Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, January 23, 2012

கொல்லிமலை ரகசியம்,,,,,,,,,,,?


தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு இரவில், செல்வின் (அதாங்கஅஞ்சாசிங்கம்) அவரது நண்பரின் திருமண நிகழ்விற்காக நாமக்கல், கொல்லிமலை செல்ல இருப்பதாக சொல்ல, எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடுங்க என்றேன்.

வெள்ளிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு ரயில். இரவு பத்தரைக்கு செல்வினையும் அவரது நண்பர்களையும் எக்மோர் சரவண பவனில் சந்தித்தேன். அவர்கள் டாஸ்மாக்கை கடந்துதான் சரவண பவனுக்கு வந்திருக்கிறார்கள் என்பது முகத்திலேயே தெரிந்தது. பாம்பின கால் பாம்பறியும் என்பதுபோல செல்வின் குறிப்பறிந்து ஒளியூடுருவும் பகார்டியை வாட்டர் பாட்டிலில் மிக்ஸ் செய்து தயாராக வைத்திருந்தார். சிறிது நேரத்தில் செல்வினுடைய நண்பர்கள் எங்களுடைய நண்பர்களாக மாற, மிதமான பகார்டி போதையுடன் பயணம் இனிதே தொடங்கியது.

சனிக்கிழமை காலை ஆறரை மணி. சேலம் மாநகராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. ரயிலுக்கு காலைக்கடனை செலுத்திவிட்டு வெளியே வந்தால் ரயில் நிலையத்தின் எதிரே பூட்டிய டாஸ்மாக் எங்களை ஏளனம் செய்தது. கடமைக்காக காலை டிபனை முடித்துக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் செல்ல வேண்டி ஒரு ஜாக்கி பஸ்ஸில் ஏறினோம். (அட லோக்கல் பஸ்ஸுங்க) ம்ம்ம் சேலத்தில் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது. பேருந்தில் சில இருக்கைகள் மட்டுமே பெண்களுக்காம். அந்த ஊர் பெண்கள் ஆண்களை எழுப்பிவிட்டு உட்காரக்கூட தெரியாத அப்பாவிகளாக இருக்கின்றனர். அங்கேயும் கண்டக்டர்கள் கோபமுகம் காட்டவே செய்கிறார்கள்.

நாமக்கல் கோட்டை - மலை உச்சியில் சரசம் செய்யும் ஜோடியை யாரும் ஜூம் செய்து பார்க்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
சேலத்திலிருந்து நாமக்கல் வரை ஒருமணிநேர பேருந்து பயணம். செல்வின் குமுதம் ரிப்போர்ட்டர் வாங்கி தானைத்தலைவி சோனாவின் வாழ்க்கை வரலாற்றுக் காவியத்தை படித்தபடி வந்தார். நாமக்கல் – "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது" என்று பாடிய கவிஞரின் ஊர். சென்னை வெயிலுக்கு சற்றும் சளைக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை கொஞ்சம் தாமதமாக, நாமக்கல் கோட்டைக்கு சென்றோம். உச்சி வெயிலில் பல ஜோடிகள் ஆன்மிக ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ம்ம்ம் பரவாயில்லை பீப்பிள்... நாமக்கல் டெவலப் ஆகியிருக்கு அப்படின்னு நினைச்ச நாங்க அடுத்த சீன்லையே ஏமாந்தோம்.

கட் பண்ணா நாமக்கல் டாஸ்மாக். எல்லா ஊர்லயும் டாஸ்மாக் மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கு. ரொம்ப சீரியஸாக ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மழை டாஸ்மாக் கூரையையும் தாண்டி பொழிந்தது. அங்கே இங்கே என்று மழைநீர் ஒழுகாத ஒரு ஓரத்தில் ஒண்டியபடி கொஞ்சம் ப்ளாக் வோட்காவை உள்ளே இறக்கினோம். இப்போது மழை குறைந்திருந்தது. மதிய உணவிற்கு தயாரானோம். நாமக்கல் பஸ் ஸ்டான்ட் அருகே உள்ள புஷ்பா ஓட்டலில் கேபிள் சங்கர் சாப்பிட்டால் ஒரு சாப்பாட்டுக்கடை பதிவு ரெடி. அதிலும் அந்த எண்ணையில் பொறித்த கோழி டிவைன். 

வெண்ணை போல் ஒருவன் - கோட்டையிலிருந்து நாமக்கல் நகரம்
மாலையில் சரோஜா படத்தில் வரும் கேரவன் ரேஞ்சில் எங்களுக்காக ஒரு மாருதி ஆம்னி தயாராகி வந்தது. நானும் தோஸ்த் படா தோஸ்த்களும் கொல்லிமலை நோக்கி புறப்பட்டோம். மலையில் ஏற ஆரம்பிக்கும்போதே கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. மலைகிராமமான செம்மேட்டில் இரவு உணவு பார்சல்களை வாங்குவதற்காக தரையிரங்கினோம். அந்த பரோட்டா கடையில் இருந்த ஆண்ட்டியைப் பற்றி தனி அத்தியாயமே எழுதலாம். பார்சல் தயாராகும் நேரத்தை வீணடிக்க வேண்டாமெனக் கருதி செவ்வனே மீண்டும் சுருதி ஏற்றினோம். இரவு தங்குவதற்கான இடம் தேடும் படலம் தொடங்கியது. ஒரு அயர்ச்சியான தேடலுக்குப் பிறகு மலைவீடு என்ற லாட்ஜை கண்டுபிடித்தோம். 

நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம். சனிக்கிழமை இரவு வேற சும்மா விடுவோமா...? இந்தமுறை கிரேக்க கடவுள் மார்பியஸை நம்பியதால் நான் ஆத்திகனானேன். டிவியில் எம்.ஆர்.ராதா நடித்த திரைப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, மார்பியஸ் மூன்று லார்ஜ்களை தாண்டியது. நான்காவது லார்ஜை பிளாஸ்டிக் கிளாஸில் ஊற்றிய நிமிடம் வரை நினைவில் இருக்கிறது. அதற்குப்பின் என்ன நடந்ததென்பது கனவுகளின் கடவுளான மார்பியஸுக்கே வெளிச்சம்...!

இப்படி எதாவது எழுதி வெச்ச 100 படம் ஓடுறமாதிரி இந்த கதை போகும் போல ,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்க விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.