Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

பொறியியல் பட்டப்படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 5% இடஒதுக்கீடு!!


இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு “5 சதவீத இடம் ஒதுக்கப்பட உள்ளது”.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிமுகப்படுத்தியுள்ள கல்விக் கட்டண ரத்து திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று ஏஐசிடிஇ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், 2012-13ம் கல்வியாண்டில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டண ரத்து திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவர்களுக்கு தனிக் கலந்தாய்வு நடத்தப்படும். கல்விக் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
புதிய கல்விக் கட்டண ரத்து திட்டத்தை, கடந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால் சில மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அதற்கு முன்பே மாணவ சேர்க்கை நடைமுறைகளை முடித்து விட்டிருந்ததால் , அப்போது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,இதற்க்கு இந்த திட்டம் இல்லாமல் இருந்தால் நல்ல இருக்கும் ,
                                                                                  இப்படிக்கு 
                                                                          உங்கள் விக்னேஷ்       
                                                                               

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.