Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, January 27, 2012

மனது என்ற ஒன்றில் ஊனம் இல்லாவிடில் ,,,,,,?


உழைப்பதற்கு ஊனம் தடை இல்லை ,,,,,,,

உயர்வதற்கு ஊனம் தடை இல்லை ,,,,,,,

மனது என்ற ஒன்றில் ஊனம் இல்லாவிடில் ,,,,,,?

எல்லாருக்கும் வணக்கம் ,,,,,,

            நான் இதை பற்றி எழுத காரணம் பெயர் வாங்குவதற்காக அல்ல ,பிறர் ஊனத்தையும் சுட்டி கட்ட அல்ல ,எல்லோரும் உங்கள் மனதில் ஒரு கேள்வி கேளுங்கள் ஒரு நிமிடம் ,ஏன் என்றால் நான் பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு உடல் அளவில் பதிக்கபட்ட ஒருவர் நம் அருகில் அமர்ந்தாள் என்ன செய்கிறோம் ,,,,,,,,,, என்று யோசித்தால் 99 சதவிகதம் பேர் அவர்களை பற்றிய யோசனை இல்லாமல் இருக்கமாட்டார்கள்,யோசனை என்றால் ஒன்று அய்யோ  இவர்கள் பாவம்,அல்லது ஏன்டா இது நம்ம பக்கம் உட்காந்திருக்கு இது ஒரு வயதான முதியவர் என்றாலும் சரி,,,,,,,நாம் முகம் சுழிக்கிறோம் அல்லவா,,,,,,ஒரு நிமிடம் நாம் அவர்களை பற்றி அதே நிமிடம் இவ்வாறு யோசித்தால் இது போன்ற ஒருவர் நம் வீட்டில் இருந்தாலோ அல்லது அருகில் இருந்தாலோ ,,,அப்போது ஏன் யோசிக்காமல் உதவுகிரிர்கள் அல்லவா, இது உங்கள் ரத்த உறவு என்று தானே ,,,அப்போ ஏன் அதே ஒரு முகம் தெரியாத நண்பர் என்றால் முகம் சுழிக்கிரிகள் ,,,,இதை பற்றி சொல்ல காரணம் அந்த பஸ்ஸில் வந்த சக பயணிகளில் நானும் ஒருவன் ,,,அப்போது ஒரு ஊனமுற்ற நபர் பஸ் ஏற மெதுவாக வந்தவுடன் பஸ் நடத்துனர் பஸ் எடுக்க வேண்டும் என்று விசில் அடித்து பஸ்  எடுக்க வைத்தார்,அவரோ நடக்க முடியாமல் மெதுவாக வந்து ஏறியவுடன் ,,ஏன் பெருசு உனக்குத்தான் கால் நடக்க முடியலையே ஏன் இங்க வந்து ஏன் உசுர  வாங்குற ,,,,  இப்படி சொல்ல அந்த பெரியவரோ தம்பி நான் திருடி போழைக்களை ,,,,ஏமாற்றி போழைக்களை ,,,,,  ஏன் என்ன இப்படி சொல்ற ,,,எனக்கு உல்லுக்குள் பல யோசனை.ஏன்டா இவுரு இப்படி சொன்னாரு சரி இவுரு எங்க இறங்குவரு அங்க அவர் கிட்டையிய கேற்றுலாம் நினைச்சன் ,,அதே போல நானும் அவரும் ஒரே பஸ் ஸ்டாப்ல் இறங்கினோம் ,,அப்போது கேட்டன் ,,,,ஐயா பெரியவரே ,,,,ஏன் நீங்க இப்படி சொன்னிர்கள் என்ற அவர் ஒரு வார்த்தை கூறினர் ,,,,,தம்பி இதே இடத்தில் என்னை மாதிரி நீ இருந்தாலும் இதை தான் கூறி இருப்பை என்றார் ,,,,,,   அப்போ தான் புரிந்து கொண்டேன் இவர்கள் கோவப்பட்டால் அந்த நடத்துனர் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று ,,அந்த மனிதர் என்னை கேட்டார், தம்பி உன் பெயர் என்ன என்று, நான் ஐயா என் பெயர் விக்னேஷ் என்று கூறினேன்,அவர் என்னிடம் ஒன்றை மட்டும் கூறினர் ,,தம்பி நீ படித்தவன் பண்புள்ளவன் என்று ஒரு நிமிடத்தில் புரிந்து கொண்டேன் ,,,அதனால் தான் மேலும் உன்னிடம் ஒன்றை மட்டும் கேட்டேன் என்றார் ,,,,,அது என்ன தெர்யும நாங்கள் இருவரும் டீ குடித்து விட்டு கிளாசை வைக்க சென்றோம் அங்கு அவர் வைத்திருக்கும் ஊன்று கோல் நான் எடுத்து கொடுத்து விட்டு ,,ஐயா நீங்கள் எங்க போறீங்க  என்று மட்டும் தான் கேட்டேன்,,ஆனால் அவர் தம்பி நீ யார் என்று  எனக்கு தெரியாது ,,ஆனால் நீ என்னிடம் இப்படி பேசுகிறாய் ,,மற்றவர்கள் டேய் நொண்டி எட்ட போ ,,கிட்ட வராத ,,,ஏன் என் மகன் கூட உன் தொல்லை தாங்க முடியலை  எங்கயாவது பொய் தொலையேன் ,,,இப்படி தான் சொல்லுவான் ,,,,,சிலர் மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியே நடிப்பார் ,,ஒரு உதவி கூட செய்ய மாட்டார் ,,,,,நீ ஏன் கிட்ட இருந்த நிமிடத்தில் உன்னை புரிந்து கொண்டேன் ,,,,என்றார் ,,,சரி ஐயா நான் செக்கியேன் நீங்கள் பார்த்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு ,,நான் ஏன் வேலையை தொடர்தேன் ,,அப்போது நான் என்னை பற்றி எனக்குளே பல கேள்விகளை எழுப்பி கொண்டு வந்தேன் என் அருகில் இருக்கும் ஏன் நண்பர்களை பற்றியும் யோசித்து வந்தேன் ,,,,ஒரு ஒருவர் எப்படி என்று ,,அதற்க்கு ஏற்ற  மாதிரி நானும் என்னை ...இனி மாற்றி கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன் ,


