Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, January 25, 2012

அமெரிக்க உளவு துறைக்கு ஆப்படிக்கும் கேங்!,,,,,,,,,,,,,,,இது mathiri unmaiyaga நடந்தால்,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்!
ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம், இந்தச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் The Losers. 
படத்தின் மையக் கதை: அமெரிக்காவின் CIA உளவு நிறுவனமானது தன் வசமுள்ள நன்கு பயிற்றப்பட்ட அதி சிறந்த வீரர்களை தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள தீவிரவாதக் கும்பலை அழிக்கும் நோக்கில் அனுப்பி வைக்கின்றது. சம நேரத்தில் இந்த ஐவர் குழு தீவிரவாதக் கும்பலின் முகாமினை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்த தொடங்கும் போது உதவிக்கு அமெரிக்க போர் விமானமும் விமானத் தாக்குதல் மூலம் தனது பங்களிப்பினை நல்கும் என்பதே திட்டமாகும். கேணல் ப்ராங்கிளின் க்ளே தலமையிலான ஐவர் அடங்கிய குழு தீவிரவாதக் கும்பலின் முகாமினைத் தாக்குவதற்கு முன்பதாக இரகசியமாக வேவு பார்க்கின்றார்கள். அப்போது பணயக் கைதிகளாக அங்கே 25 சிறுவர்களை வேனிலிருந்து (Van) இறக்குகின்றனர் தீவிரவாதக் குழுவினர்.

CIA நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற Black Ops குழுவினர் ஐவரும்,தாக்குதலைத் தொடங்கினால் 25 அப்பாவிச் சிறுவர்களும் கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.ஆகவே விமானத் தாக்குதலை நிறுத்துமாறு வோக்கிடோக்கி மூலம் அறிவிக்கிறார்கள். ஆனால் விமானியோ கேணலின் அறிவுரையினைச் செவிமடுக்காது விமானத்தினை முகாம் இருக்கும் திசை நோக்கிச் செலுத்துகிறார்.விமானம் அமெரிக்காவிலிருந்து பொலிவியா நாட்டின் எல்லையினை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சமயோசிதமாகச் சிந்தித்த கேணல்; விமானம் தாக்குதலைத் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்பதாக ஓடோடிச் சென்று தனது குழுவினர் உதவியுடன் தீவிரவாதக் குழுவினர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் நடாத்தி 25 அப்பாவிச் சிறுவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வருகின்றார்கள். இதன் பின்னர் விமானம் தனது பங்கிற்கு சகட்டு மேனிக்கு குண்டுத் தாக்குதலை நடாத்துகின்றது.

வெற்றிகரமான தாக்குதல் மூலம் கேணல் Franklin Clay அவர்களின் அணியினரால் மீட்கப்பட்ட சிறுவர்களை ஏற்றி வந்த வாகனமும் விமானக் குண்டுத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் தப்புகின்றது. இந் நேரத்தில் ஓர் உலங்குவானூர்தியை (ஹெலிகொப்டர்) வரவழைத்து கேணல் ப்ராங்கிளின் அவர்கள் தாம் மீட்ட 25 சிறுவர்களையும் பொலிவிய நாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கின்றார்கள். உலங்குவானூர்தி வானத்தில் பறக்கத் தொடங்க அமெரிக்கப் போர் விமானம் உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடாத்தி அப்பாவி 25 உயிர்களையும் கேணல் ப்ராங்கிளின் மற்றும் அவரது குழுவினரின் கண் முன்னே பறித்தெடுக்கிறது. தம்மால் சிறை மீட்கப்பட்ட 25 அப்பாவிச் சிறுவர்களின் உயிரும், கண் முன்னே தமது அமெரிக்கப் படையால் பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்த ஐவரும் CIA நிறுவனத்தின் மீது தாக்குதல் நடாத்த திட்டமிடுகின்றார்கள். 
இந்த நேரத்தில் மேற்படி ஐவரையும் போட்டுத் தள்ளி, தமக்கு எதிராகச் செயற்படத் திட்டமிடும் குழுவினரின் கதையை முடிக்கும் நோக்கில் அமெரிக்க உளவு நிறுவனமானது Colombiana திரைப்படப் புகழ் Zoe Saldana அவர்களை சிறப்பு அதிகாரியாக (Aisha)பொலிவியாவிற்கு அனுப்பி வைக்கின்றது. CIA நிறுவனத்திற்கு எதிரான தாக்குதலை கேணல் Franklin Clay தலமையிலான குழுவினர் வெற்றிகரமாக நடாத்தி முடித்தார்களா? அல்லது CIA நிறுவனத்தின் விசேட பயிற்சி பெற்ற பெண் அதிகாரி Aisha அவர்கள் CIA நிறுவனத் திட்டப்படி ஐவரையும் போட்டுத் தள்ளினாரா? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழும். ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக படத்தினைத் திசை திருப்பியிருக்கிறார் இயக்குனர் Sylvain White அவர்கள். CIA நிறுவன அதிகாரி Aisha அவர்களின் வருகையுடன் படத்தின் கதை நகர்வின் திசை மாறுகின்றது.இது தொடர்பாக அறிய ஆவலா? அப்படியாயின் நீங்கள் படத்தினைப் பார்க்க முயற்சிக்கலாம்.

படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்: 
*நடிகர் Jeffrey Dean Morgan அவர்கள் இந்தக் குழுவின் கேணல் தர அதிகாரியாக கேணல் Franklin Clay எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Takers திரைப்பட புகழ் Idris Elba அவர்கள் வில்லியம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன், Aisha எனும் பெயரில் Colombiana திரைப்படப் புகழ் நடிகை Zoe Saldana அவர்களும்,  நடிகர் Chris Evans அவர்கள் Jack எனும் பெயரிலும், நடிகர் Columbus Short அவர்கள் Linwood எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர்களுடன், இன்னும் சில ஹாலிவூட், பொலிவூட் (Bollywood) நடிகர்கள் இணைந்து இப் படத்திற்கு அணி சேர்த்திருக்கிறார்கள்.

*படத்தின் சிறப்பு இசையமைப்பாளர்கள் வரிசையில் A.R.Rahman அவர்கள் தனது சிறப்பு இசையின் மூலம் ஏனைய இசையமைப்பாளர்களிலிருந்து வேறுபட்டு தனது தனித்துவத் தன்மை மூலம் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

*காதல் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடிகர் Jeffrey dean Morgan அவர்களும், நடிகை Zoe saladana அவர்களும் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்கள். அதே நேரம் ஆக்சன் காட்சிகளும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்.

*துபாய், மியாமி (Miami), இந்தியா, Houston என நகரும் காட்சிகளில் அழகிய இயற்கை காட்சிகளைத் தரிசிக்கும் பாக்கியமும் படத்தினைப் பார்ப்போருக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 
*இந்தியாவில் படத்தின் பிரதான வில்லன் Max அவர்கள் தனது விடுமுறையினைக் கழிக்கும் போது, ஹாலிவூட் மாடல்கள் தமது அழகின் மூலம் அவரைச் சுற்றி நின்று கிறங்கடிக்கிறார்கள்.ரசிகர்களையும் கிறங்கடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

*படத்தின் வசனங்கள், குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றாற் போல அதிகளவு ஆபாசமின்றி புனையப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு, ஒலிக் கலவை அனைத்தும் காட்சிகளிற்குச் சறுக்கல் ஏற்படா வண்ணம் அமைந்திருக்கிறது.

*Warner Broos நிறுவனத்தினர் இப் படத்தின் விநியோக உரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். 

*293 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கபப்ட்டிருக்கும் இத் திரைப்படமானது 23ம் திகதி ஏப்ரல் மாதம் 2010ம் ஆண்டு திரைக்கு வந்திருக்கிறது.


The Losers: உளவு நிறுவனம் மீது உள உறுதியுடன் போர் தொடுக்கும் வீரர்களின் சாகசம்.

இத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் வீக்கிப்பீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.