Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, June 1, 2013

இந்திய குழந்தைகள் , எந்த ஊரிலும் , நாட்டிலும் சமாளீத்து விடுவார்கள். அமெரிக்கக் குழந்தைகள் ..அமெரிக்காவில் மட்டுமே...

படிப்பு என்பதன் அர்த்தமே நம் ஊரில் தவறானது தான். படிப்பு என்பதே, டிகிரி, மதிப்பெண். புரிகிறதோ இல்லையோ புத்தகத்தை மனப்பாடம் செய்து வாந்தி எடுத்தால் இங்கு மார்க் வங்கி விடலாம். மூலைக்கு மூலை உள்ள பல கணிணி சென்டர்கள், ஏற்கனவே செய்த பிராஜெக்டுகளை பல தலைப்புகளில் வைத்திருப்பார்கள். மாணவர்கள் பலர், குறிப்பாக என்னுடன் படித்த பெண்கள் சிலர், மொத்த புரோகிராமையும் அச்சு பிசகாமல் மனப்பாடம் செய்து கக்கி விடுவர் - எழுத்திலும் சரி, கணிணியில் டைப் செய்தும் சரி. மதிப்பெண்கள் வாங்கிக் குவித்து விடுவர். அவர்கள் தான் சிறந்தவர்கள், அதி புத்திசாலிகள் என்று ஊரே மெச்சிக் கொள்ளும். நன்கு புரிந்து படித்தாலும், மதிப்பெண் குறைந்தால் அவர்கள் முட்டாள்களாகி விடுவர்....

அமெரிக்கக் குழந்தைகள் படித்து வளர்வதில்லை... அறிந்து வளர்கிறார்கள்

இந்தியாவில் முக்கிய மாக தமிழ் நாட்டில் தான் நூற்றுக்கு நூறு என்று எல்லாவற்றிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூட) மார்க்குகள் வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை 1500 , 2000 என்று ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றது ! ஒவ்வொரு பள்ளியும் எப்படியாவது தில்லு முல்லு செய்தாவது நூறு சதவிகிதம் ரிஸல்ட் காண்பிக்க படாத பாடு படுகிறார்கள் ! ஆனால் இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஐ ஐ டி , ஐ ஐ எம் போன்ற உயர்ந்த கல்வி நிலைய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில்லை ! வெறும் மனனம் செய்து பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதில் மன்னர்களாக விளங்கும் கல்வி மற்றும் தேர்வு முறைகளை மாற்றி அமைத்தாலே போதும் ! கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்ற நிலையில் அது பெரும் பாரம் என்ற மன நிலை கட்டாயம் மாறி விடும் ! நம் இந்தியக் குழந்தைகள் பாவம் ! இங்கு நிலவும் கேடு கெட்ட வெறும் மார்க்கு மட்டும் வாங்கினால் போதும் என்ற பெரும் போட்டியால் வரும் மனப் பாரங்களையும் , கஷ்டஙளையும் சுமக்கிறார்கள்! அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான்!அந்த மாதிரி கல்வியை வழங்க, இங்குள்ள ஆசிரியர்கள் ஒத்துழைப்பார்களா? சந்தேகம்தான். ஆசிரியர்களே, நிறைய மெனக்கெட வேண்டி இருக்குமே! நம்ம ஆட்களுக்குதான், வேலை செய்யவே பிடிக்காதே.

நம்ம கல்வி ல மாற்றம் நிறைய தேவை .........?

உங்கள் விக்கி .....


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.