Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, February 2, 2012

சீனாவுடன் போருக்கு தயாராகிறது இந்தியா,,,,,,இப்படி ஏற்றி விட்டு பார்ப்பது இந்த அமெரிக்காவின் வேலை....?




வாஷிங்டன்: சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் அந்நாட்டு மேலவை புலனாய்வுக் குழு கூட்டத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 ஆசிய நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது இருதரப்பு உறவில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, அருணாச்சல மாநிலத்தில் எல்லை பிரச்னை, காஷ்மீர் மக்கள் சீனா செல்வதற்கு தனி விசா, இந்திய ராணுவ அதிகாரி சீனா செல்வதற்கு விசா மறுப்பு என பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்படுகிறது. போர் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு வசதியாக, இந்தியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இவ்விரு நாடுகளிடையே உடனடியாக போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதுபோல், கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இப்படி ஏற்றி விட்டு பார்ப்பது இந்த அமெரிக்காவின் வேலை ,,,,உங்க விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.