Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, February 1, 2012

மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு......?


மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு....

மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து முதல் செமெஸ்டர் / வருடம் முடிவடைந்திருக்கும் அல்லது முடியும் தருவாயில் இருக்கும். கடந்த பதிவுகளின் தொடர்ச்சி இது. சமயமின்மையே இப்பதிவு தாமதமானதற்கு காரணம்.
பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து விடுவதோடு பெற்றவர்கள் கடமை முடிவதில்லை. அவர்கள் சரியான பாதையில் செல்கின்றனரா / ஒழுங்காக படிக்கின்றனரா என்று அடிக்கடி கவனித்துக்கொள்ள வேண்டும். சிறந்த முறையில் அவர்கள் பட்டம் பெற வேண்டாமா ??அதற்கு நீங்களும் உதவுங்களேன்...
நான் சந்தித்த பல பெற்றோர்களே நான் இந்த பதிவை இட காரணம்.... பெற்றோர்கள் பல தரம் உண்டு அவற்றில் சில
1. படித்த சராசரி பெற்றோர்கள்.... (இவர்கள் பரவாயில்லை)
2. படித்த தந்தை.. மிக உயர்ந்த பதவி (நேரமின்மை). தாய் படிக்காதவர் அல்லது அதிக உலக அனுபவம் இல்லாதவர்.
3. படிக்காத தந்தை.. சொந்த தொழில்-வியாபாரம் செய்பவர் (நிறைய பணப்புழக்கம்)....
4. தந்தை தாய் இரண்டு பேரும் அதிகம் படிக்காதவர் (கண்மூடித்தனமாக பிள்ளை சொல்வதை நம்புவர்).
5. நகர வாசிகள் / கிராம வாசிகள் ( பந்தா... / அறியாமை)
6. வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்கள் (தூரம் சிலருக்கு ஒரு குறை).
கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அறியாமையும்,பதவியையும், பணத்தையும்நேரமின்மையையும் துர் உபயோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவை என்னென்ன??
1. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தந்தை (படிக்காத விவசாயி) என்னிடம் தன் மகன் 40 பாடங்களில் பெயில் ஆகி இருப்பதாக கூறி அழுதார். 6 மாசத்துக்கொரு முறை பரீட்சை நடத்துறாங்களே உங்க மகனை கேட்கலையா என்றேன். கேட்டோமே!! செமெஸ்டர் பரிட்சை நடக்கும் போது ஃபீஸ் வாங்கிப்போவான் ஆனால் ரிஸல்ட் எப்போ வரும் என்று கேட்டால் அதெல்லாம் நாலு வருஷம் கழிச்சு கோர்ஸ் முடியும் போது தான் தருவாங்கண்ணு சொல்லுவான்.. அப்படி இல்லையாங்க என்று பரிதாபமாக கேட்டார்.

