Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

நட்பைக் கற்பிப்போம் -விக்கி

 செய்தி 
                சமீபத்தில்   19 வயது பெண்ணை தோழனுக்கு உதவி தேவை என அழைத்து அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து சிதைத்துவிட்டனர்

என் பார்வை
                
              மற்ற எல்ல உறவுகளும் ஒரு கட்டாயத்தினாலோஅல்லது ஒரு எதிர் பார்ப் பினாலோ உருவாவது. ஆனால் நட்பு என்பது எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி நம்பிக்கை ஒன்றின் அடிபடையிலே தோன்றுவது .
         சென்ற தலைமுறையில் எங்கோ சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட ஆண் பெண் நட்பு இந்த தலைமுறையில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியாக எண்ணி மகிழ்ந்த அதே வேளையில் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்வு. நட்பின் நம்பிக்கையை சிதைத்த இந்த நிகழ்வு அனைவரின் மனதிலும் ஒரு நெருடல் ஏற்படுத்திவிட்டது
தோழியை ஏமாற்றிய இந்த கொடுமை ஏன்?
      பருவ வயது மாற்றங்கள் குறித்த அறிவுரைகள் பெண் குழந்தைகளுக்கு அவர்களின்பெற்றோர்களாலோபள்ளிகளிலோசிறிதளவேனுமஅறிவுறுத்தப்படுகிறது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பெண்ணின் பருவ மன உணர்வு குறித்து விவாதிகின்றனர் குட் டச் குறித்து பேசப் படுகிறது.
     ஆனால் ஆண் குழந்தைக்கு இந்த வாய்ப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் அவன் வயது நட்புடன் மட்டுமே விவாதிக்கிறான். அரைகுறையாய் இருக்கும் அந்த நட்பு காட்டும் திசையில் செல்ல வாய்ப்பு அதிகம். இல்லையெனில் இணையதளத்தின் வாயிலாக தவறான வலையில் விழ வாய்ப்புள்ளது . பெற்றோர் பிள்ளைகளின் இணையதள பயன்பாட்டை கவனித்துக்கொண்டே இருக்க முடியாது .இதற்கு தீர்வு என்ன?
       இந்த தலைமுறை எதிலும் வேகம்    நேற்றும் ஒரு மாணவன் ஒரு பெண் காதலிக்கவில்லை என்று அவளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான்
    பெண்ணின் சிநேக சிரிப்பு மட்டுமே காதலுக்கான அறிவிப்பாக எண்ண காரணம் பெண் நட்பு குறித்த தெளிவும் வாழ்க்கை குறித்த பார்வையும் இல்லாததே. அந்த பக்குவம் வரவில்லை .
     வெறியுடன் இருப்பது காதல் என்றால் அங்கே மனசு நேசிக்கபடவில்லை உடல் மீதுதான் காதல் அது காதல் இல்லை மோகம்
     ஒரு சில நிகழ்வுகள்ளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா எனலாம் . இந்த நிகழ்வில் வீரியம் அதிகம் ஆனால் சமீப காலமாக இம்மாதிரியான செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் விவாதிக்கும் தேவை உள்ளது
     கல்வி முறை பிரச்சினையில் எப்படி நீதிபோதனை வகுப்பு செயல்பட விரும்புகிறோமோ அதே போல் இப் பிரச்னை குறித்த மனோரீதியான அணுகுமுறை பள்ளியில் அறிமுகபடுத்த பட வேண்டும் மனோதத்துவ நிபுணர்களை கொண்டு அவர்களுடனான கலந்துரையாடலுடன் கூடிய பாடத்திட்டத்தை கொண்டுவரவேண்டும். அப்போதுதான் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
    எது எப்படியோ இந்த நிகழ்வுகள் பெற்றோர் மற்றும் சமுதாயத்தில் சிறிது காலத்திற்காவது நல்ல நட்பை கூட சந்தேகபடவைக்கும்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.