Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

மாணவர்களுக்கு விருப்பமில்லாத பாடங்களை பற்றி மூளைச் சலவை கூடாது,,,,,,,,,,,,,,,,,,காமெடி


மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், சமூக அறிவியல், அடிப்படை அறிவியல் மற்றும் இலக்கியப் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
Ranganath
Ranganath
இவ்வாறு விருப்பமில்லாத படிப்புகளை படித்து வெளியேறும் மாணவர்கள், வேலையில் சேர தகுதியற்றவர்களாக உள்ளனர். அடிப்படை அறிவியல் படிப்புகளை பணம் கொழிக்கும், ஈர்ப்புள்ள படிப்புகளாக மாற்றுவதன் மூலம், உள்நாட்டிலேயே நடைபெறும் இந்த மூளைச் சலவை முறையை தடுக்கலாம் என, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) இயக்குனர் ரங்கநாத் பேசினார்.
கோவை பாரதியார் பல்கலையில் நடந்த, 27வது பட்டமளிப்பு விழாவில், ரங்கநாத் பேசியதாவது:
இந்தியாவில், 30 ஆயிரம் கல்லூரிகளும், 600 பல்கலைகளும் உள்ளன. மத்திய பல்கலைகள், மாநில பல்கலைகள், தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எம்.எஸ்.கள் போன்ற கல்வி நிறுவனங்களால், இன்று உயர்கல்வி குழம்பிய நிலையில் காணப்படுகிறது.
அன்னிய பல்கலைகளும் நுழைந்து விட்டால், குழப்பம் மேலும் அதிகரித்து விடும். போதுமான ஆசிரியர்கள், ஊழியர்கள், உள்கட்டமைப்பு இல்லாமல், புதிய பல்கலைகள் உருவாக்கப்படுகின்றன. இப்பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள், கடும் சவால்களை சந்திக்க நேரிடும். கடுமையான தரக் கட்டுப்பாடுகளை விதித்து, ஆரம்பத்திலேயே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது முக்கியம்.
பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகுவதால், பல்கலைகளின் செயல்பாடுகள் நெரிக்கப்படுகின்றன.
ஆகவே, கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் முறையை உடனடியாக சீரமைத்தாக வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையிலும் பிரச்னை உள்ளது.
நன்கு படிக்கும் திறமையான மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளில் எளிதில் இடம் கிடைத்து விடுகிறது.
இப்படிப்புகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள், சமூக அறிவியல், அடிப்படை அறிவியல் மற்றும் இலக்கியப் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இம்மாணவர்கள் படிக்கும் பல்கலைகளில், தரம் மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. விருப்பமில்லாத படிப்புகளை, இப்பல்கலைகளில் படித்து வெளியேறும் மாணவர்கள், வேலையில் சேர தகுதியற்றவர்களாக உள்ளனர்.
அடிப்படை அறிவியல் படிப்புகளை, பணம் கொழிக்கும், ஈர்ப்புள்ள படிப்புகளாக மாற்றுவதன் மூலம், உள்நாட்டிலேயே நடைபெறும் இந்த, மூளைச் சலவை முறையை தடுக்கலாம்.
இவ்வாறு ரங்கநாத் பேசினார்.
தமிழக கவர்னர் ரோசய்யா, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் திருமால்வளவன் உட்பட பலர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உங்க சிஸ்டம் அம மாத்துங்க எல்லாம் படிப்பாங்க  உங்க விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.