Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 14, 2012

ஸ்பெக்ட்ரம் வழக்கில் வெற்றி பெறுவேன்,,,,நான் தான் அரிச்சந்திரன் அரசியலில் ,,,,,,,






.
.
.
.
.
.
.
.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் தனது தொகுதிக்கு வந்தார். 1 ஆண்டுக்குப் பின்னர் நீலகிரி வந்த ஆ.ராசாவுக்கு ஊட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு நான் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட வந்தபோது எனக்கு எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ அதே போன்று இன்றும் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் மத்திய மந்திரியாக இருந்தபோது சி.பி.சி. அமைப்பு என் மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. மத்திய அரசின் தணிக்கைத்துறை என் மீது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்தது.
ஆனால் சி.பி.ஐ. ரூ.33 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் நான் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்து விட்டதாக தெரிவித்து அவதூறு பரப்பினார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தேன். 2 ஜி வழக்கு அனுமான அடிப்படையிலேயே தொடரப்பட்டுள்ளது.
என் மீது போடப்பட்டுள்ள வழக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதி துணையுடனும், மக்கள் சக்தியுடனும், எனது சட்ட அறிவுடனும் எதிர்க்கொண்டு வெற்றிபெறுவேன். நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். நான் திகார் சிறையில் இருந்து கிளம்பியது முதல் சென்னை வரை பல்வேறு கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பகுதியிலும் என் மீது உள்ள வழக்கு குறித்து யாரிடமும் நான் பேசவில்லை.
என் சொந்த தொகுதி மக்களிடத்தில்தான் இதனை முதன்முதலாக கூறுகிறேன். இனி நாடு முழுவதும் இதை தெரிவிப்பேன். நீலகிரி மாவட்டத்தில் இருந்து நீதிப்பயணம் மேற்கொள்வேன். நீலகிரி மக்கள் மீது கொண்டுள்ள பாசத்தால் எனது சொந்த ஊருக்கு செல்லாமல் உங்களை காண இங்கு வந்துள்ளேன்.
மேற்கண்டவாறு ஆ.ராசா பேசினார்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.