Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Sunday, January 29, 2012

இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை: குஷ்பு பேச்சு ---என்ன நியூஸ் இது கலைஞருக்கு தெர்யுமா,,,,,,?


இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை: குஷ்பு பேச்சு ---என்ன நியூஸ்,,,,,,,,,,,இது கலைஞருக்கு தெர்யுமா ,,,,,,,,? 




ஈரோட்டில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ’’இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன்.

தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.

இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.

இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான்.

தமிழ்நாட்டில் பலமணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பால் விலை-பஸ் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர்’’ என்று முடித்தார் ,,,,,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.