Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, January 23, 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: மக்களுடன் பேச்சு நடத்த அரசுக்கு விக்னேஷ் வலியுறுத்தல்??????????

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் மக்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விக்னேஷ்  வலியுறுத்தியுள்ளார்.





பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகே கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அந்தப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத்தில் ரஷ்ய முன்னாள் அதிபர் கோர்ப்பசேவும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் 1988-ம் ஆண்டில் கையெழுத்திட்டனர். பத்திரிகைகளில் இந்த செய்தியை பார்த்த நாள் முதலே, இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர்.



இதற்கிடையே, ரஷ்ய கூட்டமைப்பு பிரிவினால் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த திட்டம் மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் உற்பத்தியை துவங்க இருக்கிறது.



நாட்டுக்கு மின்சாரம் தேவை என்பது மறுப்பதற்கில்லை என்றாலும், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களையும், சூரிய சக்தி மற்றும் குப்பைகளில் இருந்தும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் மின்சக்தியை உற்பத்தி செய்ய இயலும்.



இந்த நேரத்தில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் உள்ள அணு உலை சுனாமியால் தாக்கப்பட்டு அணுக்கதிர்கள் வெளிப்பட்டதை அடுத்து, 500 கி.மீ. சுற்றளவுக்கு அது பரவி அந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பதும், 1986ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள செர்னோபில்லில் அணு உலை விபத்து நடந்து 30 கி.மீ. சுற்றளவுக்கு பாலைவனமாக இன்றும் அவை காட்சியளிப்பதோடு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கதிரியக்க பாதிப்புக்கு உள்ளாகியது.



இதனால் ஜப்பான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிகோ போன்ற மேலை நாடுகளில் 2020க்குள் அனைத்து அணு உலைகளையும் மூடி விடுவது என்று தீர்மானித்து இருப்பதையும், ஜப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதையும், மூன்று மைல் தீவு அணு உலை விபத்திற்குப் பிறகு அமெரிக்காவிலும், செர்னோபில் அணு உலை விபத்திற்கு பிறகு ரஷ்யாவிலும் புதிய அணு உலைகள் துவங்கப்படவில்லை.



இந்தியாவிலும் அணுமின் நிலையம் துவக்குவதற்கு மேற்கு வங்க மற்றும் கேரள மாநில அரசுகள் தவிர்த்து விட்டன என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.



நமது நாட்டில் கூட போபால் விஷ வாயு கசிவின் தாக்கம் நமது மக்களை எந்தளவுக்கு பாதித்தது என்பதும், அதற்கு காரணமான அந்நிய தேசத்தார் எப்படி தப்பித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

எனவே வந்த பின்பு நோய்க்கு மருந்து தேடுவதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதே இந்திய அரசின் கடமை.



இந்தப் பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் நம்பி வாழக் கூடியவர்கள்.



எனவே, போராட்டம் நடத்தி வரும் அந்த மக்களை உடனடியாக அழைத்துப் பேசி அவர்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே அணுமின் நிலையம் இயங்குவதை பற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்," என்று விக்னேஷ் கூறியுள்ளார். இந்திய ல நானும் ஒரு குடிமகன் உங்க விக்னேஷ்,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.