Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, February 1, 2012

50 ஆயிரம் கோடிக்கு விமான வாங்கும் திட்டம் ,,,,,,சீனாவை நடுங்க வைக்க போகிறோம் என்று நினைத்து கொண்டு ,,, இந்தியா நஷ்டத்தில் இருக்க முடிவு ,,,,,,?

50 ஆயிரம் கோடிக்கு விமான வாங்கும் திட்டம் ,,,,,,சீனாவை நடுங்க வைக்க போகிறோம் என்று நினைத்து கொண்டு ,,, இந்தியா நஷ்டத்தில் இருக்க முடிவு ,,,,,,?


புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், "டசால்ட் ஏவியேஷன் ராபல்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, இந்திய விமானப் படை, 126 அதி நவீன போர் விமானங்களை வாங்கவுள்ளது. ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில், பிரமாண்டமான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், இந்திய விமானப் படைக்கு, அதி நவீன போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, சர்வதேச அளவில் பிரலமான போர் விமான தயாரிப்பு நிறுவனங்களை அணுகவும், முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவின் மிக்-35, அமெரிக்காவின் எப்-பால்கான், போயிங் எப்-18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரீபன், ஐரோப்பாவின் டைபூன் மற்றும் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் ராபல் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்களை வழங்க முன்வந்தன. ஏலத்தின் மூலம், விமான நிறுவனத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு, இது தொடர்பான டைபூன் மற்றும் ராபல் ஆகிய நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில், ஏதாவது ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, ஏலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இதற்கான ஏலத்தில் குறைந்த விலையை குறிப்பிட்ட ராபல் நிறுவனம், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், அடுத்த ஆண்டில் தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

50 ஆயிரம் கோடி ரூபாய்: இந்த ஒப்பந்தப்படி, இந்திய விமானப் படைக்கு, 126 அதி நவீன போர் விமானங்களை, ராபல் நிறுவனம், அடுத்த பத்தாண்டுகளில் வழங்கும். இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி மதிப்பிலானது. முதல் கட்டமாக, 18 விமானங்களை, ராபல் நிறுவனமே தயாரித்து வழங்கும் என்றும், மீதமுள்ள விமானங்களை, இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வழங்கும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.,,,,,,,அனைத்து இந்திய மக்களும் யோசித்து பார்க்கவும் ,,,,,


                                                                                                                 உங்கள் விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.