Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 28, 2012

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் கொழும்பை எச்சரிக்குமாறு டில்லிக்கு கூறுகிறார் ராமதாஸ்

சென்னை:  தமிழக அரசியல் தலைவர்களினதும் தமிழர்களினதும் தன்மானத்திற்கு சவால் விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதியும் அவரது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ், தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படுமென மத்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரிழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

இந்தியா கண்டனம் தெரிவிக்காததால் தான் தமிழகத் தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மூலம் இந்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.