Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

பெண்கள் அலங்கார பொம்மைகளா....

21.6.1946  குடியரசு இதழில் வெளியானது. சுலோச்சனா சம்பத் மணவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை 
                -தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை தொகுத்தவர்- 
கி. வீரமணி புத்தகத்தில் படித்ததில் சிறுதுளி  


         பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள்.  இரண்டொரு  உறுப்பில்  மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் ஆண்களுக்கு முழு ஒப்புமை கொண்டவர்கள். நாமும் அவர்களை குழந்தை பருவம் முதல் பேத உணர்ச்சி அற்று ஒன்று போல் நடத்துகிறோம் . ஆனால் அவர்கள் அறிவும் பக்குவமும் அடைந்தஉடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு மனித சமுதாயத்தில் பொம்மைகளாக்கி பயனற்ற ஜீவனாக அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றவர்க்கும் கவலைப்படத்தக்க சாதனமாக செய்து கொண்டு அவர்களை காப்பாற்றவும் திருப்திபடுத்தவும் அலங்காரப்படுத்தி ஒரு அக்றிணை பொருளாக  ஆக்கி வருகிறோம். நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றம் அடைய வேண்டும். பொம்மை தன்மையிலேயே திருப்தி அடைகிறார்கள்
     பெண்களின் உருவை அலங்கரிப்பது அழகை மெச்சுவது சாயலை புகழ்வது
  ஆகியவை பெண் சமுதாயத்திற்கு அவமானம் இழிவு அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார்களா 

    தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தை நம்மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் ஏன் தோன்றுவதில்லை .
ஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் எல்லா தொண்டுகளையும் பெண்கள் பார்க்க முடியும்.அதற்கு சுயமரியாதை அற்ற தன்மை வேண்டும் நம் நாட்டு பெண்கள் மேல்நாட்டு பெண்களை விட சிறந்த அறிவு வன்மை உடையவர்கள் ஆவார்கள் ஏன் ஏராளமானோர் வெளி உலகிற்கு வரக்கூடாது?

         எனவே பெற்றோகள் தங்கள் பெண்களை நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல்  மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றும் கீர்த்தி புகழ் பெரும் பெண்ணாக   ஆக்க வேண்டும் பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத ஒரு இடமும் எண்ணமும் உண்டாகும்படி நடக்க கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்குள் ஏன் இந்த பேதம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும் அவர்கள் புது உலகை சித்தரிக்க வேண்டும்

என் பார்வை 
            கிட்டதட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் யோசித்த பெரியாரின் எண்ணம் இன்னமும் சமுதாயத்திற்கு பெற்றோருக்கு ஏன் பெண்களுக்குமே வரவில்லை .பெரும்பாலான  படித்த பெண்கள் கூட தன உடைகளில் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்திக்கொண்டுள்ள புதுமையான மாற்றங்கள் , தெளிவான தேவையான நேர்மையான சிந்தனைகளில் கொண்டு வரவேண்டும் .அரசியல் சமுகம் குறித்து தங்கள் பார்வையை திருப்ப அவர்களின் கல்வி பயன்பட வேண்டும் .ஆனால்   பெரியார் கூறியபடி பொம்மைதனத்தைதான் விரும்புகிறார்கள்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.