Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, February 11, 2012

சினிமா பார்த்து கொலைகளுக்கு திட்டம் தீட்டும் மாணவர்கள் ,,,,,,,,?

சென்னையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி ஆசிரியயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயற்பட்டு வருகிறது.
150 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 1500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி(39) வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் 7 இடங்களில் குத்தினான்.
மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் உமா மகேஸ்வரி விழுந்தார். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இந்த சம்பவம் பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவனிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைகார மாணவன் கூறியதாவது, ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு என்னைப்பற்றி தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் என்னுடைய பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்று கூறியுள்ளான்.
பொதுவாக பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள் பற்றிய தகவலை சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஆசிரியை தெரிவித்தது மாணவனின் கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.