Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, June 1, 2013

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது: ஆய்வு....

லண்டன்/புதுடெல்லி: இந்தியாவில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருவதாக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கை இருப்பதாக இந்தியாவில் 87 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது 81 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ஏழு ஆண்டுகளில் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தோர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம் தம்மை நாத்திகர்கள் என கூறிக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 1 சதவீதம் குறைந்துள்ளது. 2005 ல் நடத்தப்பட்ட ஆய்வின்போது கடவுள் நம்பிக்கை இல்லை என 4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்த நிலையில், 2012 ல் நடத்தப்பட்ட ஆய்வின்போது அந்த எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் இதே போக்கே காணப்படுகிறது. கடவுள் மற்றும் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கையிலும் 3 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது. இங்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை  6 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தற்போதைய போப்பாண்டவரின் சொந்த நாடான அர்ஜென்டினாவில் கடவுள் நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேப்போன்று தென்னாப்பிரிக்கா 19 %, அமெரிக்கா 13 %, சுவிட்சர்லாந்து மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா 21 % மற்றும் வியட்நாமில் 23 சதவீதம்  வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில், ஐந்து கண்டங்களை சேர்ந்த  57 நாடுகளில் உள்ள 51,927 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 1,000 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளனர். 

நாத்திகர்கள் அதிகம்பேர் வாழும் நாடாக சீனா திகழ்கிறது.இந்த நாட்டில் வாழும் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளனர். உலக அளவில் இந்த எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.