Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, June 18, 2012

நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,,,,,,,விக்னேஷ்

இந்த கால அரசியல்வாதிகள் தன் மக்களுக்கு உழைத்ததை விட அவர்களின் குடும்பத்திற்கு உழைத்தது தான் அதிகம் ,,,,,,,அனால் இவரோ இந்தியா-வில் பிறந்தது நமக்கு பெருமை ,,,விவேகனந்தர் மறு பிறவி எடுத்த சான்று இவரை நமக்கு நினைவுபடுத்துகிறது,,,,,,,,,,,,?

இவரை நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,.

உலகத்தமிழர் நெட்வொர்க் வேண்டுகோள் ,,,,,,இந்தியனை மிச்சம் வைக்க இந்த அரசியல் நடக்கிறதா ,,,,,,,


குழந்தை கூட கொஞ்சும் இந்த வெண்ணிற தாமரையை --


நம் நாட்டு குடியரசில் தலைநிமிர செய்ய எந்த ஒரு அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கதது வருத்தம் அளிக்கிறது ,,,,, 


பொக்ரான் அணு குண்டு புகழ்ந்தது இந்த புத்துணர்வு மனிதனை ,,,,ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
 அடுத்த ஜென்மம் எனக்கு இவர் ஆசிரியர் ஆக இருக்க கடவுளிடம் வரம் கேட்பேன் ,,,,,,,


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும்ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 151931ராமேஸ்வரம்இந்தியாவின்முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும்பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO),பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ளராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன்பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரானதனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைக்கப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டுப் பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

உலகத்தமிழர் விக்னேஷ் 
இந்த பதிவு இந்திய அரசை ஒரு இந்தியன் மண்டியிட்டு கேட்கும் வேண்டுகோள் ,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.