Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Sunday, May 13, 2012

எப்போ திருந்துவனுங்க இந்த பைக் திருடனுங்க ,,,,,,,,?

எப்போ திருந்துவனுங்க இந்த பைக் திருடனுங்க ,,,,,,,,? ,,,,,,விக்கி ,,,,,,

வியாசர்பாடி பெரியார் நகர் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி, மீன் வியாபாரி. இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களது மகள் விமலா (20)வுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மணமகன் கோபால கிருஷ்ணன், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர். கோபால கிருஷ்ணனுக்கும் விமலாவுக்கும் வருகிற 23-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்து பெற்றோர் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் விமலா பெற்றோரிடம் தனக்கு டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு பெற்றோர் சம்மதித்தனர். பின்னர் மாப்பிள்ளைக்கு பெரிய ‘பைக்’ வாங்கித்தர வேண்டும் என்று கேட்டார். திருமணம் முடியட்டும் வாங்கித் தருகிறோம் என்று பெற்றோர் கூறினர். ஆனால் இப்போதே ‘பைக்’ வேண்டும் என்று விமலா அடம் பிடித்தார்.
மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு இப்போது ‘பைக்’ வேண்டாம். பின்னர் வாங்கிக் கொள்கிறோம் என்றனர். இதையும் விமலா ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் பெற்றோர் ‘பைக்’ வாங்கித் தருகிறோம் என்று சம்மதித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த விமலா திடீர் என்று தூக்குப்போட்டுக் கொண்டார். வீடு திரும்பிய தாய் தாட்சாயிணி மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அலறி துடித்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து மகளை மீட்டு எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விமலா பரிதாபமாக இறந்தார். அவரது உடலைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது தொடர்பாக செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமீல் பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.