Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, April 30, 2012

திருமணம் ‍ எதிர்பார்ப்புக்களும் எதிர்பாராதவையும்...விக்கி

ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது என்று திருமணங்கள் சொல்லப் பட்டாலும் தகவல்களால் நிரம்பிய உலகத்தில் குழப்பங்கள் தானா? என்று எண்ணத் தோன்றுகின்றது. நண்பர் கமலுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது போல எல்லாரட்டையும் திருமண முறிவு ஏன் ஏற்படுது என்று கேட்டிருக்கின்றார். 

சேர்ந்து வாழுவதற்கு காரணம் தேடிய காலம் போய், இன்று பிரிந்து வாழுவதற்கு காரணம் தேடுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

1) விவாகரத்து இன்றைய உலகில் அவசியம் தானா?? அல்லது விவாகரத்துப் பெறுவது இன்றைய உலகில் ஓர் நாகரிகமாகிவிட்டதா???

திருமணம் என்றால் என்ன? எனக்கு எப்படி ஒரு வாழக்கைத்துணை வேண்டும் என்றும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். ஒரு ஆண், பெண்ணின் குண இயல்பு என்ன?, அவளுக்குரிய காலச்சக்கரத்தில் அவளின் பிரச்சனை என்ன என்று தெளிவும், பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். குடும்பம் என்றால் என்ன அதன் நன்மைகள் என்ன ஒரு தெளிவு இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு, கறுப்பின மக்கள் அமெரிக்க மண்ணிற்கு தெற்காசிய மக்களை முன் வந்திருந்தாலும், அறிவியல் துறைகளில் அவர்களின் வீதம் குறைவு. இதற்கான அடிப்படை காரணம், விவாகரத்து அதிகமாக கறுப்பு இனத்தில் இருப்பதாலும், குழந்தைகள் தாய் அல்லது தந்தை என்று ஒருவரிடம் மாத்திரம் வளர்கின்றதால் என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு மேற்குலகில் திருமணம் என்ற ஒன்று அவசியமில்லை. மேல் நாட்டு சட்ட திட்டங்கள் பிரிந்து வாழ்வதற்கான வழிமுறைகளையே ஊக்குவிக்கின்றன. டாகடர் பெம்பிளை வேண்டும் என்றால் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்குத் ஆண் தயாராக இருக்க வேண்டும்.

தாம்பத்திய வாழ்வில் சுவாரசியமும், பிடிப்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் நிலை இருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு வந்து விடும். குழந்தை பிறந்த பின் தன்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று ஒரு பெண் நடந்து கொள்வதாலும் குடும்பங்களில் குழப்பம் உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் தேர்வு செய்யும் வாழ்க்கைத்துணையில் தான் எமது 90% மான சந்தோசமும், கஸ்டமும் தங்கியிருக்கின்றது என்கின்றார் ஒரு மேற்கத்தேச அறிஞர். விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களின் இறுதி நிலை விவாகரத்துத் தான். 

2) பெரும்பாலும் இந்த விவாகரத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் யார்???

கோபம் வந்தால் அதிகம் பேசுபவர்கள் பெண்கள், மெளனித்து விடுபவர்கள் ஆண்கள் அதனால் எது காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. உத்தியோகம் புருச லட்சணம் என்பார்கள். ஆண்கள் "தான் ஆண் என்ற ஆதிக்கமும்" ஆனால் பெண்ணின் உழைப்பில் தங்கியிருக்கும் நிலை இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். நான் தனித்து வாழலாம் என்ற மேலோங்கிய எண்ணமோ அல்லது என்னை அவர் கண்டு கொள்வதில்லை என்ற மன அங்கலாய்ப்போ விவாகார ரத்துக்கு காரணம்.

