![]() |
ஆண் - பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி – ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான். ஆண் பெண் நட்பு என்பது சமூகத்தின் பார்வையில் பலவிதமான கருத்துக்களை தோற்றுவிக்கிறது. அந்த வகையில் என்றும் விவாதிக்கக் கூடிய வகையில் தான் இந்த உறவு முறை அமைந்துள்ளது.
நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். "பாலைவனச் சோலை" படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். "பிரியாத வரம் வேண்டும்" படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது.
திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண் - பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் – பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.
நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண் - பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலாற நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு.
ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் – பெண் நட்பை பல விடயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் – பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதோடு நின்று போய்விடுகிறது.
வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.
சினிமா படங்களில் மட்டுமல்ல.. கதைகளிலும் "காதல்" என்பதை ஏதோ நட்பின் அடுத்த நிலை என்பது போலத்தான் பார்த்திருக்கிறோம். "நட்பு காதலாக மலர்ந்தது" என்பதை ரெண்டு சிட்டுக் குருவிகளோ.. இல்லை பூச்செடிகளோ .. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு.. பலநூறு முறை நமக்கு பாடம் நடத்தியிருக்கின்றன. உண்மையில் யதார்த்தம் வேறாகவும் இருக்கலாம்.. நடைமுறை வாழ்க்கையில் நட்பு நட்பாகவே தொடருவதையும் நாம் பார்த்திருக்கலாம்.. ஆனால் அது கொஞ்சம் உப்பு சப்பில்லாதது போலிருப்பதால் அதையாரும் கதையாக சினிமாகவாக எடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றபடி நமது ஆசைகளே நமது பயணத்தைத் தீர்மாணிக்கின்றன. சமூகத்தின் பார்வை என்ற சங்கதியும் சிலரை அவர்கள் விரும்பாத பாதையில் திசை திருப்பிவிடுவதுண்டு. நெடுநாள் பழக்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் சில ஒத்த குணங்கள் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் போது.. அதுவே பிடித்தும் போகும் போது.. இந்த சமுகத்தால் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் எங்கே இதை தொடர முடியாது போய்விடுமோ என்ற எண்ணங்கள் பயங்கள் கூட நண்பர்கள் சிலரை காதலர்களாக்கக் கண்டதுண்டு.
வரையறைகளையும்.. தெருவில் குரைக்கும் நாய் போன்ற சமுதாய ஏளனங்களையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக நட்பைத் தொடரவும் முடியும். உண்மையில் வார்த்தைகளின் பற்றாக்குறை கூட "சாதாரண" நட்பிலிருந்து வித்யாசப்படுத்தும் முயற்சியில் இது ஒருவேளை "காதலோ" என நினைக்கத் தோன்றுகிறது.
இந்த விவாதம் ஏதோ புரியாத புதிர்போல நீள்வதற்கு அடிப்படை புரிதல் ஒன்றினை நாம் பலரும் கொண்டிருக்காமை தான் காரணம்.
அந்த புரிதலானது, மனித உறவுகளுக்கு பெயர்வைத்து அழைப்பது, மனித உறவுகளை சட்டங்களுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அடக்கி சமூகச்சட்டங்கள் என்ற செயற்கையான அமைப்பினை உருவாக்கியது. ஆண் பெண் நட்பு என்பதன் சிறப்புத்தன்மை அவரவர் கைகளிலேயே உள்ளது அதை தக்கவைத்துக்கொள்வதும் அவர்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே யதார்த்தமான சிந்தனை மூலம் அனைத்துவிதமான உறவுகளையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையாக இருந்தால்,,,,,,,,,,,,,,, விக்னேஷ் நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். "பாலைவனச் சோலை" படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். "பிரியாத வரம் வேண்டும்" படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது.
திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண் - பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் – பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.
நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண் - பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலாற நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு.
ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் – பெண் நட்பை பல விடயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் – பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதோடு நின்று போய்விடுகிறது.
வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.
சினிமா படங்களில் மட்டுமல்ல.. கதைகளிலும் "காதல்" என்பதை ஏதோ நட்பின் அடுத்த நிலை என்பது போலத்தான் பார்த்திருக்கிறோம். "நட்பு காதலாக மலர்ந்தது" என்பதை ரெண்டு சிட்டுக் குருவிகளோ.. இல்லை பூச்செடிகளோ .. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு.. பலநூறு முறை நமக்கு பாடம் நடத்தியிருக்கின்றன. உண்மையில் யதார்த்தம் வேறாகவும் இருக்கலாம்.. நடைமுறை வாழ்க்கையில் நட்பு நட்பாகவே தொடருவதையும் நாம் பார்த்திருக்கலாம்.. ஆனால் அது கொஞ்சம் உப்பு சப்பில்லாதது போலிருப்பதால் அதையாரும் கதையாக சினிமாகவாக எடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றபடி நமது ஆசைகளே நமது பயணத்தைத் தீர்மாணிக்கின்றன. சமூகத்தின் பார்வை என்ற சங்கதியும் சிலரை அவர்கள் விரும்பாத பாதையில் திசை திருப்பிவிடுவதுண்டு. நெடுநாள் பழக்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் சில ஒத்த குணங்கள் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் போது.. அதுவே பிடித்தும் போகும் போது.. இந்த சமுகத்தால் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் எங்கே இதை தொடர முடியாது போய்விடுமோ என்ற எண்ணங்கள் பயங்கள் கூட நண்பர்கள் சிலரை காதலர்களாக்கக் கண்டதுண்டு.
வரையறைகளையும்.. தெருவில் குரைக்கும் நாய் போன்ற சமுதாய ஏளனங்களையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக நட்பைத் தொடரவும் முடியும். உண்மையில் வார்த்தைகளின் பற்றாக்குறை கூட "சாதாரண" நட்பிலிருந்து வித்யாசப்படுத்தும் முயற்சியில் இது ஒருவேளை "காதலோ" என நினைக்கத் தோன்றுகிறது.
இந்த விவாதம் ஏதோ புரியாத புதிர்போல நீள்வதற்கு அடிப்படை புரிதல் ஒன்றினை நாம் பலரும் கொண்டிருக்காமை தான் காரணம்.
அந்த புரிதலானது, மனித உறவுகளுக்கு பெயர்வைத்து அழைப்பது, மனித உறவுகளை சட்டங்களுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அடக்கி சமூகச்சட்டங்கள் என்ற செயற்கையான அமைப்பினை உருவாக்கியது. ஆண் பெண் நட்பு என்பதன் சிறப்புத்தன்மை அவரவர் கைகளிலேயே உள்ளது அதை தக்கவைத்துக்கொள்வதும் அவர்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே யதார்த்தமான சிந்தனை மூலம் அனைத்துவிதமான உறவுகளையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.