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காகக் குழந்தை தான் தன்னைத் தொடச் சொன்னது என்று கூறுவதுண்டு. குழந்தைகள் அன்பையும் அரவணைப்பையும் வேண்டுகின்றனர்; அது அவர்களது உரிமையுமாகும். ஆனால், செக்ஸ் அனுபவம் வேண்டும் என்று கேட்பதில்லை. இவை அனைத்துடன், பல சமயங்களில் குற்றவாளி வெளியில் சொல்லக் கூடாது என்று குழந்தைகளைக் கடுமையாக எச்சரிக்கிறான். இவை அனைத்தும் சேர்ந்து தான் குழந்தைகளின் நாவைக் கட்டிப்போடுகின்றன.
இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கும் நாம் பாத்திரமாக வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்பவேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நடந்தவற்றிற்குக் குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். நல்ல ஆலோசகரிடம் (counseller) குழந்தையை அழைத்துச்சென்று ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவை தவிரப் பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே தற்காப்பு விவரங்கள் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். Good touch எது, bad touch எது என்னும் பாகுபாட்டை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.
இவை அனைத்திலும் கல்வி நிலையங்களுக்குப்பெரும் பொறுப்பு உண்டு. குறிப்பாக, செக்ஸ் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதற்குப் பெற்றோர்கள் பெரும் கூச்சப்படும், பேசக் கூடாது என்று நம்பும் நம் சமுதாயத்தில் இப்பொறுப்பு கல்வி நிலையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்தப் புகலிடத்திலேயே கொடும் தாக்குதல் நடந்தால் எங்கே போவது?
நமது சமுதாயம் குழந்தைகளின் உரிமைகளை மதிக்காத சமுதாயம். ஒழுக்கம் என்ற பெயரில் குழந்தைகளை வாய் திறந்து பேசும் தைரியமும் தன்னம்பிக்கையும் அற்றவர்களாக வளர்த்து, அநீதிகளை மௌனமாகச் சகித்துக்கொள்ளும் அபலைகளாக மாற்றிவிடுகிறோம்.

குற்றங்களுக்குப் பலியாகின்றவர்களில் மிகவும் பரிதாபகரமானோரும் உதவி கிட்டாதவரும் காயப்படுத்தப்படுவோரும் அவமானப்படுத்தப்படுவோரும் குழந்தைகள்தாம். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வியலாத பருவமாதலால், தனிப்பட்ட விகாரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் அவர்கள் இலக்காகின்றனர். சமுதாயமும் அரசும் இவை குறித்த ஆழ்ந்த புரிதலும் கவலையும் கரிசனையும் கொண்டு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்தகைய கேவலங்களையும் கதியற்றோரை வேட்டையாடும் கொடூரங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். நமது சமுதாயத்தை, குறிப்பாகக் கல்வி நிலையங்களை, மூச்சு விட முடியாமல் அழுத்திக்கொண்டிருக்கும் அச்சப் புகைமண்டலம் விலக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனிதாபிமானமுடைய சமுதாயமாக மாற முடியும்.