Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, January 27, 2012

இந்தியா சீனா இடையே மோதல் வருமா?,,,,,,,,,,ஜோதிடப்படியும் வரும் ,,,,பொறாமையாலும் வரும் ,,,,,,,?

கொஞ்ச காலமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டு எதிரி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான ரகசிய வேலையில் சீனா ஈடுபடுவது. விசா கொடுப்பதில் இருக்கும் பிரச்சனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படுத்தும் பிரச்சனை என்று எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு மோதலை நோக்கி இந்தியாவும், சீனாவும் போவது போல் தெரிகிறது. இது எந்த அளவிற்கு இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு அல்லது எதிர்ப்பு, பகைமை எப்படி இருக்கும்? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எப்படிப் பார்த்தாலும், இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது சீனாவால் நமக்கு நிறைய தொந்தரவுகள் உண்டு. அதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், தற்பொழுது இந்தியாவினுடைய கிரக அமைப்புகள் சாதமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் முடிவு, அதாவது 27.12.2011க்குப் பிறகு சனி மாறுகிறார். அப்படி சனி மாறும் போது இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் உண்டாகும். இந்தியா சனியோட ஆதிக்கம் பெற்ற நாடு. சனி எதிரான கிரகம் என்பது செவ்வாய். இந்த செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுதான் சீனா. செவ்வாய்தான் கம்யூனிஸத்திற்கும், செம்மை நிறத்திற்கும் உரிய கிரகம். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்போதுமே ஆகாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் சீனாவால் இந்தியாவிற்கு பிரச்சனைகள் வரும். குறிப்பாக 2012, 2013, 2014 காலகட்டங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாக இருக்கும். அதில் இந்தியாவிற்குள்ளேயே சில உள்நாட்டுக் குழப்பங்கள், நக்சலைட்டுகள் தூண்டுவிடப்படுதல் போன்றதெல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு சீனாவால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கிடக்கிறது. இந்தியாவினுடைய அண்டை அயல்நாடுகள் அனைத்தையுமே சீனா தனக்கு கையடக்கமாக வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவை இயக்கக் கூடிய கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை இருக்கிறது. சீனா முழுக்க முழுக்க செவ்வாயினுடைய ஆதிக்கம் பெற்ற நாடாக இருந்தாலும் அதனுடைய யோகாதிபதியாக வருவது புதன். புதன் எப்படியென்றால், பதுங்கியிருந்து பாய்தல், பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்வார்களே அந்த மாதிரியான சில வேலைகளையெல்லாம் சீனா செய்து வருகிறது. ஏனென்றால் புதனுடைய அமைப்பு அந்த மாதிரியானது. சந்தையில் ஒரு தரமான பொருள் வந்தால் அதேபோன்ற பொருளை உருவாக்குவார்கள். இதனை இமிடேஷன் என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன்தான். இதுபோன்ற பல சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படிப் பார்த்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஆள்பவர்கள் விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது மிகவும் நல்லது.       


இதை விட முக்கியம் சீனாவின் கண் இப்போது இலங்கை பக்கம் செல்கிறது ,,,,,,

தமிழர் தமிழர் என்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் ;;;;

அதனால் தன இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு தரமறுக்கிறது இப்போது உள்ள இந்திய அரசு,,,,,,,,,,

                                                                                            இப்படிக்கு 
                                                                                                                  விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.