Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, May 4, 2012

இந்தியாவில் பிறந்தது எனக்கு பெருமை-----விக்கி


மீண்டும் வல்லரசாகும் இந்தியா


மீண்டும் வல்லரசாகும் இந்தியா என்ற இந்துநாடு

இதுவரை ஐரோப்பிய-அமெரிக்க நாடுகள் தான் உலக வரலாற்றை எழுதிவந்தன.அவை வெறும் 5000 வருட வரலாற்றை எழுதி-இந்தியாவில் பாடத்திட்டமாக உள்ளதால் அவற்றைப் படித்த நாம்-ஒவ்வொருவரும் தன்னம்ப்பிக்கை இல்லாமல் –திலும் சாதிக்கும் எண்ணம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.ஆனால்,வெகு விரைவில் உலக வரலாறு மாறப் போகிறது.குறைந்தது 25,000 வருடங்களுக்கான உலக வரலாறு உலகம் முழுவதும் எம்.பி.ஏ.,உள்ளிட்ட பாடத்திட்டங்களில் சேர்க்கப்போகிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமா?
சாத்தியம் தான்..
யேல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப்பேராசிரியர் பவுல் கென்னடி என்பவர் The Rising and Falling of Great Powers என்ற புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் வருமாறு;
கி.பி.1750 வரையில் உலக உற்பத்தியில் 25% அளவும்,உலக ஏற்றுமதியில் 24% அளவும் –உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பாக இருந்தது.
அப்போது உலக ஏற்றுமதியில் பிரிட்டனின் பங்கு வெறும் 2%மட்டுமே!
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து முக்கியப் பங்கு வகித்ததால் அதற்கு ஏராளமான போர்ச்செலவும்,பொருளாதாரச் சீரழிவும் உண்டானது.அதைச் சரிசெய்ய அப்போது இந்தியாவைச் சுரண்டி-தன்னை வளப்படுத்திக் கொண்டது.
இதனால், பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறும்போது உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2.5% ஆகச் சுருங்கிப் போனது.

கி.பி.1875 வரை இந்தியா முழுக்க ஆரம்பப் பள்ளிகள் மட்டும் 2,75,000 இருந்தன.15 வயது நிறைவடையும் ஒவ்வொரு இந்தியனும் குறைந்தது 4 மொழிகளில் புலமை பெற்றவனாக இருந்தான்.
இந்தியாவில் தயாரான கைத்தறித்துணிகளுக்கு பலமடங்கு வரி! பிரிட்டனில் தயாரான விசைத்தறித்துணிகளுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய வரியே கிடையாது.
டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப் புகழ் பெற்றவை.இங்கு நெய்யப்பட்ட 6 கஜம் சேலை ஒன்றை இன்றைய மெழுகுத்தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்துவிடமுடியும்.அவ்வளவு மெல்லிசானது.அதே சமயம் நீடித்து உழைப்பவை.பிரிட்டன் அரசு அதிகாரிகள் இந்த ரக சேலை நெய்பவர்களை அழைத்து வந்து அவர்கள் விரல்களை வெட்டிவிட்டனர்.
இதே போல,கேரளா மாநிலத்தின் வீரவிளையாட்டான களரியின் ஆசானை சுட்டுக் கொன்றனர்.களரி பயிற்சி மூலமாக ஒரே நேரத்தில் 300 பேரை ஒரே ஒரு கத்தியைக் கொண்டு சில விநாடிகளில் கொல்லமுடியும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.