Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, January 23, 2012

சமூக வலைப்பின்னல்களி(Social Networks)லிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது?????????????????






# Facebook, Orkut, Habbo, Myspace, Window Livespaces, Friendster, hi5, twitter, Vkon Takte . . .போன்ற சமூக வலைப்பின்னல்களில் நம்மைப் பதிவு செய்துகொள்ளும்போது, இரண்டு விதமாக அவற்றை நாம் அணுகலாம்;நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் என்றும், தொழில் ரீதியான செயல்பாடுகள் என்றும் இரண்டு முகங்கள் இருக்குமல்லவா?

அதனடிப்படையில் Professional மற்றும் Personnal சமாச்சாரங்களைத் தனியாகப்பிரித்துவிடுங்கள்.ஒவ்வொருவரும் தொழில்சார்ந்த விஷயங்களுக்காக ஒரு அக்கவுண்டையும்,விருப்பம் சார்ந்த விஷயங்களுக்காக ஒரு அக்கவுண்டையும் பயன்படுத்துவது நல்லது.இதையே ஆங்கிலத்தில் Professional & Personnal என்று சொல்லலாம்.
இப்படி நாம் அனுமதி கொடுக்கும்போது,நம் நண்பர்கள் மட்டும் பார்க்கும்படியோ அல்லது நம் நண்பர்களோடு நண்பர்கள் பார்க்கும்படியோ அல்லது உலகம் முழுவதும் பார்க்கும்படியோ அனுமதி கொடுத்துக்கொள்ளலாம்.
#  எப்படி இருந்தாலும் மிகவும் பர்சனலாக விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.இன்று சிறியதாக இருக்கும் நட்பு வட்டம் நாளை பெரிதாக விரிவடையும்போது பிரச்னைகள் வரலாம்.
# தெரியாத நபர்களை நம் நட்பு  வட்டத்தில் இணைத்துக் கொள்வது ரோட்டில் போகும் ஓணானை நாமே எடுத்து நம் சட்டைக்குள் போட்டுக்கொள்வதைப் போன்ற செயலாகும்.எனவே,தவிர்த்துவிடுவது நல்லது;அவசியமும் கூட!!!

# இண்டர்நெட்டில் நாம் செய்கிற பிழைகளை திருத்திக் கொள்ள வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.ஏனென்றால்,நாம் வெப்சைட்டுகளில் பதிவாக்குகின்ற தகவல்கள்/புகைப்படங்கள்/வீடியோக்காட்சிகள் போன்றவற்றை,நாம் பதிவு செய்த அடுத்த நொடியே நமக்கே தெரியாமல் பிரதி எடுத்துக்கொண்டே இருக்கும் வெப்சைட்டுகள்  இருக்கின்றன.நாம் அதைக் கண்டுபிடித்து நம் பதிவில் இருந்து நீக்குவதற்கு முன்,ஏற்கனவே பிரதி எடுக்கப்பட்ட வெப்சைட்டுகள் மூலம் பரவ ஆரம்பித்திருக்கும்.எனவே,இண்டர்நெட்டில் பதிவு செய்யும் முன் ஒரு முறைக்கு 100 முறை சிந்தித்து send அல்லது submit பட்டனை அழுத்துங்கள்.

# பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை பத்திரப்படுத்துங்கள்.நம் பெயரையோ/வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரையோ கடவுச்சொல்லாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்க விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.