"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம், காசிருந்தால் வாங்கலாம்" என்ற எண்ணப்பாடுகள் கூட விவாகரத்தில் தான் போய் முடியும். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை நேசிக்கலாம், பழகலாம் ஆயினும் நான் தான் அவர் மனைவி என்ற தெளிவு இருக்க வேண்டும். அவர் என்னை விட்டு விட்டு போய் விடக்கூடாது என்ற அளவுக்கு மிஞ்சிய கட்டுப் பாடுகளை ஆணுக்கு பெண் விதித்தாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

அழகான மனைவி வேண்டும் என்று எடுத்து விட்டு, அவளை சந்தேக கண்ணுடன் பார்க்கும் ஆண்களாலும் இந்த நிலை தான். ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை தான் காரணம். திருமணத்தின் முன் உறவை வைத்திருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அப்பாவித்தனமாக வருகின்ற வாழ்க்கைத் துணையிடம் தம் அனுபவங்களை ஒப்பிட முயன்றாலும் நிலைமை கவலைக்கிடம் தான்.

3) விவாகரத்தினூடாக எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கை முறை கட்டியெழுப்பப் படுகின்றதா??? இந்த விவாகரத்தின் மூலம் எதிர்காலச் சந்ததிகளிற்குக் கிடைப்பவை என்ன??? அவற்றுக்கான காரணம் என்ன???

தன்னம்பிக்கை இல்லாததும், சமுதாயத்திற்கு சவாலாக அமைந்து விடும் இளையவர்களை தான் திருமண முறிவுகள் ஏற்படுத்துகின்றன. தந்தை உலகத்தை பார்க்கும் விதமும், தாய் உலகத்தை பார்க்கும் விதமும் வேறு , இவை இரண்டும் குழந்தைக்கு தேவையாம். 

உளவியலும், சமூகவியலும் தான் ஒரு மனிதனை சம்பிரதாயங்களுக்குட்பட்ட மனிதர்களாக வாழ வழிவகுக்கின்றது. ஆனால் சமுதாயத்தை வெறுக்கின்ற அல்லது அதன் நம்பிக்கை இல்லாத இந்த சந்ததியனர், தம் செய்கைகளை நியாயப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள்.

தனித்தாயின் வளர்ப்பில் வளரும் பெண் குழந்தைகள், தாய்க்கு ஏன் இந்த நிலை உருவானது? ஆண்களுக்கு நான் அடி பணியக் கூடாது என்ற ஆண்களுடன் போட்டி போடும் கலாச்சாரமாக வளர்ந்து விடுகின்றாள். 

4) விவாகரத்து எம் தமிழ்ச் சமூக அமைப்பில் அதிகரித்துச் செல்வதைக் குறைக்க ஏதேனுன் வழிமுறைகள் உள்ளனவா?? உங்கள் பார்வையில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா??? நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???

புரிந்துணர்வை வளர்க்க வாய்ப்புகள் உருவாக வேண்டும். திருமணமான நண்பர்கள் குடும்பங்களாக ஒன்று கூடும் போது மனம் விட்டு பிரச்சனைகளை பேசும் போது இது எல்லா வீட்டிலும் நடக்கும் விடயம் அதை பெரிது படுத்தக் கூடாது என்று தெளிவு வரும். பெண்கள் நம்பிக்கையான தோழிகளிடம் கட்டில் முதல் தொட்டில் வரையுள்ள அனுபவங்களை பகிரும் போது பல விடயங்களில் தெளிவு உருவாகின்றது.

நமக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அறியும் பக்குவம் இருப்பின் எமக்கு ஒரு திருப்தி உண்டாகும். உங்களை ஒருவர் எப்படி நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அதைப் போல் அவரையும் நேசிக்கப் பழக வேண்டும். தீர்வு என்று ஒருவரியில் சொல்ல ஒன்றுமில்லை. 

அப்புக்குட்டி மாதிரி ஆக்களுக்கு நான் பதில் சொல்லுவதை விட உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் உளவியல் பற்றி நல்லாச் சொல்லிய்ருக்கின்றார். உங்களுக்காக உங்கு எடுத்து போட்டிருக்கின்றன். முழுதாக கேட்டு முழு மனிதராக குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழ்கின்ற வழியைப் பாருங்கோ.---------------விக்கி 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.