Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, March 13, 2012

சொந்த நாடு வரலாமா...?குப்புராஜ்,துபாய்



  • வணக்கம் நான் சுமார் 14 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன் மனைவி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் இதுவரை நான் குடும்பத்தோடு நிரந்தரமாக வாழமுடியவில்லை வெளிநாட்டு வாழ்க்கை சலித்துவிட்டது குழந்தைகளோடு வாழ்வதற்கு ஆசைபடுகிறேன் சொந்த நாட்டிற்கு வந்து தொழில் செய்யவும் விரும்புகிறேன் ஆனால் என்ன தொழில் செய்வது என்று புரியவில்லை நான் நாடு வரலாமா? தொழில் செய்யலாமா? என்பதை தாங்கள் விளக்கமாக சொல்லவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

குப்புராஜ்,துபாய்

    திரைகடலோடியும் திரவியம் தேடு என்று நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு அதாவது கடல் தாண்டி போயாவது சம்பாதி நாலு காசு கையில் பாரு பெத்தவங்களை பிள்ளைகுட்டிகளை கண்கலங்காமல் பார்த்துக்க என்பது தான் இந்த பழமொழியின் உள்ளர்த்தம் ஆனால் கடல் தாண்டி போகும் போது ஒரு மனிதன் எவ்வளவு விதமான கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறான் என்பதை பார்த்தால் கல்லுபோல மனசும் ஒரு நிமிஷம் கண்ணீர் விடும்

அந்நிய பூமி அந்நிய மொழி அந்நிய பண்பாடு அந்நிய பழக்கவழக்கம் என்று எத்தனையோ அந்நிய தன்மைகளை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியம் அமைகிறது தாகம் எடுக்கும் போது ஒரு துளி தண்ணீரின் அருமை தெரியும் என்பது போல அந்நிய தேசத்திற்கு போனபிறகு தான் சொந்த நாட்டின் மகத்துவம் புரியும் அருமை தெரியும்

சில பேர் இருக்கிறார்கள் என்னோவோ தாங்கள் பிறந்தது எதற்கும் புண்ணியமில்லாத பூமி வாழ்வதற்கு அருகதை அற்ற தேசம் அதனால் அயல்நாட்டில் வாழ்வது தான் தங்களது தகுதிக்கி சரியானது என்று கருதுகிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மனைவி மக்களை அந்த நாட்டிற்கு அழைத்து செல்ல விரும்பாமல் நீங்கள் சொந்த நாட்டிற்கு வர நினைப்பது பாராட்டத்தக்க செயலாகும்

உங்கள் ஜாதகப்படி இப்போது நீங்கள் எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட தொழிலில் தான் இருக்க வேண்டும் அந்த தொழிலையே ஊருக்கு வந்து சிறிய அளவில் துவங்குங்கள் படிப்படியாக வளர்ந்து நல்ல நிலைக்கு தொழில் வந்துவிடும் நீங்கள் கைகட்டி வேலை செய்து சம்பளம் வாங்கும் நிலைமாறி சம்பளம் கொடுக்கும் நிலைக்கு கண்டிப்பாக வளர்வீர்கள்

2012 ஆம் ஆண்டு முடிந்த பிறகு தாய்நாடு திரும்புங்கள் பெரிய நகரங்களில் தொழில் ஆரம்பிக்க தேவையில்லை உங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரத்திலேயே துவங்குங்கள் நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.