Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, February 1, 2012

2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,

அருப்புக்கோட்டை : ""இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடந்த நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மாணவர்களே உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மாணவன், இளைஞனின் முக்கியமான விஷயம். மாணவர்கள் கனவுகள் காண வேண்டும். அதன் மூலம் தங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். உங்கள் அனைவரையும் 2030 ல் சந்திரனில் சந்திக்கிறேன். அப்போது எனக்கு வயது 100. நாம் உழைத்து தான் நாட்டை வளமான நாடாக ஆக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை, கிராமங்களின் வளர்ச்சி தான். கிராம எழுச்சி இந்தியாவின் வளர்ச்சி. கிராமங்களில் சாலைகள் மூலம் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு, அறிவு சார்ந்த இணைப்பு இவை மூன்றும் சேர்ந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இன்னும் ஒன்பது ஆண்டுகளில்(2020) இந்தியா வளர்ந்த நாடாக மாறும். உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் இந்தியா முன்னேறும். அனைத்து வசதிகளிலும் மேம்பட்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும், என்றார். கல்லூரி செயலாளர் சவுண்டையா தலைமை வகித்தார். முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார். கலெக்டர் பாலாஜி, நஜ்மல்கோதா எஸ்.பி., வைகை செல்வன் எம்.எல்.ஏ., கல்லூரி தலைவர் இந்தியநாதன், கல்லூரிமுன்னாள் செயலர் புன்னைவனம், கல்லூரி புரவலர் வரதராஜன் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.கே. பெண்கள் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பிரீத்தி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பேப்பர் கட்டிங்கை தயார் செய்து "அப்துல் கலாம் கலெக்சன் ' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆல்பத்தை காட்டினார். மாணவியை பாராட்டிய கலாம், ஆல்பத்தில் கையெழுத்திட்டார்.

ஜி.10 தரத்தில் இந்தியா மாணவர்கள் கலந்துரையாடலில் இலவச திட்டங்கள் பற்றி தங்கள் கருத்து என்ன? என்ற மாணவி ஐஸ்வர்யா கேள்விக்கு,"" இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக்கும். நாம் உழைத்து தான் சாப்பிட வேண்டும்,'' என்றார்.

உங்கள் பணியில் கவிதை, விஞ்ஞானி, ஆசிரியர் எது சிறந்தது எது ? என்ற மாணவி சுதா கேள்விக்கு, ""ஆசிரியர் பணி தான் எனக்கு பிடித்த பணி ,''என்றார்.

உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பீடு என்ன? என்ற மாணவர் சரவணகுமார் கேள்விக்கு, "" ஜி.8 நாடுகளில் தற்போது இந்தியா ஜி.10 தரத்தில் உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.