2. மாணவர்கள் இரண்டாவது வருடத்தில் கால் வைத்தவுடன்... மிக மும்முரமாக ஒரு விஷயத்தில் இறங்கிவிடுவார்கள்... என்னண்ணு கேக்குறீங்களா?? பாங்க் லோன் வாங்க லெட்டர் தயாரிப்பதில் (பெற்றோருக்கு தெரியாமல் தான்.... ) இந்த பணத்தை கொண்டு அவர்களது ஆடம்பரச்செலவுகள் (பைக், லாப்டாப், ஊர்சுத்தல், மற்றும் பல) நடத்தப்படும். படித்து முடிக்கும் வரை இது வீட்டுக்கு தெரிய வரவே வராது.
3. சில வீட்டில் (பண புழக்கம் அதிகமுள்ள) கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் பொய் சொல்லி அல்லது மிரட்டி (செத்து போவேன், காலேஜ் போக மாட்டேன் என்றெல்லாம்..) வாங்கிச் செல்வர். சில மாணவர்கள் திருடக்கூட துணிந்து விடுவார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தான் உபயோகிக்கும் கம்ப்பூட்டர் லாப் கம்பூட்டர்களையே பார்ட் பார்டாக கழட்டி விற்றுக்கொண்டிருந்தான். பெற்றோருக்கு எவ்வளவு தலைகுனிவு.
4. க்ளாஸ் கட்டடித்து வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவது மாணவர்களுக்கு ஜாலியான விஷயம்... இது ஓவராகிப்போனால்அட்டெண்டன்ஸ் குறைவால் பரிட்சை எழுதமுடியாமல் போய்விடும். இது பல பெற்றோர்களுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது.....
5. மாணவர்கள் சேர்ந்து ஊர் சுற்றுவது (உள்ளூர் இல்லீங்க வெளியூர்). அவங்களே பஸ்/கார் அமர்த்தி செல்வார்கள். இது சில நேரம் உயிரை குடிக்கும் பயணங்களாகி முடிந்து விடும். தொலை தூரத்தில் இருக்கும் பெற்றோருக்கு இது கவனிக்க முடியாத ஒன்று.
இவற்றை தடுக்க சில வழி முறைகள்
1. கல்லூரியில் சேர்த்த முதல் நாளே தெளிவாக பாட திட்டம் பற்றிய “rules and regulations” தெரிந்து வைத்துக்கொள்ள் வேண்டும்.
2. ஓவ்வொரு வகுப்புக்கும் ஒரு Class coordinator (ஒரு ஆசிரியையோ அல்லது ஆசிரியரோ) இருப்பார். அவரே அந்த மாண்வர்கள் பட்டம் பெறும் வரை கவனித்து கொள்வர். அவருடைய போண் நம்பர் மற்று email id தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
3. அவரை மதம் ஒரு முறை தொலைபேசியிலோ/நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ தொடர்பு கொண்டு கல்லூரி விஷேஷங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
4. ஓவ்வொரு கல்லூரிக்கும் ஒரு இணயதளம் இருக்கும்.. அதை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கல்லூரிகளில் நடந்த, நடக்கும், மற்றும் நடக்கப்போகும் நிகழ்ச்சிகள், பயிற்ச்சித்திட்டங்கள், பரிட்சைகளின் அட்டவணை, பரிட்சை முடிவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். இணய தளம் இல்லையென்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் மாத சந்திப்பின் போது தெரிந்து கொள்ள வேண்டும்.
5. காசு பணம் கேட்கும் போது யோசித்து தேவை அறிந்து கொடுக்க வேண்டும். வெளியூர்களுக்கு நண்பர்களோடு போக வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு பெற்றோர் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு வைக்க வேண்டும்.
6. பிள்ளைகளின் நட்பு வட்டம் யார் யார் என்றும் அவரது, போன், மின்அஞ்சல் மற்றும் முகவரி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களையும் இடைக்கிடை தொடர்பு கொள்ள வேண்டும்.
7. தொடர்ந்து மார்க்கு குறைவாக வாங்குகிறார்களா... அப்படியானால் அவர்களுக்கு பாடம் சரியாக புரியவில்லை என்று அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை சந்தித்து பேசி Special care கொடுக்கச்சொல்ல்லாம்.
இல்லையேல் ட்யூசன் வைக்கலாம். முதலிலேயே இதை சரி செய்தல் சிறப்பு. அல்லது எப்போதும்... பரிட்சை எழுதிவிட்டு பாசாவோமா?? பெயிலாவோமா?? என்று பார்த்து பார்த்து காத்திருக்க வேண்டும்.
8. மாணவர்களுக்கு attendance குறித்துள்ள முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு எங்கள் கல்லூரியில் 75% இருந்தால் தான் பரிட்சை எழுத முடியும் இல்லாவிட்டால் அடுத்த வருடம் தான். இந்த attendance உங்க பிள்ளை எத்தனை நாள் நீங்க கட்டிக்கொடுத்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு போனான் என்பதை பொறுத்த்து இல்லை. அவன் ஒவ்வொரு பாடத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தான் என்பதை பொறுத்தது.
9. கடைசியாக உங்க செல்ல பிள்ளைக்கு கொஞ்சம் நல்ல புத்திமதிகளும்நன்னெறிகளும் (Ethics) சொல்லிக்கொடுங்க.நேர்மையாக வாழ்வதின் பலன்களையும் சொல்லுங்க. ஓவ்வொரு வருடமும் நிறைய மாணவர்கள் பரிட்சை ஹால்களில் பிடிபடுகிறார்கள். காப்பி/பிட்டு அடிக்க வித விதமான் முறைகள் கையாளுகிறார்கள். எப்படி காப்பி அடிக்கிறதுண்ணு ப்லான் போடுற சமயத்தில் அவங்க அழகாக படிக்கலாம்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.