Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

நீங்களும் ஒரு புதிய நண்பனைப் பெறுங்கள்

                                மாதம் ஒரு புத்தகம்


        இந்த மாதம் நான் படித்தது ஊருக்கு நல்லது சொல்வேன் . எழுதியவர்  தமிழருவி மணியன் .
       அரசியல் தளத்தில் மிகவும் அறியப்பட்டவர் ஒரு சில தொலைகாட்சி நிகழ்வுகளில் அவரது பேச்சுகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது . அவை அவரின் சமுக கோணங்களையும் புரிய வைத்தது . பின் இந்த படைப்பு ஆனந்தவிகடனில் வந்தபோதும் படித்தேன் . இப்பொழுது அதை பற்றி எழுத படித்தேன். தொடராக வந்தபொழுது படித்த வேகம் தற்போது இல்லை .
 38 தலைப்புகளில் தான் படித்த புத்தகம் பாதித்த  மனிதர்கள் ஏற்படுத்திய அறிவின் தெளிவில் வந்து விழுந்த வார்த்தைகளின் தொகுப்பு என அவர் தன் முன்னுரையில் குறிப்பிட்டபடி நிறைய உள் மற்றும் வெளி நாடு சரித்திர ,புராண ,நிகழ்கால எடுத்துகாட்டுகளால் சமூக குணங்கள் பற்றிய ஒரு விரிவான அலசலாக இருக்கிறது . எல்லா தலைமுறைக்கும் பொருத்தமான நிறைய தலைப்புகள் . சில கட்டுரைகளில் அதிகமான எடுத்து காட்டுகள் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது .
எனக்கு தெரிந்த விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங் ராஜகுரு போன்றோர் இடையே சந்திர சேகர ஆசாத் ,யதிதிரநாத் தாஸ் போன்றோர் பற்றிய செய்திகள் இன்னமும் நம் விடுதலையை பற்றி நிறைய தெரிந்து கொள்ள இருக்கிறது என்ற தெளிவை தந்தது


எனக்கு பிடித்த சில பகுதிகள்


       வெளிபடையாக வெல்வதல்ல வெற்றி உள்ளத்தை உருக்க வைக்கும் உட்பகையை முறியடிபதுதான் உண்மையான வெற்றி


வறுமையிலும் துயரத்திலும் இளைப் பாறுதல் தருவது இனிய நண்பர்கள் . நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணத்திற்கு சமம்


விதியை நம்பி விழுந்து கிடக்காமல் முயற்சியுடன் எழுந்து நடப்பவர் களையே காலம தன் கணக்கில் கொள்கிறது

முட்டி மோதும் துணிவே இன்பம் அதுதான் வாழ்க்கைப் போர். உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

வாழ்வு ஒரேயொரு நொடியல்ல ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும். ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும் .


இன்றைய வாழ்க்கையை ரசனையுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதன் நேற்றைய நினைவிலும் நாளைய கனவிலும் காலத்தை கழிப்பதில்லை .

பிச்சை சமூகத்தின் சாபம் தானம் மனிதன் சக மனிதனுக்கு வழங்கும் வரம்


முற்றிலும் இல்லாவிட்டாலும் முறையற்ற ஆசைகளையாவது துறந்துவிட ஆசை கொள்வோம்


பெண் விடுதலை என்பது ஆணை வெற்றி கொண்டு அலசிய படுத்துவதோ அரைகுறை ஆடைகளில் அழகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதோ அற்ப காரணஙகளுக்காக விவாகரத்து  பெறுவதோ பெரியவர்களை பராமரிக்கும் கடமையிலிருந்து விடுபட்டு விலகி நிற்பதோ திருமணமே தேவையில்லை என்று தீர்மானம் போடுவதோ அன்று . பெண்கள் கூண்டுக்கும் கூடுக்கும் உள்ள வேற்றுமையை புரிந்து கொள்ளவேண்டும் . கூண்டு கூடாதென்பது ஆரோக்கிய சிந்தனை . கூடே கூடாதென்பது ஆபத்தான மனநோய்


பேசுவதற்கு தகுதியானவர் என்று தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டால் நீ நல்ல மனிதரை இழந்துவிடு வாய் பேசுவதற்கு தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசி விட்டால் உன் வார்த்தைகளை இழந்து விடுகிறாய் . அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை .வார்த்தைகளையும் இழப்பதில்லை .


ஒரு புத்தகத்தை படிப்பது ஒரு புதிய நண்பனை பெறுவது போன்ற இனிய அனுபவம் அதே புத்தகத்தை மீண்டும் படிப்பது நெடுநாள் பிரிந்த நெருங்கிய நண்பனை திரும்பவும் சந்திப்பது போன்ற சுகமான அனுபவம் .




       

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.