Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

Post titleதேர்வு வழிகாட்டி – தொடர் 1 – “புத்திசாலி மாணவர் Vs சராசரி மாணவர்”


எந்த ஒரு பள்ளியிலும் அல்லது கல்லூரியிலும் உள்ள மாணவர்களை 4 வகைகளாக பிரிக்கலாம்.
1. அதிக மதிப்பெண்களை பெறும் புத்திசாலி மாணவர்கள்
2. அதிக மதிப்பெண்களை பெறத் தவறிடும் புத்திசாலி மாணவர்கள்
3. அதிக மதிப்பெண்களை பெறும் சராசரி மாணவர்கள்
4. அதிக மதிப்பெண்களை பெறத் தவறிடும் சராசரி மாணவர்கள்
மாணவர்கள் பெருவாரியாக அவர்களின் மதிப்பெண்களைப் பொறுத்தே மதிக்கப்படுகிறார்கள். நல்ல மதிப்பெண்களை பெறுபவர் புத்திசாலி என்றும், குறைந்த மதிப்பெண்களை பெறுபவர் சராசரி மாணவர் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்திசாலியான மாணவர் யார்? சராசரி மாணவர் யார்?

புத்திசாலியான மாணவர் யார்?

  • தன் மூளைத்திறனை அதிகமாக பயன்படுத்துபவர்
  • பாடத்தை முழுமையாக படித்திருப்பவர்
  • பாடத்தை விரைவில் உள்வாங்கிக்கொண்டு புரிந்து கொள்ளக் கூடியவர்
  • சூழ்நிலைக்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் மாணவர்
  • தனித்தன்மையுடன் சிந்திக்கக்கூடியவர்
  • விரைவில் செயல்படக்கூடியவர்
  • அதிக ஊக்கமுடையவர்
  • சவால்களை எதிர் கொள்ள விரும்புபவர்!!

சராசரி மாணவர் யார்?

மாணவர்கள் அனைவருக்கும் மூளைத்திறன் ஒரே அளவுதான். அதனைப் பயன்படுத்துவதில்தான் வேறுபாடு இருக்கிறது. அதிகமாக பயன்படுத்துபவர் புத்திசாலியாகவும், குறைவாகப் பயன்படுத்துபவர் சராசரி மாணவராகவும் ஆகின்றனர்.
மூளைத்திறனை முழுமையாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் சராசரி மாணவரும் புத்திசாலி மாணவராக மாற முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.. நமது கல்விகளஞ்சியத்தின் நோக்கமும் அதுவே!! – இந்த தேர்வு வழிகாட்டி மூலம் முன்னேற துடிக்கும் மாணவர்கள் நிச்சயமாக பயன் பெறுவார்கள்!!                         இப்படி எழுதின எதாவது படிக்கிரங்கப்பா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                          முடிந்தால் எல்லா மாணவர்களும் வெற்றி பெறலாம்  உங்கள் விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.