Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்!!!!!!!!!!!!!!!!!!!


எனது எண்ணங்கள்

இந்துதர்மத்தில் காலம் என்பது நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.அவை திரேதாயுகம்,கிருதயுகம்,துவாபர யுகம்,கலியுகம் ஆகும்.
இதில் கடவுளும் மனிதனும் சரிசமமாக வாழ்ந்து வரும் காலம் திரேதாயுகம் ஆகும்.இக்காலத்தில் தர்மம் என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருக்கும்.அதர்மம் இந்த திரேதாயுகத்தில் எப்போதாவது இருக்கும்.
நாம் வாழ்ந்துவரும் காலம் கலியுகம் ஆகும்.கலியுகம் துவங்கி 5101 ஆண்டுகள் ஆகின்றன.கலியுகத்தின் மொத்த கால அளவு 4,12,000 வருடங்கள் ஆகும்.
ஆக,இன்னும் 4,06,0099 வருடங்கள் கலியுகம் இருக்கின்றன.கலியுகத்தில் தர்மம் என்ற பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்குமாம்;

இன்று ஜீனியர் விகடன் வார இதழில் படித்த ஒரு செய்தியைப் பார்த்து எனது நெஞ்சம் பதறியது.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் ஒரு இளம்கல்லூரி மாணவி (கவுரி)தனது தோழியிடம் தனது செல்போனை,அவளது அண்ணனிடம் பேசுவதற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதன்பிறகு,தோழியின் அண்ணன் அடிக்கடி போன் பேசியிருக்கிறான் கவுரியிடம். தவிர, அவளை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறான்.அவனுக்கு இவள் மீது காதலோ காதல்!!!
பல மாதங்கள் போராட்டத்துக்குப்பின்னரும் கவுரி இவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை;

விளைவு அவன் இவளை அவளது கல்லூரியின் வாசலிலேயே வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்துக் கடத்தியிருக்கிறான்.
கடத்திச்சென்று, கவுரியைக் கற்பழித்திருக்கிறான்.அப்படி கற்பழித்ததை செல்போனில் படமாகவும் எடுத்திருக்கிறான்.
விஷயம் போலீஸீக்குப் போனது.



அந்த ஆண் ஓநாய் சொல்லுகிறது.

‘நான் அவளைக் கெடுத்தது நிஜம்தான்.எனக்கு அவளைக் கல்யாணம் செய்து வையுங்கள்’

இந்தக் கட்டுரை ஜீனியர் விகடனில் வந்திருக்கிறது.ஜீனியர் விகடனில் கவுரியின் படத்தை 75%(முகத்தை மறைத்தபடி) பிரசுரித்துள்ளனர்.ஆனால்,அந்த ஓநாய் ஆணின் புகைப்படத்தைப் பிரசுரிக்கவில்லை.(ஜீனியர் விகடன் அந்த ஓநாய் ஆணைப் பாதுகாக்கிறதோ?)

என்னிடம் அதிகாரம் இருந்தால்,அவனது ஊரில் பஸ் நிலையத்தில் அவனை நிர்வாணப்படுத்தி, கவுரியின் கல்லூரிமாணவிகளால் கல்லால் அடித்தே கொல்ல தீர்ப்புச் சொல்லியிருப்பேன்.
அவனுக்கு ஆதரவாக வரும் அவனது அம்மா,அப்பா,சகோதரிகள்,அரசியல்வாதிகள்,அவனது நட்பு வட்டம் அனைவருக்கும் இதே தண்டனைதான்.இதைத் தடுப்பவருக்கும் இதேதண்டனை தான்.
ஜீனியர் விகடனுக்கும் தடை போட்டிருப்பேன் ஓராண்டுக்கு!

தருமம் மிகு தமிழ்நாடாம்.வந்தாரை வாழ வைக்கும் ஊராம்;காதலும் வீரமும் தமிழர் பண்பாடாம். இதை வாசிக்கும் நம் ஒவ்வொருவரின் குடும்பப்பெண்ணுக்கும் இப்படி நடந்தால்தான் நாமெல்லாம் குமுறி எழுவோமா?(இலங்கையில் நம் தமிழ்ப்பெண்களுக்கு சிங்கள அரக்கன்கள் இப்படிச் செய்ததால்தான் 30 ஆண்டுகளாகப் போர் நடந்துவருகிறது)

கலிகாலம் பிறந்து 5101 வருடம் ஆகியே இவ்வளவு அக்கிரமம் நடக்குமானால் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும்?
நமது குடும்பத்து உறுப்பினர்கள் இதுபோன்ற பாதிப்புக்களில் சிக்காமலிருக்க ஒரே ஒரு வழிதான் உண்டு.அது,இஷ்ட தெய்வ வழிபாடு!
உங்களது இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும்,அந்த இஷ்ட தெய்வத்தை அதன் கோவிலுக்குச் சென்று தினமும் வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து வீடு; அல்லது வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து ஆபிஸ்; ஆபிஸிலிருந்து மீண்டும் வீடு என்றும் செல்லலாம்.

இப்படி குறைந்தது 45 நாட்கள் செய்த பின்னர்,இது போன்ற பிரச்னையின் நிழல் கூட நம்மையும் நம் குடும்பத்தையும் சிறிதும் தீண்டாது.

நிறைய்ய்ய எழுத ஆசை.கைவசம் சுமார் ஆயிரம் தகவல்கள் இருக்கின்றன.அதை ஒழுங்குபடுத்தி,நேர்த்தியாக்கி,உங்களுக்கு தந்துகொண்டே இருக்க விரும்புகிறேன்.

தவிர,நான் எப்படி எனது மனநிலையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன் என்ற தலைப்பில் ஒரு தனி வலைப்பூவை நடத்திட ஆசை.

எப்படியெல்லாம் நான் எனது வாழ்க்கையில் ஏமாந்தேன்? ஒருவன்/ஒருத்தியை அவன்/ளது முதல் பேச்சிலிருந்தே பிராடு என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதையெல்லாம் தொகுத்து ஒரு இன்னொரு தனி வலைப்பூவாக பதிப்பிக்க ஆசை.முடியவில்லை;
எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய நீங்கள் எனது வலைப்பூக்களைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பூவின் வாசகராக நான் இருப்பதால்தான் நான் ஏமாறவில்லை? என்று நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்.(நேரில் எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்)

ஆனால்,எனக்கு நேரம் கிடைக்கவில்லை;ஏதோ தினமும் ஒரு அல்லது இரண்டு மணிநேரம் இணையதள மையத்திலிருந்து(ஆம்.நான் ஒரு சராசரி இந்தியக்குடிமகன்) கர்ம சிரத்தையாக என்னால் இந்த உலகத்திற்கு ஆன்மீகக்கடல் வழியாக எனது சிந்தனையைச் சொல்ல முடிகிறதே! அதுவே எனக்கு மனநிறைவைத் தருகிறது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.