Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, February 20, 2012

இயற்கைப் பேரழிவிலிருந்து நமது பூமியைக் காக்கவும்,உலக அமைதியை வலுப்படுத்தவும் ......?

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நவக்கிரகங்களில் பெரும்பாலானவை முறையாக இயங்க வில்லை;ஜோதிடத்தின் அடிப்படையை அறிந்தவர்களுக்கு இது சுலபமாகப் புரியும்.ஒரு ராசியில் ஒருவருடம் வரை குருபகவான் பயணிப்பார்;ஒரு ராசியில் இரண்டரை வருடம் வரை சனிபகவான் பயணிப்பார்;ஒரு ராசியை 45 நாட்களில் செவ்வாய்பகவான் கடந்துசெல்லுவார்;ஆனால்,இந்த நடைமுறை கி.பி.2002க்குப் பிறகு செயல்படவில்லை;இதற்கு பலப்பல சூட்சுமமான காரணங்கள் உள்ளன
இந்த வருடம் கி.பி.2012 !!! ஏராளமான அழிவுகள்,நமது பூமிக்கு இயற்கைச் சீற்றங்களால் ஏற்படப்போகின்றன.அந்த சீற்றங்களால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கப்படப் போகிறோம்;கோடிகளை வைத்திருப்போரால் மட்டும் தப்பிக்க முடியாது;ஆத்ம பலம் எனப்படும் தெய்வபக்தி,சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம்,நியாயமான வாழ்க்கை போன்றவைகளால் இந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.வருடம் தோறும் வரும் சிவராத்திரியன்று சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது நமது மரபு;பல லட்சம் வருடங்களாக நாம் சிவனை வழிபட்டுவருகிறோம்;கலியுகத்தில் ,இது சிறிது மாறி சிவராத்திரியன்று நமது குலதெய்வம் கோவிலுக்கு நாம் செல்வது வழக்கம்;சிவராத்திரி முழுவதும் தூங்காமல் இருந்து,சிவனை வழிபட்டு,மறுநாள் பகல் முழுவதும் தூங்காமல் இருந்தால் அது மிகப்பெரிய புண்ணியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்;ஒருவேளை அப்படி மறுநாள் பகலில் தூங்கினால்,நாம் தூங்கியதும் சிவகணங்கள் நமது புண்ணியத்தை எடுத்துச் சென்று விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்;

ஆனால்,சிவராத்திரி இரவுகளில் சித்தர்பீடங்கள்,ஜீவசமாதிகள்கூகுள்(1க்குப் பின்னால் 100 சைபர்கள்) கோடி மடங்கு சக்தியுடன் திகழும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.சிவராத்திரி இரவு முழுவதும் நாம் ஏதாவது ஒரு சித்தர்பீடத்திலோ அல்லது ஜீவசமாதியிலோ ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது பல வருட பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த சிவ ரகசியம் ஆகும்.இவ்வாறு ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க சிவராத்திரிவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஆச்சரியமான அதிசயம்!!!

சிவராத்திரியன்று ஏதாவது ஒரு ஜீவசமாதியில் மஞ்சள் துண்டு விரித்து,மஞ்சள் ஆடையை அணிந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,குறைந்தது ஒரு மணி நேரம் வரை மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,
1.மன உளைச்சல்கள் தீரும்;
2.குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள்,வேதனைகள்,துயரங்கள்,துன்பங்கள்,பாசத்திற்கான ஏக்கங்கள் தீர்ந்துவிடும்.
3.பண ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் தீரத்துவங்கும்;
4.பல பிறவிகளாக நாம் சேமித்து வைத்த பாவங்கள்,நமது கர்மவினைகளாக இன்று வரையிலும் வாட்டி எடுக்கும்;அந்த கர்மவினை எப்பேர்ப்பட்ட மலையளவு இருந்தாலும்,அவை இந்த ஒரே இரவு ஓம்சிவசிவஓம் ஜபத்தினால்,கரைந்து காணாமல் போய்விடும்.
5.நாம் செய்துவரும் தொழிலில் இருந்துவரும் மந்தநிலை அடியோடு மாறிவிடும்;
6.ஆன்மீகத்தில் ஓரளவாவது முன்னேற மாட்டோமா? என்ற ஏக்கம் உள்ளவர்கள் விரைவான முன்னேற்றத்தை அடைவார்கள்;தகுந்த குரு இவர்களைத் தேடிவருவார்;
7.தவறான வாழ்க்கையிலிருந்து மீளத் துடிப்பவர்கள்,ஒரே நாளில் அடியோடு திருந்திவிடுவார்கள்.(அவர்கள் சார்பாக,அவர்களின் ரத்த உறவுகளும் இவ்வாறு வழிபாடு செய்யலாம்)   8.நீண்டகாலமாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள்,இந்த நாளில் வருகை தந்து மனமுவந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,விரைவில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.