Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, January 23, 2012

தமிழர்களை தெர்யுமா,,,,,,,,,,,,,,,,,,?

ஒவ்வொரு முறை மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது வலியச்சென்று ஆப்பில் அமர்ந்துக்கொண்டு அய்யய்யோ குத்துதே... குடையுதே... என்று புலம்புவதாலும், அதே சமயம் சில நல்ல படங்களை (தென்மேற்கு பருவக்காற்று, வெங்காயம்) தவற விடுவதாலும் என் மேலேயே எனக்கு ஒரு கோபம் உண்டு. நேற்று வரை இந்த படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்கேயோ ஒரு விளம்பரத்தில் “சங்ககாலத்திற்கு ஒரு பயணம்” என்று வாசித்ததின் விளைவாக திடுமென படம் பார்க்க முடிவு செய்து கிளம்பினேன். தண்டையார்பேட்டை எம்.எம்.திரையரங்கம், சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. மழை வேறு பெய்துக்கொண்டிருந்ததால் சொற்ப நபர்களே வந்திருந்தார்கள். இருப்பினும் வந்திருந்தவர்கள் அனைவருமே எங்கேயோ எப்படியோ படத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் பேசியபோது தெரிந்துக்கொண்டேன்.

மனித இனம் வீடு கட்ட, சமைக்க, ஆடை நெய்ய கற்றுக்கொள்ளாத காலத்தில் அத்தனை பெருமையோடு வீடு கட்டி, ஆடை உடுத்தி, சமைத்து நாகரிகமாக ஆயர்குடி எனும் பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள் தமிழ் பேசும் ஒரு குழு மக்கள். அவர்கள் ஒரு சமயத்தில் வடக்கில் இருந்து (தமிழ் அல்லாத பிறமொழி பேசும்) வந்தேறிகளால் முல்லைக்குடி என்ற பகுதிக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். முல்லைக்குடி பகுதியில் கிடைத்த வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாலை எனும் கொடிய வாழ்வாதார சூழல் வந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. இப்போது ஒன்று கொள்ளையடித்து பிழைக்க வேண்டும், அல்லது இழந்த ஆயர்குடியை மீட்க வேண்டும். இறுதியில் ஆயர்குடியை மீட்பது என்று முடிவாகி போரில் இறங்கும் தமிழர்கள் வென்றார்களா...? என்பதே மீதிக்கதை.

இந்தக்கதையை படித்ததுமே உங்களுக்கு ஒரு இனத்தின் வரலாறு நினைவிற்கு வரக்கூடும். அதை உறுதிப்படுத்தும் விதமாக “அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதன் பிறகு வந்த காட்சியமைப்புகளை, வசனங்களை, போர் தந்திரங்களை அப்படியே வரிவரியாக எழுத வேண்டுமென்று அத்தனை ஆசையாக இருக்கிறது. இருந்தாலும் அதை திரையில் பார்க்கும்போது இன்னும் இன்னும் பரவசப்படுவீர்கள். எனவே தயவு செய்து இந்த படத்தை (தூக்குவதற்கு முன்பு) திரையரங்கிற்கு சென்று பார்க்கவும். திரையரங்குகள் லிஸ்ட்.

பயங்கர ஷார்ப்பான வசனங்கள். “பிழைப்போமா... அழிவோமா... என்று தெரியாது. வாழ்ந்தோம் என்று பதிவு செய்ய விரும்புகிறோம்...” என்ற வசனத்தில் ஆரம்பித்து, “போரில் வெல்ல வீரம் மட்டும் போதுமானதல்ல... சூழ்ச்சியும் அவசியம்...” என்று தொடர்ந்து, “நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள்...” என்று முடிவது வரை நிறைய பளிச் டைப் வசனங்கள். 

இது மட்டுமில்லாமல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள், சமூகநிலை, அவர்களின் காதல், காமம், திருமணம் செய்யும் முறை போன்றவற்றை போகிறபோக்கில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பாலை. 

காஞ்சிவரம் படத்தில் நடித்த ஷம்மு – காயாம்பூ என்ற பெண் போராளி பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் கூட நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல நாயகனாக நடித்திருக்கும் சுனிலும் தன் பங்கிற்கு சிலம்பம் கற்று, ஈட்டி எரியப் பயின்று படத்தில் நடித்திருக்கிறார்.

இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல. அந்த வகையில் இயக்குனர் செந்தமிழன் வெற்றி பெற்றிருக்கிறார். 

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?

என்றும் அன்புடன்
விக்னேஷ்  


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.