Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

இனி வரும் உலகம்


இனி வரும் உலகம் என்னும் தொகுப்பில் தந்தை பெரியார் கூறியுள்ள செய்திகள் .வரும் காலம் எப்படி இருக்கும் என்பது  குறித்த அவரின் அறிவுப் பார்வை இதன் முதல் பதிப்பு 1944


* மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் அனுபவிப்புக்கும் இன்றுள்ள உழைப்புகள் கஷ்டங்கள் கட்டுகாவல்கள் இருக்காது .


*வாழ்வுக்காக எப்படி உழைப்பது என்கின்ற கவலையும் முயற்சியும் மிக சிறிய அளவிற்கு வந்துவிடும்


*சரீரத்தால் செயப்பட வேண்டிய எல்லாக் காரியமும் அனேகமாக இயந்திரங்களாலேயே செய்து முடிக்கப்படும்


*கம்பியில்லா தந்தி  சாதனம் ஒவ்வ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்


* உருவத்தை தந்தியில் அனுப்பும் சாதனம் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக்கொள்ளத்தக்க வசதி ஏற்படும்


*அதன் மூலம் கல்வி கற்று  கொடுப்பதும் சாத்தியப்படும்


*உணவுகளுக்கு பயன்படும்படியாக உணவு சத்து பொருள்களாக சிறு குப்பியில்
கிடைக்கும்


*பிள்ளை பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது நீக்கப்படலாம் வீரியத்தை இன்ஜெச்ஷனில் எடுத்து பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்க செய்யப்படும்


*பெட்ரோலுக்கு பதிலாக மின்சாரம் பயன்படும்


*அறிவியல் வாழ்க்கை இன்பம் அனுபவிக்க பயன்படும்படியான அதிசிய பொருள்களும் கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவரின் இலாபமாக முடங்காமல் சகல மக்களும் சௌகர்யம் தரும் பொது சாதனமாக அமையும்


என் பார்வை:


         மக்கள்    யாரோ எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள் . சுய சிந்தனையோடு செயல்படுவார்கள் என்பது போன்ற அவரின் சில எதிர்பார்புகள் பொய்த்துவிட்டது
கடவுள் மறுப்பு என்ற ஒரு தளத்தை தவிர அவர் இயங்கிய மற்ற தளங்கள் குறித்த எந்த பதிவுகளுமே மக்களை சென்றடையவில்லை . அவரின் மற்ற சமூக போராட்டங்கள் குறித்த தகவல்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.