அப்போது தான் நான் ஒன்று யோசித்தேன் எங்கள் உரில் உள்ள ஒருவரின் நிலைமையை ,,,,அவர் பண்பு இல்லை அவர் செய்கை எப்படி இருந்தாலும் என்னிடம் நல்ல  முறையில் தான் பழகுவர்,, அவர் ஒரு ஊனமுற்றவர் ,,,அவர்களிடம் நானும் பேசும் போதும் நன்றாகதான் பேசுவோம் ,,,,என் நண்பன் ஒருவன் இருக்கிறன்.அவன் பேசுவான் அவரிடம் அப்படி இப்படி என்று ஆனால் மறுப்பக்கம் வந்தவுடன் 'அவன் இருக்கிறன் நொண்டி பய ' இப்படி பேசுவான் ,,நான் சொல்லுவன் அதே போல அவனிடம் ,,,,,,,டேய் இப்படி பேசாத நாளைக்கு உனக்கு வரும் என்று ,,கேட்கமாட்டான் பேசி அவரை  சண்டைக்கு இழுப்பான்,
என் கிட்ட பேசினா ஒரு மாதிரியும் அதே மற்றொருவரிடம் பேசினா ஒரு மாதிரியும் பேசுவான்,அப்போது தான் புரிந்து கொண்டேன் ,,ஊனம் உள்ளவனிடம் உள்ள ஒரு மாற்றம் கூட,,,,,,,,, இந்த மனம் உள்ளவனிடம் இல்லை என்று ,,,,நீங்களே சொல்லுங்க ,,,நான் யாரிடம் நட்பு வைக்கலாம் என்று ,,,,பிறகு அவனை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து ,,,,,அவன் இதை படித்தால் கோவப்படாம யோசிச்சி பார்க்கட்டும் என்று தான் இங்கு எழுதி உள்ளேன் ,,,,,,,,,,,,,,,,உங்க விக்னேஷ் ,,,,,,,,,ஊனமுற்றோருக்கு உதவுங்கள்,,,, இது என் வேண்டுகோள் ,,,,,,,


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.