Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, May 4, 2012

ஏன் நான் இதை எழுதினேன்?இந்தியா அடிமையாகக் காரணங்கள்


மூன்று விஷயங்கள் என்னை இந்த இணையப்பலகை(பிளாக்)யில் என்னை எழுதத்தூண்டியது।இந்த பிளாக்கைப் படிக்கும் முஸ்லீம்,கிறிஸ்தவ அன்பர்களுக்கும் ஒன்று சொல்லவிரும்புகிறேன்।எது உண்மையோ அது வாழ்ந்தே தீரும்;வளர்ந்தே தீரும்।

1. ஜே.ஆர்.டி.ரத்தன் டாடா ஒரு முறை லண்டன் சென்றிருந்தார்.அங்கே ஒரு உணவகத்தின் வாசலில் இப்படி எழுதியிருந்தது.”நாய்களும்,இந்தியர்களும் உள்ளே நுழையக் கூடாது”அதைப் பார்த்த ரத்தன் டாடாவுக்கு கோபம் வந்தது.
இந்தியா திரும்பினார்.மும்பையில் ஒரு உணவகம் திறந்தார்.அதன் வாசலில் ஒரு அறிவிப்பு செய்தார்.
“நாய்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே வரக்கூடாது’என்று!!!2.சுதந்திரத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்:நமது நாட்டின் மகாராஜாக்களில் ஒருவர் ஒரு ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?
அதான்,உங்களுக்கு எங்களது நாட்டைப்பற்றி ஒன்றுமே தெரியாது.இருந்தும் உங்களால் எப்படி எங்களை அடிமைப்படுத்தமுடிந்தது?
அது ரொம்ப சுலபம்।உங்கள் நாட்டு இளைஞர்கள் உங்களது மொழி இலக்கியங்களைப் படிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.தேசபக்தியை அழித்துவிடலாம்.३.।நமது பாரத நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க பலர் பல விதங்களில் போராடினர்.அதில் காங்கிரஸ் கட்சியும்,நேதாஜி சுபாஷ் அவர்களின் இந்திய சுதந்திர ராணுவமும் முக்கிய பங்காற்றின.


அதே சமயத்தில், நாக்பூரில் பிறந்து எம்.பி.பி.எஸ் முடித்த ஒரு இளைஞர் வித்தியாசமாக சிந்தித்தார்.அந்த சிந்தனை:
கடந்த 25,000 ஆண்டுகளாக நமது நாடு எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.உலகம் புகழும் –மாபெரும் வீரர்களுக்கும் பஞ்சமில்லை.வீர சிவாஜி,ராணா பிரதாப் சிங்,மகா அலெக்சாண்டரின் 4,00,000 பேர் கொண்ட ராணுவத்தையே,தனது 50,000 பேர் கொண்ட ராணுவத்தால் ஜெயித்த புருஷோத்தமன்,ஆஸ்திரேலியா வரை தமிழர் பேரரசினை உருவாக்கிய ராஜராஜ சோழன்..
.. இவ்வளவு வீரர்கள் பிறந்து கொண்டே இருந்தும் கூட
எப்படி நாம் அடிமைப் பட்டோம்?
6000 மைல்கள் தூரத்தில் இருந்து வந்த சில ஆங்கிலேய வியாபாரிகள் சில வருடங்களில் நமது நாட்டை அடிமைப் படுத்தியது எப்படி?ஆங்கிலேயனுக்கு நமது மொழி தெரியாது.பண்பாடு தெரியாது? நம்மைப் பற்றி எதுவும் தெரியாது?
எல்லோரும் ஆங்கிலேயனை எப்படியாவது விரட்டி விடத்துடிக்கின்றனர்.சரி!இவன் எப்படி நமது நாட்டிற்குள் நுழைந்தான்?இவன் திரும்பவும் நமது நாட்டைக் கைப்பற்றமாட்டான் என்பது என்ன நிச்சயம்?
அப்படி கைப்பற்றாமல் இருக்க என்ன வழி?

இந்த நாட்டில் பிறக்கும் கடைசி குழந்தைவரை – இந்தநாட்டின் பெருமைகளைப் போதிக்கவேண்டும்.
இந்த நாட்டை எவரும் இழிவாக நினைக்க விடக்கூடாது.
எத்தனை நயவஞ்சக வழியிலும் இந்த நாட்டின் பெருமை,அதிகாரம் வெளிநாட்டினர் கையில் போய் விடக் கூடாது.அதற்கு ஒரு நிரந்தர அமைப்பு தேவை.
அந்த அமைப்புதான் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்!
நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தினமும் ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டுக்கு ஆர்.எஸ்.எஸின் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
அதன் பிறகு தான் ஆர்.எஸ்.எஸின் அவசியமும்,நமது பாரத நாட்டின் பெருமைகளும் புரியும்.
அந்த இளைஞர் பெயர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவர்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.